புதிய ரெனோ கைகர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

இந்திய சந்தையில் மிக குறைவான விலை சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக புதிய ரெனோ கைகர் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.5.45 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் வந்துள்ள இந்த கார் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, நிஸான் மேக்னைட் எஸ்யூவியைவிட விலை குறைவான தேர்வாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 ரெனோ கைகர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய ரெனோ கைகர் எஸ்யூவி மாடலானது 1.0 லிட்டர் சாதாரண பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். எஞ்சின், கியர்பாக்ஸ் மற்றும் வசதிகளை பொறுத்து, RxE, RxL, RxT மற்றும் RxZ ஆகிய நான்கு விதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வேரியண்ட்டுகளில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 ரெனோ கைகர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ரெனோ கைகர் ஆர்எக்ஸ்இ

ரெனோ கைகர் எஸ்யூவியின் மிக குறைவான விலை வேரியண்ட்டாக இது வந்துள்ளது. எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், டர்ன் இன்டிகேட்டர் விளக்குகளுடன் ரியர் வியூ மிரர்கள், வீல் கவருடன் கூடிய 16 அங்குல ஸ்டீல் வீல்கள், ரியர் ஸ்பாய்லர், சாட்டின் சில்வர் வண்ண ரூஃப் ரெயில்கள், 3.5 அங்குல எல்இடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், மியூடெட் மெலஞ்ச் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 ரெனோ கைகர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

இந்த காரில் மேனுவல் ஏசி சிஸ்டம், முன்புற ஜன்னல்களுக்கு பவர் விண்டோஸ் வசதி, உட்புறத்தில் இருந்து அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள், முன்புற இருக்கைகளில் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஹெட்ரெஸ்ட், டியூவல் ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், இபிடியுடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த வேரியண்ட்டில் 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.0 லிட்டர் சாதாரண பெட்ரோல் எஞ்சின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த வேரியண்ட் ரூ.5.45 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

 ரெனோ கைகர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ரெனோ கைகர் ஆர்எக்ஸ்எல்

ரெனோ கைகர் ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்டில் கூடுதலாக பாடி கலர் கதவு கைப்பிடிகள், முன்புற க்ரில் அமைப்பில் க்ரோம் அலங்காரம், கருப்பு வண்ண அலங்கார பாகங்களுடன் 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், யுஎஸ்பி மற்றும் புளூடூத் வசதியுடன் ஆடியோ சிஸ்டம், 4 ஸ்பீக்கர்களுடன் மியூசிக் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், ரியர் பவர் விண்டோஸ், ரியர் பார்சல் ட்ரே, டை- நைட் அட்ஜெஸ்ட் வசதியுடன் உட்புற ரியர் வியூ மிரர், டில்ட் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ஸ்டீயரிங் வீல், குறிப்பிட்ட வேகத்தில் கதவுகள் தானாக மூடும் வசதி ஆகிய உள்ளன.

 ரெனோ கைகர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ரெனோ கைகர் ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்டில் 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.0 லிட்டர் சாதாரண பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். மேனுவல் மாடலுக்கு ரூ.6.14 லட்சம் விலையும், ஏஎம்டி வேரியண்ட்டிற்கு ரூ.6.59 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 99 பிஎச்பி பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்டிற்கு ரூ.7.14 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 ரெனோ கைகர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ரெனோ கைகர் ஆர்எக்ஸ்டி

ரெனோ கைகர் எஸ்யூவியின் ஆர்எக்ஸ்டி வேரியண்ட்டில் 16 அங்குல அலாய் வீல்கள், சில்வர் வண்ண ரியர் ஸ்கிட் பிளேட், 50 கிலோ எடை தாங்கும் வலிமை கொண்ட ரூஃப் ரெயில்கள், 8.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராயடு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், லீனியர் இன்டர்லாக் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 ரெனோ கைகர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

மேலும், ரியர் வியூ கேமரா, கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, 60:40 என்ற விகிதத்தில் பின் இருக்கையை மடக்கி வைக்கும் வசதி, ரியர் வாஷர் மற்றும் வைப்பர், ரியர் கேபின் லைட்டுகள், இரண்டு க்ளவ்பாக்ஸ்கள், வேனிட்டி மிரர், சைடு ஏர்பேக்குகள், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 ரெனோ கைகர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

இந்த வேரியண்ட்டின் சாதாரண பெட்ரோல் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட் ரூ.6.60 லட்சத்திலும், ஏஎம்டி வேரியண்ட் ரூ.7.05 லட்சத்திலும் கிடைக்கும். டர்போ பெட்ரோல் எஞ்சின் மேனுவல் வேரியண்ட் ரூ.7.60 லட்சத்திலும், சிவிடி டர்போ பெட்ரோல் வேரியண்ட் ரூ.8.60 லட்சத்திலும் கிடைக்கும்.

 ரெனோ கைகர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ரெனோ கைகர் ஆர்எக்ஸ்இசட்

ரெனோ கைகர் எஸ்யூவியின் விலை உயர்ந்த வேரியண்ட்டாக கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட்டுகள், 16 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், 7 அங்குல கலர் டிஜிட்டல் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை வயர்லெஸ் முறையில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் இணைக்கும் வசதி, லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல், விசேஷ சீட் அப்ஹோல்ஸ்ட்ரி, 4 ட்வீட்டர்கள், 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய அர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பிஎம் 2.5 ஏசி ஃபில்டர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஓட்டுனர் பக்கத்திற்கு ஆட்டோ அப் டவுன் வசதியுடன் கூடிய பவர் விண்டோ, கூல்டு க்ளவ் பாக்ஸ், ரியர் டீஃபாகர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 ரெனோ கைகர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய ரெனோ கைகர் ஆர்எக்ஸ்இசட் வேரியண்ட் 1.0 லிட்டர் சாதாரண மற்றும் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. சாதாரண பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுக்கு ரூ.7.55 லட்சமும், ஏஎம்டி வேரியண்ட்டிற்கு ரூ.8 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டர்போ பெட்ரோல் எஞ்சின் மேனுவல் வேரியண்ட் ரூ.8.55 லட்சத்திலும், சிவிடி வேரியண்ட் ரூ.9.55 லட்சத்திலும் கிடைக்கும்.

 ரெனோ கைகர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய ரெனோ கைகர் எஸ்யூவியின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட டாப் வேரியண்ட் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக அமையும். அதிக மதிப்புமிக்க அம்சங்களை இந்த வேரியண்ட் பெற்றிருப்பதுடன் மிகச் சரியான விலையில் வந்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Here are the variant wise features details of the all new Renault Kiger sub-compact SUV.
Story first published: Thursday, February 18, 2021, 13:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X