விற்பனையில் 5 சதவீத வளர்ச்சி உடன் 2021 ஜனவரியை முடித்துள்ள ரெனால்ட்!! விற்பனை எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது!

ரெனால்ட் நிறுவனம் கடந்த 2021 ஜனவரி மாதத்தில் விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனையில் 5 சதவீத வளர்ச்சி உடன் 2021 ஜனவரியை முடித்துள்ள ரெனால்ட்!! விற்பனை எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது!

புதிய 2021ஆம் ஆண்டின் முதல் ஜனவரி மாத விற்பனையில் மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களுடனான போட்டியில் ரெனால்ட் இந்தியா நிறுவனம் மொத்தம் 8,209 கார்களின் விற்பனை உடன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

விற்பனையில் 5 சதவீத வளர்ச்சி உடன் 2021 ஜனவரியை முடித்துள்ள ரெனால்ட்!! விற்பனை எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது!

இந்த எண்ணிக்கை 2020 ஜனவரி மாதத்தில் விற்பனையான ரெனால்ட் கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 5 சதவீதம் அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 7,805 கார்களையே இந்த பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

விற்பனையில் 5 சதவீத வளர்ச்சி உடன் 2021 ஜனவரியை முடித்துள்ள ரெனால்ட்!! விற்பனை எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது!

ஆனால் 2020 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனையில் 16 சதவீத வீழ்ச்சியை ரெனால்ட் சந்தித்துள்ளது. 2020ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் 9,800 ரெனால்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

விற்பனையில் 5 சதவீத வளர்ச்சி உடன் 2021 ஜனவரியை முடித்துள்ள ரெனால்ட்!! விற்பனை எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது!

இருப்பினும் விற்பனையில் ரெனால்ட் நிறுவனம் ஃபோர்டு, நிஸான், எம்ஜி, ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா மற்றும் ஜீப் உள்ளிட்ட நிறுவனங்களை முந்தியுள்ளது. கடந்த மாதத்தில் அதிகளவில் விற்பனையான ரெனால்ட் கார் என்று பார்த்தால், அது ட்ரைபர் தான்.

விற்பனையில் 5 சதவீத வளர்ச்சி உடன் 2021 ஜனவரியை முடித்துள்ள ரெனால்ட்!! விற்பனை எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது!

கடந்த ஜனவரியில் மட்டும் 4,082 ட்ரைபர் கார்களை இந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதுவே 2020 ஜனவரியில் விற்பனை செய்யப்பட்ட ட்ரைபர் கார்களின் எண்ணிக்கை 4,119 ஆகும். இந்த வகையில் இதன் விற்பனை வெறும் 1 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.

விற்பனையில் 5 சதவீத வளர்ச்சி உடன் 2021 ஜனவரியை முடித்துள்ள ரெனால்ட்!! விற்பனை எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது!

ரெனால்ட்டின் மலிவான ஹேட்ச்பேக் காரான க்விட் 3,791 விற்பனை எண்ணிக்கையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2020 ஜனவரியில் விற்பனையான 3,281 யூனிட்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 16 சதவீதம் அதிகமாகும். இவை இரண்டும் தான் தற்போதைக்கு இந்திய சந்தையில் ரெனால்ட்டின் பிரதான மாடல்களாக உள்ளன.

விற்பனையில் 5 சதவீத வளர்ச்சி உடன் 2021 ஜனவரியை முடித்துள்ள ரெனால்ட்!! விற்பனை எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது!

இவை இரண்டுடன் டஸ்டர் எஸ்யூவி காரும் ரெனால்ட் பிராண்டில் இருந்து விற்பனையில் உள்ளது. கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா போன்ற அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களுடன் போட்டியிடுவதால் என்னமோ தெரியவில்லை, டஸ்டரின் விற்பனை கடந்த சில வருடஙகளாகவே பெரிய அளவில் இல்லை.

விற்பனையில் 5 சதவீத வளர்ச்சி உடன் 2021 ஜனவரியை முடித்துள்ள ரெனால்ட்!! விற்பனை எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது!

கடந்த 2021 ஜனவரியில் 336 டஸ்டர் கார்களும், இதற்கு முந்தைய 2020 ஜனவரியில் 405 கார்களும் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த ஒப்பிட்டின்படி இந்த ரெனால்ட் எஸ்யூவி காரின் விற்பனை 5 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் இனி வரும் மாதங்களில் புதிய கைகர் காம்பெக்ட் எஸ்யூவி காரின் வருகையினால் ரெனால்ட்டின் கார்கள் விற்பனை இந்தியாவில் சற்று முன்னேற்றத்தை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Model Wise January 2021 Sales.
Story first published: Friday, February 12, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X