Just In
- 5 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 6 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 7 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 8 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- News
ஒட்டுமொத்த நாடும் தேடும் 'அந்த' ஒற்றை நபர்... பிரிட்டனில் பரபரப்பு... காரணம் இதுதான்
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Lifestyle
உங்க திருமண வாழ்க்கை சூப்பராக இருக்கிறது என்பதை உணர்த்தும் உடல் மொழிகள் இதுதானாம்...!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய ரெனோ கைகர் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!
வரும் 15ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள புதிய ரெனோ கைகர் எஸ்யூவி மிக குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த எஸ்யூவியில் ஏராளமான சிறப்பு வசதிகளும் இடம்பெற்றிருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எல்இடி லைட்டுகள்
புதிய ரெனோ கைகர் எஸ்யூவியின் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள் மற்றும் டெயில் லைட்டுகளில் எல்இடி பல்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் பிரிமீயம் தோற்றத்திற்கு இந்த எல்இடி பல்புகள் கொண்ட க்ளஸ்ட்டர்கள் அதிக வசீகரத்தை வழங்குகின்றன. மேலும், இந்த கார் ஐஸ் கூல் ஒயிட், பிளானெட் க்ரே, மூன்லைட் க்ரே, மஹோகனி பிரவுன், காஸ்பியன் புளூ, கருப்பு வண்ண கூரையுடன் ரேடியண்ட் ரெட் ஆகிய வண்ணத் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அனைத்து வேரியண்ட்டுகளிலுமே டியூவல் டோன் என்ற இரண்டு வண்ணத்திலான தேர்வு வழங்கப்படும்.

இடவசதி
புதிய கைகர் எஸ்யூவி மிகச் சிறப்பான உட்புற இடவசதியை வழங்கும் என்று ரெனோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார் 1,431 மிமீ அகலம் கொண்ட உட்புறத்தை பெற்றிருப்பதால், பின் வரிசை இருக்கையில் மூன்று பேர் தாராளமாக அமர முடியும். அதேபோன்று, 222 மிமீ முழங்கால் வைப்பதற்கான இடவசதி இருப்பதால், உயரமானவர்கள் கூட சவுகரியமாக அமர்ந்து செல்லும் வாய்ப்பை வழங்கும். மொத்தத்தில் இந்த கார் மிகச் சிறப்பான இடவசதியை பயணிகளுக்கு அளிக்கும் என்று ரெனோ தெரிவிக்கிறது.

ஸ்டோரேஜ் வசதி
இந்த காரில் உட்புறத்தில் மட்டும் 29.1 லிட்டர் பொருட்கள் மற்றும் தண்ணீர் அல்லது குளிர்பான பாட்டில்களை வைப்பதற்கான இடவசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், உடைமைகளை வைப்பதற்காக 405 லிட்டர் பூட்ரூம் இடவசதியும் உள்ளது. இரண்டாவது வரிசை இருக்கைகளை மடக்கினால் 879 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை அதிகரிக்க முடியும்.

3டி சவுண்ட் சிஸ்டம்
புதிய ரெனோ கைகர் எஸ்யூவியில் அர்கமிஸ் 3டி சவுண்ட் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. 4 ஸ்பீக்கர்கள் மற்றும் 4 ட்விட்டர்களுடன் மிகச் சிறப்பான ஒலிதரத்தை இந்த சவுண்ட் சிஸ்டம் வழங்கும். மேலும், காரின் வேகத்திற்கும், சப்தத்திற்கும் தக்கவாறு ஒலியின் அளவை தானியங்கி முறையில் கூட்டிக் குறைக்கும் வசதியும் உள்ளது.

வயர்லெஸ் மிரரிங் தொழில்நுட்பம்
இந்த காரில் 8 அங்குல ஃப்ளோட்டிங் அமைப்புடைய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனை வயர்லெஸ் முறையில் ஸ்மார்ட்ஃபோனுடன் மிரர்லிங்க் வசதியை பெற முடியும். தவிரவும், இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளையும் சப்போர்ட் செய்யும். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் மிக முக்கிய அம்சமாக இருக்கும்.

வயர்லெஸ் சார்ஜர்
இந்த காருக்கு ஸ்மார்ட்ஃபோன்களை சார்ஜ் செய்வதற்கு வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஏர் பியூரிஃபயர் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கான கூடுதல் ஆக்சஸெரீகளாக வழங்கப்பட உள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்
இந்த காரில் ஓட்டுனர், முன்புற பயணி மற்றும் பக்கவாட்டில் இரண்டு என 4 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா, சென்சார்களும் இடம்பெற்றுள்ளன.

எஞ்சின் தேர்வு
நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் வழங்கப்படும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுதான் இந்த புதிய கைகர் எஸ்யூவியிலும் இடம்பெறுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். இந்த காரில் நார்மல், ஈக்கோ, ஸ்போர்ட் என மூன்று டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்படுகின்றன.

டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு தவிர்த்து, நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் வழங்கப்படும் 1.0 லிட்டர் சாதாரண வகை பெட்ரோல் எஞ்சின் தேர்வும் விலை குறைவான வேரியண்ட்டுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும்.

எதிர்பார்க்கும் விலை
புதிய ரெனோ கைகர் எஸ்யூவி இதன் ரகத்திலேயே மிக குறைவான விலையில் வரும் என்பதே பெருத்த எதிர்பார்ப்பை கிளறி உள்ளது. ரூ.5 லட்சம் முதல் ரூ.5.50 லட்சத்திற்கு இடையிலான ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். நிஸான் மேக்னைட் காருக்கு நேர் போட்டியாக இருக்கும். கியா சொனெட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட சப்-காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களுக்கும் போட்டியாக அமையும்.