அட்டகாசமான ஸ்டைலில் சில ஷோரூம்களுக்கு வந்தது புதிய ரெனால்ட் கிகர்!! அறிமுகம் மிக விரைவில்...

அறிமுகத்திற்கு முன்னதாக ரெனால்ட் கிகர் கார் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

அட்டகாசமான ஸ்டைலில் சில ஷோரூம்களுக்கு வந்தது புதிய ரெனால்ட் கிகர்!! அறிமுகம் மிக விரைவில்...

ரெனால்ட் இந்தியா நிறுவனம் கிகர் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை பற்றிய விபரங்களையும் படத்தையும் கடந்த வாரத்தில் வெளியிட்டது. அதற்கு முன்னதாக இதன் கான்செப்ட் வெர்சன் சரியாக இரு மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

அட்டகாசமான ஸ்டைலில் சில ஷோரூம்களுக்கு வந்தது புதிய ரெனால்ட் கிகர்!! அறிமுகம் மிக விரைவில்...

இந்த நிலையில் தற்போது இந்திய அறிமுகத்திற்கு முன்னதாக சில கிகர் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதுகுறித்து கார் கிங் என்ற யூடியுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ இதோ உங்களுக்காக...

இந்த வீடியோவில் நமக்கு காட்சி தருவது கிகரின் டாப் ஆர்எக்ஸ்இசட் வேரியண்ட்டாகும். டாப் வேரியண்ட் என்பதால் பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட், கிகரில் வழங்க திட்டமிட்ட அம்சங்கள் அனைத்தும் இந்த காரில் இருக்கும்.

அட்டகாசமான ஸ்டைலில் சில ஷோரூம்களுக்கு வந்தது புதிய ரெனால்ட் கிகர்!! அறிமுகம் மிக விரைவில்...

காரின் முன்பக்கத்தில் க்ரோம் உள்ளீடுகளுடன் 2-ஸ்லாட் க்ரில், நேர்த்தியான எல்இடி டிஆர்எல்கள் மற்றும் 3-அடுக்குகளாக எல்இடி ஹெட்லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்கவாட்டில் சக்கரங்களுக்கு மேலே அகலமான வளைவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அட்டகாசமான ஸ்டைலில் சில ஷோரூம்களுக்கு வந்தது புதிய ரெனால்ட் கிகர்!! அறிமுகம் மிக விரைவில்...

இதுமட்டுமின்றி கருப்பு நிறத்தில் க்ளாடிங், மேற்கூரை தண்டவாளங்கள் மற்றும் 16 இன்ச்சில் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவற்றையும் இந்த கிகர் காரின் பக்கவாட்டில் பார்க்க முடிகிறது.

அட்டகாசமான ஸ்டைலில் சில ஷோரூம்களுக்கு வந்தது புதிய ரெனால்ட் கிகர்!! அறிமுகம் மிக விரைவில்...

காரின் பின்பக்கத்தில் C-வடிவில் எல்இடி டெயில்லைட்கள், உயரத்தில் பொருத்தப்பட்ட நிறுத்து விளக்குடன் ஸ்பாய்லர், வாஷர் & வைபர் மற்றும் சில்வர் நிற சறுக்கு தட்டு உடன் இரு-நிற பம்பர் முதலியவை வழங்கப்பட்டுள்ளன. உட்புறத்தை 2021 ரெனால்ட் கிகர் கருப்பு மற்றும் க்ரே நிறங்கள் கலந்த கலவையில் பெறவுள்ளது.

அட்டகாசமான ஸ்டைலில் சில ஷோரூம்களுக்கு வந்தது புதிய ரெனால்ட் கிகர்!! அறிமுகம் மிக விரைவில்...

இதன் கேபினில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், காற்று சுத்திகரிப்பான், 8-இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர் இல்லா சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளை எதிர்பார்க்கலாம்.

அட்டகாசமான ஸ்டைலில் சில ஷோரூம்களுக்கு வந்தது புதிய ரெனால்ட் கிகர்!! அறிமுகம் மிக விரைவில்...

இவை மட்டுமின்றி பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி துளைகள், இபிடியுடன் ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட்-பெல்ட் அணியாததை எச்சரிக்கும் வசதி மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான ஹேங்கர் போன்றவற்றையும் இந்த காரில் ரெனால்ட் நிறுவனம் வழங்கும்.

அட்டகாசமான ஸ்டைலில் சில ஷோரூம்களுக்கு வந்தது புதிய ரெனால்ட் கிகர்!! அறிமுகம் மிக விரைவில்...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு விரைவில் அறிமுகமாகவுள்ள ரெனால்ட் கிகரில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் நேச்சுரலி அஸ்பிரேட்டட் மற்றும் டர்போசார்ஜ்டு வடிவங்களில் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்படவுள்ள நேச்சுரலி அஸ்பிரேட்டட் வெர்சன் 71 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படவுள்ளது.

அட்டகாசமான ஸ்டைலில் சில ஷோரூம்களுக்கு வந்தது புதிய ரெனால்ட் கிகர்!! அறிமுகம் மிக விரைவில்...

அதுவே சிவிடி கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படும் டர்போசார்ஜ்டு வெர்சனின் மூலம் அதிகப்பட்சமாக 98 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனை பெற முடியும். புதிய ரெனால்ட் கிகருக்கு விற்பனையில் போட்டியினை தர நிஸான் மேக்னைட், கியா சொனெட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் தயாராக உள்ளன.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Re Renault Kiger arrives at dealerships ahead of launch in India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X