Just In
- 13 min ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 58 min ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 2 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 2 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- News
அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்கிறார் ஸ்டாலின்... சீதாராம் யெச்சூரி பெருமிதம்..!
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Lifestyle
உங்க திருமண வாழ்க்கை சூப்பராக இருக்கிறது என்பதை உணர்த்தும் உடல் மொழிகள் இதுதானாம்...!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மிக மிக மலிவு விலையில் வருகிறது ரெனால்ட் கைகர்... இந்த காருக்காக எத்தனை நாள் வேணும்னாலும் காத்திருக்கலாம்!!
ரெனால்ட் நிறுவனத்தின் கைகர் எஸ்யூவி கார் மிக மிக மலிவு விலையில் விற்பனைக்கு வரவிருப்பது ஆச்சரியமளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பிரெஞ்சு நாட்டு வாகன உற்பத்தி நிறுவனமான ரெனால்ட், அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கைகர் எஸ்யூவி காரை மிக சமீபத்தில் உலகளவில் வெளியீடு செய்தது. இந்த வெளியீட்டைத் தொடர்ந்து அனைத்து வாகன ஆர்வலர்களின் கவனமும் இக்காரின் விற்பனைக்கான அறிமுகத்தை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றது.

வருகின்ற மார்ச் மாத்திலேயே இக்காரை அறிமுகம் செய்ய ரெனால்ட் திட்டமிட்டிருக்கின்றது. இது, தற்போது விற்பனையில் இருக்கும் நிஸான் மேக்னைட் காரைக் காட்டிலும் மிக மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணத்தினாலயே பலர் இக்காரின் அறிமுகத்தை நோக்கி காக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

நிஸான் மேக்னைட் காரின் ஆரம்ப நிலை மாடல் ரூ. 5.49 லட்சம் என்ற விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இதைவிட குறைந்த விலையிலேயே ரெனால்ட் கைகர் கார் விற்பனைக்கு வரும் என இணையத்தின் வாயிலாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆட்டோ கார் இந்தியா ஆங்கில செய்தி தளம் ஓர் தகவலை வெளியிட்டிருக்கின்றது.

"மார்ச் மாதம் விற்பனைக்கான அறிமுகத்தைப் பெறவிருக்கும் ரெனால்ட் கைகர் கார் மிக மலிவு விலையில் விற்பனைக்கு வரவிருக்கின்றது. இது நிஸான் மேக்னைட் காரை விட மிக குறைந்ததாக இருக்கும்" என கூறியிருக்கின்றது.

எஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வு:
கைகர் கார் இரு விதமான பெட்ரோல் எஞ்ஜின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஒன்று, 1.0 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் தரத்திலும், மற்றொன்று, 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்ஜினாகவும் கிடைக்க இருக்கின்றது. இதில் சுவாரஷ்ய என்னவென்றால் இதே தரத்தில்தான் நிஸான் மேக்னைட் காரும் தற்போது விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

கியர்பாக்ஸைப் பொருத்தவரை, மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர்பாக்ஸ் தேர்விலும் இக்கார் கிடைக்க இருக்கின்றது. இதில், கைகர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் வேரியண்ட் மட்டும் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

சிறப்பம்சங்கள்:
ரெனால்ட் கைகர் காரின் உயர்நிலை வேரியண்ட் பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற இருக்கின்றது. ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்ட 8.0 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் கமெண்ட், 4 ஸ்பீக்கர்கள், 4 ட்வீடர் அர்கமிஸ் ஆடியோ சிஸ்டம், சாவியில்லா நுழைவு வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஆம்பிசியன்ட் மின் விளக்கு எக்கசக்க வசதிகள் இதில் இடம்பெற இருக்கின்றன.

போட்டியாளர்கள்:
ரெனால்ட் கைகர் மிக குறைவான விலையில் விற்பனைக்கு வரவிருப்பதால் எஸ்யூவி கார்கள் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் பல்வேறு கார்களுக்கு மிக கடுமையான போட்டியை வழங்க இருக்கின்றது. அந்தவகையில், ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈகோஸ்போர்ட், மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகிய கார்களுக்கே கைகர் போட்டியாக அமைய இருக்கின்றது.