Just In
- 1 hr ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 2 hrs ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 2 hrs ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 3 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- Education
ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO-வில் பணியாற்றலாம் வாங்க!
- News
இறக்கும் முன்னர் கொரோனா விழிப்புணர்வு.. இறந்த பின் விவேக் மக்களுக்கு சொல்லும் அறிவுரை "இதுதான்!"
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Lifestyle
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சேல்ஸ் சும்மா தூள் கௌப்புது... விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்த ரெனால்ட்...
ரெனால்ட் நிறுவனம் விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரெனால்ட் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் இந்திய சந்தையில் 12,356 கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் ரெனால்ட் 7வது இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், ரெனால்ட் நிறுவனம் விற்பனையில் 278 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஏனெனில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 3,269 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ரெனால்ட் நிறுவனத்தின் சந்தை பங்கு வெறும் 2.3 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஆனால் நடப்பாண்டு மார்ச் மாதம் ரெனால்ட் நிறுவனத்தின் சந்தை பங்கு 3.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த வரிசையில் நடப்பாண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிட்டாலும், ரெனால்ட் நிறுவனம் விற்பனையில் வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் 11,043 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் அதன்பின் வந்த மார்ச் மாதம் விற்பனையில் 12 சதவீத வளர்ச்சியை ரெனால்ட் பதிவு செய்துள்ளது.

தற்போதைய நிலையில் ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் க்விட், ட்ரைபர், டஸ்டர் மற்றும் கைகர் என மொத்தம் 4 கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், கைகர் சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். தற்போது ரெனால்ட் நிறுவனத்தின் விற்பனை உயர்ந்துள்ளதற்கு கைகர் முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு ரெனால்ட் நிறுவனம் செய்துள்ள மிக சவாலான விலை நிர்ணயம் மிக முக்கியமான காரணமாக உள்ளது. ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரில் மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

அவை 1.0 லிட்டர் மூன்று-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும். அத்துடன் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரில் பல்வேறு வசதிகளும் வழங்கப்படுகின்றன. இதில், 7 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், மூன்று ட்ரைவிங் மோடுகள் மற்றும் டைமண்ட்-கட் அலாய் வீல்கள் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

இதுதவிர வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியுடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர், எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லைட்கள், ஆம்பியண்ட் லைட்டிங், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளையும் ரெனால்ட் கைகர் பெற்றுள்ளது.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன் நிஸான் மேக்னைட் உடனும், ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி போட்டியிட்டு வருகிறது.