நாமலும் வாங்கலாம் போலயே... மிகவும் விலை குறைவான காரை மேரி கோமுக்கு பரிசளித்த ரெனால்ட்... எவ்ளோனு தெரியுமா?

மிகவும் விலை குறைவான காரை குத்து சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு, ரெனால்ட் நிறுவனம் பரிசளித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நாமலும் வாங்கலாம் போலயே... மிகவும் விலை குறைவான காரை மேரி கோமுக்கு பரிசளித்த ரெனால்ட்... எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவின் முன்னணி குத்து சண்டை வீராங்கனையான மேரி கோமுக்கு (Mary Kom), ரெனால்ட் இந்தியா நிறுவனம் கைகர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரை பரிசளித்துள்ளது. 6 முறை உலக சாம்பியன் என்ற பெருமைக்கு மேரி கோம் சொந்தக்காரர் ஆவார். அத்துடன் சமீபத்தில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், மேரி கோம்தான் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்தி வந்தார்.

நாமலும் வாங்கலாம் போலயே... மிகவும் விலை குறைவான காரை மேரி கோமுக்கு பரிசளித்த ரெனால்ட்... எவ்ளோனு தெரியுமா?

ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான Venkatram Mamillapalle, ரெனால்ட் கைகர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் சாவியை, மேரி கோமிடம் ஒப்படைத்தார். ஆனால் ரெனால்ட் இந்தியா நிறுவனம் விளையாட்டு வீரர்களுக்கு கைகர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரை பரிசளிப்பது இது முதல் முறை கிடையாது.

நாமலும் வாங்கலாம் போலயே... மிகவும் விலை குறைவான காரை மேரி கோமுக்கு பரிசளித்த ரெனால்ட்... எவ்ளோனு தெரியுமா?

இதற்கு முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானு, லாவ்லினா போர்ஹோஹெயின், ரவி குமார் தாஹியா மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோருக்கும் ரெனால்ட் இந்தியா நிறுவனம் கைகர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரை பரிசாக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாமலும் வாங்கலாம் போலயே... மிகவும் விலை குறைவான காரை மேரி கோமுக்கு பரிசளித்த ரெனால்ட்... எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்து வரும் அமோக வரவேற்புதான் காரணம். எனவே நிறைய நிறுவனங்கள் போட்டி போட்டி கொண்டு, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் கார்களை அறிமுகம் செய்து வருகின்றன.

நாமலும் வாங்கலாம் போலயே... மிகவும் விலை குறைவான காரை மேரி கோமுக்கு பரிசளித்த ரெனால்ட்... எவ்ளோனு தெரியுமா?

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் கிடைக்கும் விலை குறைவான சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்றாக ரெனால்ட் கைகர் உள்ளது. இதனால் இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனம் அதிகமாக விற்பனை செய்யும் கார்களில் ஒன்றாக கைகர் இருக்கிறது. இதற்கு இந்த காரின் மிக சவாலான விலை நிர்ணயமே முக்கியமான காரணமாக உள்ளது.

நாமலும் வாங்கலாம் போலயே... மிகவும் விலை குறைவான காரை மேரி கோமுக்கு பரிசளித்த ரெனால்ட்... எவ்ளோனு தெரியுமா?

குறைவான விலையில் ஒரு காம்பேக்ட் எஸ்யூவி காரை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ரெனால்ட் கைகர் மிகச்சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. ஒரு ஹேட்ச்பேக் அல்லது பிரீமியம் ஹேட்ச்பேக் காரை போல், ரெனால்ட் கைகரின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தோற்றத்தில் இது காம்பேக்ட் எஸ்யூவியாக உள்ளது.

நாமலும் வாங்கலாம் போலயே... மிகவும் விலை குறைவான காரை மேரி கோமுக்கு பரிசளித்த ரெனால்ட்... எவ்ளோனு தெரியுமா?

எனினும் ரெனால்ட் கைகர் கார் உருவத்தில் சற்று சிறியது. ஆனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணம் செய்வதற்கும், நெருக்கடியான இடங்களில் பார்க்கிங் செய்வதற்கும் இந்த சிறிய உருவம் உதவி செய்கிறது. ரெனால்ட் கைகர் காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை வெறும் 5.64 லட்ச ரூபாய் மட்டுமே.

நாமலும் வாங்கலாம் போலயே... மிகவும் விலை குறைவான காரை மேரி கோமுக்கு பரிசளித்த ரெனால்ட்... எவ்ளோனு தெரியுமா?

அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 10.09 லட்ச ரூபாய் ஆகும். இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்திய சந்தையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், டொயோட்டா அர்பன் க்ரூஸர், நிஸான் மேக்னைட், ஹூண்டாய் வெனியூ, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட கார்களுடன் ரெனால்ட் கைகர் போட்டியிட்டு வருகிறது.

நாமலும் வாங்கலாம் போலயே... மிகவும் விலை குறைவான காரை மேரி கோமுக்கு பரிசளித்த ரெனால்ட்... எவ்ளோனு தெரியுமா?

ரெனால்ட் கைகர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரில் மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அவை இரண்டுமே பெட்ரோல் இன்ஜின்கள்தான். இந்த காரில் டீசல் இன்ஜின் தேர்வு இல்லை. அத்துடன் இந்த காரில் வழங்கப்படும் இரண்டு இன்ஜின்களுமே 1.0 லிட்டர், மூன்று-சிலிண்டர்கள் யூனிட்தான்.

நாமலும் வாங்கலாம் போலயே... மிகவும் விலை குறைவான காரை மேரி கோமுக்கு பரிசளித்த ரெனால்ட்... எவ்ளோனு தெரியுமா?

ஆனால் இதில் ஒன்று நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் ஆகும். மற்றொன்று டர்போசார்ஜ்டு இன்ஜின். இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஎஸ் பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் டர்போசார்ஜ்டு இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியது.

நாமலும் வாங்கலாம் போலயே... மிகவும் விலை குறைவான காரை மேரி கோமுக்கு பரிசளித்த ரெனால்ட்... எவ்ளோனு தெரியுமா?

ரெனால்ட் கைகர் காரின் விலை குறைவாக இருந்தாலும், அதில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ரெனால்ட் கைகர் காரை போல், மிகவும் குறைவான விலையில் களமிறக்கப்பட்ட நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Renault kiger compact suv presented to boxer mary kom check details here
Story first published: Monday, August 30, 2021, 17:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X