இரு ஏர் பேக், சீட் பெல் ரிமைண்டர் என எக்கசக்க பாதுகாப்பு அம்சங்களுடன் 2021 Kwid... அதே குறைவான விலையில்!

Renault நிறுவனம் தனது க்விட் காரை அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காராக இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. இதன் விலை மற்றும் புதிதாக என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.

இரு ஏர் பேக், சீட் பெல் ரிமைண்டர் என எக்கசக்க பாதுகாப்பு அம்சங்களுடன் 2021 Kwid... அதே குறைவான விலையில்!

ஃபிரெஞ்சு நாட்டை மையமாகக் கொண்டு கார் உற்பத்தி நிறுவனம் Renault (ரெனால்ட்). இந்நிறுவனம் தனது பத்தாம் ஆண்டு கொண்டாட்டத்தை தற்போது கொண்டாடி வருகின்றது. இந்த நிகழ்வை முன்னிட்டு இந்தியாவில் 2021 Kwid (க்விட்) மாடல் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது ஓர் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

இரு ஏர் பேக், சீட் பெல் ரிமைண்டர் என எக்கசக்க பாதுகாப்பு அம்சங்களுடன் 2021 Kwid... அதே குறைவான விலையில்!

அப்டேட்டின் வாயிலாக பல்வேறு வசதிகளை நிறுவனம் இக்கார் மாடலில் வழங்கியிருக்கின்றது. அந்தவகையில் நிறுவனம் வழங்கியிருக்கும் மிக முக்கியமான ஓர் அப்டேட்டாக ஏர் பேக் வசதி உள்ளது. ஆம், தற்போது தனது அனைத்து தேர்வு க்விட் கார் மாடலிலும் ஏர் பேக் வசதியினை ரெனால்ட் நிறுவனம் கட்டாயமாக்கியுள்ளது.

இரு ஏர் பேக், சீட் பெல் ரிமைண்டர் என எக்கசக்க பாதுகாப்பு அம்சங்களுடன் 2021 Kwid... அதே குறைவான விலையில்!

விபத்து போன்ற அசம்பாவிதங்களின்போது பயணிகளைக் காக்கும் விதமாக ஏர் பேக்குகள் கார்களில் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த அம்சத்தையே நிறுவனம் தற்போது முக்கிய தயாரிப்புகளில் ஒன்றான க்விட்டில் கட்டாயமாக்கியிருக்கின்றது. ஆகையால், இனி குறைந்த விலை க்விட் தேர்விலும் கூட ஏர் பேக் வசதி கிடைக்கும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

இரு ஏர் பேக், சீட் பெல் ரிமைண்டர் என எக்கசக்க பாதுகாப்பு அம்சங்களுடன் 2021 Kwid... அதே குறைவான விலையில்!

க்விட் ஓர் ஹேட்ச்பேக் ரக கார் மாடலாகும். இந்தியாவின் மிக மிக மலிவு விலைக் கொண்ட கார் மாடல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய ஓர் சிறப்புமிக்க கார் மாடலிலேயே ரெனால்ட் நிறுவனம் இரு ஏர் பேக் வசதியை அறிமுகம் செய்திருக்கின்றது. இரு ஏர் பேக் வசதி இக்காரில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் தற்போது இதன் விலை மலிவானதாகவே காட்சியளிக்கின்றது.

இரு ஏர் பேக், சீட் பெல் ரிமைண்டர் என எக்கசக்க பாதுகாப்பு அம்சங்களுடன் 2021 Kwid... அதே குறைவான விலையில்!

2021 ரெனால்ட் க்விட் காருக்கு ரூ. 4.06 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப நில தேர்வான RXE (ஆர்எக்ஸ்இ) 0.8 லிட்டர் வேரியண்டின் விலையாகும். இதன் உயர் நிலை தேர்வான க்விட் க்ளிம்பர் 1.0 லிட்டர் Easy-R (O) (ஈசி-ஆர் ஓ) வேரியண்டின் விலை ரூ. 5.51 ஆகும். க்விட் கார் மாடலிலேயே மிக அதிக வசதிகளை இது கொண்டிருக்கின்ற காரணத்தினால் இதன் விலை சற்று அதிகமாக உள்ளது.

இரு ஏர் பேக், சீட் பெல் ரிமைண்டர் என எக்கசக்க பாதுகாப்பு அம்சங்களுடன் 2021 Kwid... அதே குறைவான விலையில்!

புதிய பாதுகாப்பு அம்சமான ஏர்பேக் உடன் இன்னும் சில அம்சங்களும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், முன்பக்கம் டிரைவர் அமரும் பகுதியில் பைரோடெக் மற்றும் ப்ரீடென்சனர் அம்சங்களும் அப்டேட்டுகளின் வாயிலாக வழங்கப்பட்டுள்ளன.

இரு ஏர் பேக், சீட் பெல் ரிமைண்டர் என எக்கசக்க பாதுகாப்பு அம்சங்களுடன் 2021 Kwid... அதே குறைவான விலையில்!

இவற்றுடன் வழக்கமான பாதுகாப்பு அம்சங்களமாக ரியர் பார்கிங் சென்சார், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைண்டர், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்களும் ரெனால்ட் க்விட்டில் வழங்கப்பட்டுள்ளன. 2021 ரெனால்ட் க்விட் இரு விதமான நிற தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கிறது. கருப்பு, வெள்ளை ஆகிய நிறங்களிலான மேற்கூரை மற்றும் எதிர்மாறான உடல் நிறத் தேர்வில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கிறது.

இரு ஏர் பேக், சீட் பெல் ரிமைண்டர் என எக்கசக்க பாதுகாப்பு அம்சங்களுடன் 2021 Kwid... அதே குறைவான விலையில்!

இத்துடன், எலெக்ட்ரிக் ஓஆர்விஎம் மற்றும் பகல் மற்றும் இரவு நேர ஐஆர்விஎம் 2021 ரெனால்ட காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், 8.0 இன்சிலான தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (செல்போன் இணைப்பு வசதிக் கொண்டது), பின் பக்க இருக்கையாளர்களுக்கு கைகளுக்கு ஓய்வளிக்கும் வசதி உள்ளிட்ட அம்சங்களும் அக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

இரு ஏர் பேக், சீட் பெல் ரிமைண்டர் என எக்கசக்க பாதுகாப்பு அம்சங்களுடன் 2021 Kwid... அதே குறைவான விலையில்!

மேலே நாங்கள் கூறியதைப் போலவே காரின் உருவத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மாறாக நாம் முன்னதாக பார்த்ததைப் போல் சில அம்சங்கள் சேர்ப்பு பணி மட்டுமே செய்யப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, தனது தயாரிப்புகளின் பக்கம் மக்களைக் கவரும் விதமாக பல்வேறு சிறப்பு சலுகைகளை நிறுவனம் அறிவிக்கத் தொடங்கியுள்ளது.

இரு ஏர் பேக், சீட் பெல் ரிமைண்டர் என எக்கசக்க பாதுகாப்பு அம்சங்களுடன் 2021 Kwid... அதே குறைவான விலையில்!

குறிப்பாக, வரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கேஷ்பேக், ரிவார்டு போன்ற பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து, காரை இப்போது வாங்குங்க, அப்புறமா கடனை கட்டத் தொடங்குங்க எனும் சிறப்பு திட்டத்தையும் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதாக கூறப்படுகின்றது. இத்திட்டத்தின்கீழ் காரை வாங்குவோர் அடுத்த ஆறு மாதம் வரை இஎம்ஐ கட்ட தேவையில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏழாவது மாதத்தில் இருந்து தனது காருக்கான கடன் தொகையைக் கட்ட தொடங்க வேண்டும்.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault launches 2021 kwid in india at rs 4 06 lakh
Story first published: Wednesday, September 1, 2021, 17:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X