புதிய ரெனால்ட் கிகர் எஸ்யூவியை வாங்கவுள்ளீர்களா? அப்போ இந்த காருக்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க

சமீபத்திய அறிமுகமான ரெனால்ட் கிகருக்கு வழங்கப்படுகின்ற ஆக்ஸஸரீகள் குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய ரெனால்ட் கிகர் எஸ்யூவியை வாங்கவுள்ளீர்களா? அப்போ இந்த காருக்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க

இந்திய சந்தைக்கான ரெனால்ட் கிகர் கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட நிலையில் விற்பனைக்கு இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் சமீபத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேநேரம் கிகரின் தோற்றத்தை மெருக்கேற்றும் வகையில் சில ஆக்ஸஸரீகளையும் ரெனால்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வழங்குகிறது. இதில் பெரும்பான்மையானவை க்ரோம்-ஆக தான் உள்ளன.

புதிய ரெனால்ட் கிகர் எஸ்யூவியை வாங்கவுள்ளீர்களா? அப்போ இந்த காருக்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க

வெளிப்புற ஆக்ஸஸரீகள்

 • முன்பக்க பம்பர் க்ரோம்- ஸ்ட்ரிப் வடிவில் இந்த க்ரோம் காரின் முன் பம்பரின் வடிவத்தை கூடுதல் அழகூட்டும் வகையில் ஹெட்லேம்பிற்கு கீழே வழங்கப்படுகிறது.
 • க்ரில் க்ரோம் கார்னிஷ்- இதுவும் க்ரோம் ஸ்ட்ரிப்-ஆக க்ரில் பகுதிக்கு கீழே வழங்கப்படுகிறது.
புதிய ரெனால்ட் கிகர் எஸ்யூவியை வாங்கவுள்ளீர்களா? அப்போ இந்த காருக்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க
 • க்ரில் க்ரோம் லைனர்- பொனெட் லைனிற்கு இணையாக க்ரில்லின் மேற்புறத்தில் க்ரோம் ஸ்ட்ரிப்-ஆக இருக்கும்.
 • ஜன்னல் ஃப்ரேம் கிட்- இது ஜன்னலின் அடி ஃப்ரேமில், பின்புறம் பார்க்க உதவும் கண்ணாடியில் இருந்து பின்பக்க ஜன்னல் முடியும்வரை இரு துண்டுகளாக பொருத்தப்படுகிறது.
புதிய ரெனால்ட் கிகர் எஸ்யூவியை வாங்கவுள்ளீர்களா? அப்போ இந்த காருக்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க
 • க்ரோம் உடன் பக்கவாட்டு க்ளாடிங் - ரெனால்ட் நிறுவனம் கிகர் காரின் பக்கவாட்டின் அடிப்பகுதிக்கு க்ரோம் உடன் க்ளாடிங் பாதுகாப்பானை கூடுதல் தேர்வாக வழங்குகிறது.
 • ரியர்வியூ கண்ணாடிக்கான க்ரோம்- இது க்ரோம் ஸ்ட்ரிப்பாக பின்புறத்தை பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடிகளில் டர்ன் இண்டிகேட்டர்களுக்கு மேற்புறத்தில் பொருத்தப்படுகிறது.
புதிய ரெனால்ட் கிகர் எஸ்யூவியை வாங்கவுள்ளீர்களா? அப்போ இந்த காருக்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க
 • கதவு கைப்பிடிகளின் மேல் மற்றும் கீழ்பகுதியில் கருப்பு நிற பிளாஸ்டிக் வெறுமனே அழகிற்காக மட்டுமே ஆக்ஸஸரியாக வழங்கப்படுகிறது.
 • அலாய் சக்கர உள்ளீடுகள்- கிகரில் வழங்கப்படும் 16 இன்ச் சக்கரங்களில் காரில் உடல் நிறத்திற்கு ஏற்ப உள்ளிடுகளை ஆக்ஸஸரீயாக பெறலாம்.
 • சகதி பாதுகாப்பான்- இதனை டயர்களின் மூலம் தெறிக்கவிடப்படும் மண் மற்றும் சகதியில் இருந்து காரின் அடிப்பகுதியை பாதுகாக்க வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.
புதிய ரெனால்ட் கிகர் எஸ்யூவியை வாங்கவுள்ளீர்களா? அப்போ இந்த காருக்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க
 • டெயில்கேட் க்ரோம்- இது பின் கதவின் அடிப்பகுதியில் வழங்கப்படும் க்ரோம் ஆகும். பின் பம்பருக்கான கூடுதல் க்ரோம்-ஐ பொருத்தாமல் இது மட்டுமே பொருத்தினால் அவ்வளவு நன்றாக இருக்காது என்பது எங்களது கருத்து.
 • பின்பக்க பம்பர் க்ரோம்- இது டெயில்கேட் க்ரோமிற்கு இணையாக பின்பக்க ஒளி எதிரொலிப்பான்களை சுற்றி வழங்கப்படுகிறது.
புதிய ரெனால்ட் கிகர் எஸ்யூவியை வாங்கவுள்ளீர்களா? அப்போ இந்த காருக்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க

உட்புற ஆக்ஸஸரீகள்

 • ஆர்ம்ரெஸ்ட் கன்சோல் அமைப்பு- கிகரில் பொருட்களை வைப்பதற்கான பகுதி உடன் மைய ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்படுகிறது. இந்த பகுதியை பொருட்களுக்கு ஏற்ப தனித்தனியாக பிரித்து வழங்கும் அமைப்பை கூடுதல் ஆக்ஸஸரீயாக பெறலாம்.
புதிய ரெனால்ட் கிகர் எஸ்யூவியை வாங்கவுள்ளீர்களா? அப்போ இந்த காருக்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க
 • ட்ரங்க் விளக்கு- இது மிகவும் தேவையான ஆக்ஸஸரீ ஆகும். ஏனெனில் பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதியில் இருந்து இரவு நேரங்களில் பொருட்களை வைக்கவும், எடுக்கவும் உதவும் வகையில் அந்த பகுதியில் இடது பகுதியில் இந்த விளக்கு பொருத்தப்படும்.
 • முப்பரிமாண தரை பாய்கள்- கேபினில் ரெனால்ட்டின் லோகோ டிசைன் உடன் இந்த பாய்கள் வழங்கப்படுகின்றன.
புதிய ரெனால்ட் கிகர் எஸ்யூவியை வாங்கவுள்ளீர்களா? அப்போ இந்த காருக்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க

இவற்றுடன் முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் காற்று சுத்திகரிப்பான் போன்ற இதர கூடுதல் ஆக்ஸஸரீகளும் ரெனால்ட் கிகரில் வழங்கப்படுகின்றன. ஆனால் இவற்றை பற்றிய தகவல்களை ரெனால்ட் நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை. ரெனால் கிகரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.5.45 லட்சத்தில் இருந்து ரூ.9.55 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Kiger Official Accessories Explained
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X