Just In
- 9 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 10 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 11 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 11 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்கக்கூடும். உஷார்…
- News
பாளையங்கோட்டை சிறையில்.. கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்.. ஒருவர் உயிரிழப்பு
- Sports
இன்னா அடி... விராட் -படிக்கல் அதிரடி... சிக்ஸ், பவுண்டரியால் அதிர்ந்த மைதானம்... சிறப்பான வெற்றி!
- Finance
இந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..?!
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கூடுதல் சிறப்பம்சங்களுடன் வருகிறது ரெனோ ட்ரைபர்... விபரங்கள் கசிந்தது!
கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ரெனோ ட்ரைபர் கார் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த புதிய மாடலில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் சிறப்பம்சங்கள் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் எம்பிவி கார் மார்க்கெட்டில் ரெனோ ட்ரைபர் கார் குறைவான பட்ஜெட்டில் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் நிறைவை தருவதால், விற்பனையிலும் கலக்கி வருகிறது.

இந்த நிலையில், 2021 மாடலாக புதிய ரெனோ ட்ரைபர் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக, வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய வண்ணத் தேர்விலும் வர இருக்கிறது. இந்த தகவல்கள் கார்வாலே தளம் மூலமாக வெளியாகி இருக்கிறது.

புதிய ரெனோ ட்ரைபர் காரில் புதிய செடர் பிரவுன் என்ற பழுப்பு வண்ணத் தேர்வு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த வண்ணத் தேர்வில் கருப்பு வண்ண கூரையுடன் டியூவல் டோன் எனப்படும் இரட்டை வண்ணத் தேர்வாக வர இருக்கிறது.

மேலும், ரியர் வியூ மிரரில் எல்இடி பல்புகள் கொண்ட இண்டிகேட்டர்கள், டியூவல் ஹாரன் ஆகியவையும் கூடுதல் சிறப்பம்சங்களாக கொடுக்கப்பட உள்ளன.

உட்புறத்திலும் சில கூடுதல் வசதிகள் இடம்பெற்றுள்ளன. ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோன்று, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ மற்றும் போன் அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கான சுவிட்சுகள் கொடுக்கப்பட உள்ளன.

ரெனோ ட்ரைபர் கார் வெள்ளை, சில்வர், நீலம், ஆரஞ்ச் மற்றும் பழுப்பு வண்ணத் தேர்வுகளில் வர இருக்கிறது. ஆர்எக்ஸ்இசட் என்ற டாப் வேரியண்ட்டில் இந்த வண்ணத் தேர்வுகள் கருப்பு வண்ணக் கூரை அமைப்புடன் இரட்டை வண்ணத் தேர்வில் கிடைக்கும். இதுவரை வழங்கப்பட்டு வந்த சிவப்பு வண்ணத் தேர்வு நீக்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ரெனோ ட்ரைபர் எம்பிவி காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

மேனுவல் கியர்பாக்ஸ் மாடலானது லிட்டருக்கு 19 கிமீ மைலேஜையும், ஏஎம்டி கியர்பாக்ஸ் லிட்டருக்கு 18.29 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய மாடலைவிட சற்றே கூடுதல் விலையல் 2021 ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.