இந்தோனேசியாவில் 11 லட்ச ரூபாவுக்கு விற்பனைக்கு அறிமுகமான Kiger! ஆனா இந்தியாவுல இது மலிவு விலை கார்!

இந்தியாவில் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் ஒன்று இந்தோனேசியாவில் மிக மிக அதிக விலையில் விற்பனைக்கு அறிமுகமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. என்ன விலையில் இந்தியாவின் மலிவு விலை கார் இந்தோனேசியாவில் விற்பனைக்கு அறிமுகமாகி உள்ளது?, அதன் விலை என்ன என்பது பற்றிய முழு விபரத்தையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தோனேசியாவில் 11 லட்ச ரூபாவுக்கு விற்பனைக்கு அறிமுகமான Kiger! ஆனா இந்தியாவுல இது மலிவு விலை கார்!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக குறைவான விலை கொண்ட கார் மாடல்களில் Renault Kiger-ம் ஒன்று. நாட்டில் இக்காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்தியாவில் இக்காருக்கு கிடைத்து வெற்றியைத் தொடர்ந்து மற்றொரு நாட்டிலும் கைகரை விற்பனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றது, ரெனால்ட்.

இந்தோனேசியாவில் 11 லட்ச ரூபாவுக்கு விற்பனைக்கு அறிமுகமான Kiger! ஆனா இந்தியாவுல இது மலிவு விலை கார்!

இந்தோனேசியா சந்தையிலேயே மலிவு விலை கைகர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்தியாவில் கைகர் காரின் ஆரம்ப நிலை மாடலின் விலை ரூ. 5.64 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், இந்தோனேசியாவில் இக்காருக்கு அந்நாட்டு மதிப்பில் 220 மில்லியன் ருப்பியாக்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் 11 லட்ச ரூபாவுக்கு விற்பனைக்கு அறிமுகமான Kiger! ஆனா இந்தியாவுல இது மலிவு விலை கார்!

இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 11.28 லட்சம் ஆகும். ஆம் இந்த அதிகபட்ச விலையிலேயே இக்கார் இந்தோனேசியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றது. இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலும் இதே போல் இரு வித எஞ்ஜின் தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கிறது.

இந்தோனேசியாவில் 11 லட்ச ரூபாவுக்கு விற்பனைக்கு அறிமுகமான Kiger! ஆனா இந்தியாவுல இது மலிவு விலை கார்!

1.0 நேட்சுரல்லி அஸ்பயர்டு மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வில் கைகர் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், 1.0 லிட்டர் மோட்டாரானது 72 பிஎஸ் மற்றும் மற்றும் 96 என்எம் டார்க்கை வெளியற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதேபோல், 1.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரானது 100 பிஎஸ் 152 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது.

இந்தோனேசியாவில் 11 லட்ச ரூபாவுக்கு விற்பனைக்கு அறிமுகமான Kiger! ஆனா இந்தியாவுல இது மலிவு விலை கார்!

இத்துடன் இந்த மோட்டாரில் ஏஎம்டி மற்றும் சிவிடி தேர்வும் வழங்கப்பட இருக்கின்றன. இந்தோனேசியாவில் கைகருக்கும், இந்திாயவில் விற்பனைக்குக் கிடைக்கும் கைகருக்கும் இடையில் எந்த வித்தியாசமும் தென்படவில்லை. எந்த மாற்றமும் இன்றியே கைகர் இந்தோனேசியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

இந்தோனேசியாவில் 11 லட்ச ரூபாவுக்கு விற்பனைக்கு அறிமுகமான Kiger! ஆனா இந்தியாவுல இது மலிவு விலை கார்!

இரு நிற பம்பர், அப்ரைட் முகம், உயரமான பானட், எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவற்றைக் கூட எந்த மாற்றமும் இன்றி ரெனால்ட் நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. முகப்பு பக்கம் மட்டுமல்ல காரின் பக்கவாட்டு பகுதியிலும் எந்த மாற்றமும் இந்தோனேசியாவிற்காக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்தோனேசியாவில் 11 லட்ச ரூபாவுக்கு விற்பனைக்கு அறிமுகமான Kiger! ஆனா இந்தியாவுல இது மலிவு விலை கார்!

16 இன்சிலான அலாய் வீல்கள் டைமண்ட் கட் லுக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த வீலில் 195/60 எனும் அளவுள்ள டயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சஸ்பென்ஷன் வசதிக்காக மேக்பெர்ஷன் ஸ்ட்ரட்ஸ் முன் பக்கத்திலும், டாரிசியான் பீம் கால் ஸ்பிரிங்குகள் பின் பக்க வீலிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்தோனேசியாவில் 11 லட்ச ரூபாவுக்கு விற்பனைக்கு அறிமுகமான Kiger! ஆனா இந்தியாவுல இது மலிவு விலை கார்!

இந்தோனேசியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியிருக்கும் கைகர் கார் சிறப்பு அம்சங்கள் விஷயத்திலும் எந்த மாற்றமும் இன்றியே அங்கு களமிறங்கியிருக்கின்றது. ஒயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் கார் ப்ளே வசதிக் கொண்ட 7 அங்குல டிஎஃப்டி திரை, பிஎம் 2.5 ஏர் ஃபில்டர், 6 ஸ்பீக்கர் அகாமிஸ் சவுண்ட் சிஸ்டம், பின் பக்கத்தில் ஏசி வெண்ட், ஆம்பிசியன்ட் மின் விளக்கு ஆகிய வசதிகளுடன் கைகர் அந்நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்தோனேசியாவில் 11 லட்ச ரூபாவுக்கு விற்பனைக்கு அறிமுகமான Kiger! ஆனா இந்தியாவுல இது மலிவு விலை கார்!

இதே வசதிகளுடனேயே இந்தியாவிலும் கைகர் கார் விற்பனைக்குக் கிடைக்கிறது. இத்துடன், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், இரு ஏர் பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா மற்றும் ட்ராக்சன் கன்ட்ரோல் போன்ற அம்சங்களும் அக்காரில் இடம் பெற்றிருக்கின்றன. இவை அதிக பாதுகாப்பை வழங்கக் கூடியவை ஆகும்.

இந்தோனேசியாவில் 11 லட்ச ரூபாவுக்கு விற்பனைக்கு அறிமுகமான Kiger! ஆனா இந்தியாவுல இது மலிவு விலை கார்!

ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான நிற தேர்வுகளில் கைகர் இந்தோனேசியாவில் விற்பனைக்குக் கிடைக்கும். Energy Blue, Elegant Grey, Glamour Silver, Spirit Red மற்றும் Bright White ஆகிய நிற தேர்வுகளிலேயே அக்கார் விற்பனைக்கு களமிறங்கியிருக்கின்றது. இந்த நிறங்களுடன் கருப்பு நிற மேற்கூரையை வசதியையும் ரெனால்ட் வழங்குகின்றது.

Most Read Articles

English summary
Renault launched kiger in indonesian market here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X