Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 9 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சென்னையில் மாஸாக தொடங்கியது ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் மாஸ் புரொடெக்ஸன்!
சென்னையில் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரெனால்ட் நிறுவனத்தின் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரான கைகர், வரும் மார்ச் மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக இந்தியாவில் தற்போது ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் உற்பத்தி முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை ஒரகடம் பகுதியில் உள்ள ரெனால்ட்-நிஸான் ஆலையில் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் உற்பத்தி நடைபெறுகிறது. ரெனால்ட் நிறுவனத்தின் மற்ற பிரபலமான கார்களான க்விட், ட்ரைபர் மற்றும் நிஸான் நிறுவனத்தின் மேக்னைட் ஆகியவை இந்த ஆலையில்தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. அத்துடன் ரெனால்ட் நிறுவனத்தின் டீலர்களுக்கு கார்களை அனுப்பும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து விரைவில் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரில், 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. இதுதவிர இந்த காரின் விலை குறைந்த வேரியண்ட்களில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தேர்வு கொடுக்கப்படவுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஎஸ் பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர பல்வேறு வசதிகளும் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவியில் வழங்கப்பட்டிருக்கும். இதில், வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்பிளே, க்ளைமேட் கண்ட்ரோல், 8 ஸ்பீக்கர் ஆடியோ, ஆம்பியண்ட் லைட்டிங், பிஎம் 2.5 ஏர் ஃபில்டர் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

இதுதவிர ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரில், முழு எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப்கள் வழங்கப்படவுள்ளன. பாதுகாப்பை பொறுத்தவரை, ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் போன்ற வசதிகள் இடம்பெறவுள்ளன. மிகவும் சவால் நிறைந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ரெனால்ட் கைகர் நிலைநிறுத்தப்படவுள்ளது.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய கார்களுக்கு ரெனால்ட் கைகர் காம்பேட் எஸ்யூவி கார் விற்பனையில் கடுமையான சவாலை வழங்கவுள்ளது.

இதில், நிஸான் மேக்னைட் கடந்த டிசம்பர் மாதம்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சவாலான விலை நிர்ணயம் காரணமாக நிஸான் மேக்னைட் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதை பின்பற்றி ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரும் மிகவும் சவாலான விலையில் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.