ரெனோ கைகர் காரின் விலை கணிசமாக அதிகரிப்பு... முழு விபரம் உள்ளே!

ரெனோ கைகர் காரின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த 1ந் தேதி முதல் இந்த புதிய விலை உயர்வு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 ரெனோ கைகர் காரின் விலை கணிசமாக அதிகரிப்பு... முழு விபரம் உள்ளே!

இந்தியாவில் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் உருவாக்கப்படும் சப்-காம்பேக்ட் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் மிக சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் மாடலாக ரெனோ கைகர் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. போட்டியாளர்களை விட மிக குறைவான விலை தேர்வு என்பதால், அதிக வரவேற்பையும் பெற்றுள்ளது.

 ரெனோ கைகர் காரின் விலை கணிசமாக அதிகரிப்பு... முழு விபரம் உள்ளே!

இந்த நிலையில், ரெனோ கைகர் எஸ்யூவியின் குறிப்பிட்ட வேரியண்ட்டுகளின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலானது மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களானது ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் ஆகிய 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதில், ஆர்எக்ஸ்இ பேஸ் வேரியண்ட்டின் விலை உயர்த்தப்படவில்லை.

 ரெனோ கைகர் காரின் விலை கணிசமாக அதிகரிப்பு... முழு விபரம் உள்ளே!

ஆனால், ஆர்எக்ஸ்எல் வேரியண்ட் விலை ரூ.18,000 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது, ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் ஆகிய வேரியண்ட்டுகளின் விலை முறையே ரூ.20,000 மற்றும் ரூ.14,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏஎம்டி மாடலின் ஆர்எக்ஸ்எல் வேரியண்ட் விலை ரூ.23,000 உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் ஆகியவற்றின் விலை முறையே ரூ.25,000 மற்றும் ரூ.19,000 உயர்த்தப்பட்டுள்ளது.

 ரெனோ கைகர் காரின் விலை கணிசமாக அதிகரிப்பு... முழு விபரம் உள்ளே!

டர்போ பெட்ரோல் மாடலின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் மாடலின் ஆர்எக்ஸ்எல் வேரியண்ட் விலை ரூ.28,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் ஆகியவற்றின் விலை முறையே ரூ.30,000 மற்றும் ரூ.24,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சிவிடி கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளின் விலை அதிகரிக்கப்படவில்லை.

 ரெனோ கைகர் காரின் விலை கணிசமாக அதிகரிப்பு... முழு விபரம் உள்ளே!

உற்பத்தி செலவீனம், மூலப்பொருட்களின் விலை, பண பரிமாற்று விகிதம், போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றை கருத்தில்கொண்டு காலாண்டுக்கு ஒருமுறை கார்களின் விலையை தயாரிப்பு நிறுவனங்கள் உயர்த்துகின்றன. அந்த வகையில், இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது.

 ரெனோ கைகர் காரின் விலை கணிசமாக அதிகரிப்பு... முழு விபரம் உள்ளே!

ரெனோ கைககர் எஸ்யூவியின் விலை உயர்த்தப்பட்டாலும், சாதாரண பெட்ரோல் மாடலின் பேஸ் வேரியண்ட் மற்றும் டர்போ பெட்ரோல் மாடலின் சிவிடி வேரியண்ட்டுகளின் விலை அதிகரிக்கப்படவில்லை என்பது வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதல் தரும் செய்தியாக பார்க்கலாம்.

 ரெனோ கைகர் காரின் விலை கணிசமாக அதிகரிப்பு... முழு விபரம் உள்ளே!

ரெனோ கைகர் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்படுகின்றன. இந்த காரில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும்.

 ரெனோ கைகர் காரின் விலை கணிசமாக அதிகரிப்பு... முழு விபரம் உள்ளே!

ரெனோ கைகர் காரில் 4 ஏர்பேக்குகள், எஞ்சின் இம்மொபைலைசர், ரியர் வியூ கேமரா, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவையும் வழங்கப்படுகிறது. ரூ.5.45 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து ரூ.9.72 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles

English summary
Renault has increased Kiger SUV prices in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X