Just In
- 4 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரெனால்ட் கார்களின் விற்பனை சரிவு... தூக்கி நிறுத்த தயாராகும் புதிய கிகர்! என்ன விலையில் வரப்போகிறது தெரியுமா?
இந்தியாவில் ரெனால்ட் நிறுவன கார்களின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2020ம் ஆண்டு டிசம்பர் இந்தியாவில் பெரும்பாலான கார் நிறுவனங்கள் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. ஆனால் ரெனால்ட் நிறுவன கார்களின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. வருட இறுதியில் மந்தமான விற்பனை காரணமாக இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் வீழ்ச்சியை சந்தித்திருக்கலாம் என கருதப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் ரெனால்ட் நிறுவனம் 9,800 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 18.09 சதவீத வீழ்ச்சியாகும். ஏனெனில் ரெனால்ட் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11,964 கார்களை விற்பனை செய்திருந்தது. அதே சமயம் 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிட்டால் இது 3.74 சதவீத வீழ்ச்சியாகும்.

ஏனெனில் 2020ம் ஆண்டு நவம்பரில் ரெனால்ட் நிறுவனம் 10,181 கார்களை விற்பனை செய்திருந்தது. விற்பனையில் சரிவை சந்தித்திருந்தாலும் கூட, கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் ரெனால்ட் நிறுவனம் 6வது இடத்தை பிடித்துள்ளது. இந்த இடத்தை ரெனால்ட் நிறுவனம் உறுதியாக பிடித்து கொண்டது என்றும் கூட சொல்லலாம்.

ஏனெனில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதமும் ரெனால்ட் நிறுவனம் இதே இடத்தில்தான் இருந்தது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரெனால்ட் நிறுவனம் 5வது இடத்தில் இருந்தது. எனவே கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிட்டால், இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் ரெனால்ட் நிறுவனம் ஒரு இடம் பின்தங்கியுள்ளது.

ரெனால்ட் நிறுவனம் தற்போதைய நிலையில் க்விட், ட்ரைபர் மற்றும் டஸ்டர் உள்ளிட்ட கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. ஆனால் ரெனால்ட் நிறுவனம் அடுத்ததாக விற்பனைக்கு கொண்டு வரவுள்ள கிகர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரை பெரிதும் நம்பியுள்ளது. இந்த காம்பேக்ட் எஸ்யூவி ரெனால்ட் நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தியாவில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். கடந்த 2020ம் ஆண்டில் கியா சொனெட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் நிஸான் மேக்னைட் உள்ளிட்ட புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த வரிசையில் ரெனால்ட் கிகர் நடப்பாண்டில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு உள்ள வரவேற்பை கிகர் பயன்படுத்தி கொள்ளும் என ரெனால்ட் நிறுவனம் நம்புகிறது. மிகவும் சவாலான விலையில் எதிர்பார்க்கப்படுவதால், ரெனால்ட் கிகர் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

அதாவது இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 6 லட்ச ரூபாய் என்ற அளவிலும், டாப் வேரியண்ட்டின் விலை 10 லட்ச ரூபாய் என்ற அளவிலும் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், இந்த செக்மெண்ட்டில் உள்ள மற்ற ஒரு சில கார்களை விட, ரெனால்ட் கிகர் விலை குறைவானதாக இருக்கும்.