Just In
- 8 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 9 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 10 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 10 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- News
பாளையங்கோட்டை சிறையில்.. கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்.. ஒருவர் உயிரிழப்பு
- Sports
இன்னா அடி... விராட் -படிக்கல் அதிரடி... சிக்ஸ், பவுண்டரியால் அதிர்ந்த மைதானம்... சிறப்பான வெற்றி!
- Finance
இந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..?!
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
300 கிமீ ரேஞ்ச்... ரெனோ க்விட் எலெக்ட்ரிக் கார் ஐரோப்பாவில் அறிமுகம்... அடுத்து இந்தியா?
சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ க்விட் எலெக்ட்ரிக் கார் தற்போது பிரான்ஸ் நாட்டில் டேஸியா பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் ஹேட்ச்பேக் ரக கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக ரெனோ க்விட் கார் இருந்து வருகிறது. சூப்பரான டிசைன், இடவசதி, தொழில்நுட்ப அம்சங்களுடன் விலையிலும் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. இந்த நிலையில், ரெனோ க்விட் காரின் அடிப்படையிலான மின்சார மாடல் City K-ZE என்ற பெயரில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தற்போது ஐரோப்பிய கண்டத்தில் முதலாவதாக பிரான்ஸ் நாட்டிலும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், ரெனோ கார் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் டேஸியா பிராண்டில் அங்கு அறிமுகமாகி இருக்கிறது.

டேஸியா ஸ்பிரிங் என்ற பெயரில் ரெனோ க்விட் எலெக்ட்ரிக் கார் பிரான்ஸ் நாட்டில் களமிறக்கப்பட்டுள்ளது. ரெனோ நிறுவனத்தின் தாயகமான பிரான்ஸ் நாட்டில் 16,990 யூரோ என்ற விலையில் வந்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.14.70 லட்சம் விலை கொண்டதாக அங்கு விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய டேஸியா ஸ்பிரிங் காரில் 27.4kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 305 கிமீ தூரம் வரையில் செல்வதற்கான வாய்ப்பும், நடைமுறை பயன்பாட்டில் 230 கிமீ தூரம் வரை செல்வதற்கான வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரின் மின் மோட்டார் அதிகபட்சமாக 44 பிஎஸ் பவரையும், 125 என்எம் டார்க் திறனையும் வழங்கும். நகர்ப்புற பயன்பாட்டிற்கு சிறந்த அம்சங்களுடன் இந்த கார் சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய டேஸியா ஸ்பிரிங் கார் இரண்டு வேரியண்ட்டுகளில் பிரான்ஸ் நாட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. பேஸ் வேரியண்ட்டில் எல்இடி பகல்நேர விளக்குகள், மேனுவல் ஏசி சிஸ்டம், புளூடூத் இணைப்புடன் ஆடியோ சிஸ்டம், ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

விலை உயர்ந்த மற்றொரு வேரியண்ட்டில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றஉம் கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. 30kW சார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த வேரியண்ட் இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் விலை கொண்டதாக இருக்கும்.

இந்த காரின் பேட்டரியை 2.3kW சார்ஜர் பயன்படுத்தி சார்ஜ் ஏற்றினால் 14 மணிநேரம் பிடிக்கும். 3.7kW சார்ஜர் பயன்படுத்தினால் 8.5 மணிநேரமும், 7.4kW பயன்படுத்தினால் 5 மணிநேரமும், 30kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் 1.5 மணிநேரத்திலும் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

இந்த கார் பிற ஐரோப்பிய நாடுகளிலும் டேஸியா பிராண்டில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். அடுத்த ஆண்டு இந்த புதிய காம்பேக்ட் ரக எலெக்ட்ரிக் கார் ரெனோ பிராண்டில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புகள் உள்ளன.