ஆட்டம் ஆரம்பம்... மலிவு விலை காருக்காக விளம்பர வீடியோ வெளியிட்ட ரெனால்ட்... நடுக்கத்தில் நிஸான்...

ரெனால்ட் நிறுவனம் அதன் குறைந்த விலையில் விற்பனைக்கு வரவிருக்கும் கைகர் காருக்கான விளம்பர வீடியோவை வெளியிட்டிருக்கின்றது. இக்கார் பற்றிய சிறப்பு தகவலைக் கீழே காணலாம்.

ஆட்டம் ஆரம்பம்... மலிவு விலை காருக்காக விளம்பர வீடியோ வெளியிட்ட ரெனால்ட்... நடுக்கத்தில் நிஸான்...

இந்தியர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டி வரும் காராக ரெனால்ட் நிறுவனத்தின் கைகர் மாறியிருக்கின்றது. இந்த கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகமான நிஸான் மேக்னைட் எஸ்யூவி காரைக் காட்டிலும் மிக மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணத்தினாலயே இந்திய பட்ஜெட் வாகன பிரியர்கள் மத்தியில் இக்காரின் வரவு பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டம் ஆரம்பம்... மலிவு விலை காருக்காக விளம்பர வீடியோ வெளியிட்ட ரெனால்ட்... நடுக்கத்தில் நிஸான்...

இந்த எதிர்பார்ப்பை மேலும் தூண்டுகின்ற வகையில் ரெனால்ட் நிறுவனம் புதிய கைகர் கார் பற்றிய வீடியோ ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கின்றது. காரை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தும் நோக்கில் இவ்வீடியோவை ரெனால்ட் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆட்டம் ஆரம்பம்... மலிவு விலை காருக்காக விளம்பர வீடியோ வெளியிட்ட ரெனால்ட்... நடுக்கத்தில் நிஸான்...

ரெனால்ட் கைகர் ஓர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காராகும். இதனை மிக மிக சமீபத்திலேயே உலகளாவிய வெளியீடை ரெனால்ட் செய்திருந்தது. விரைவில் விற்பனைக்கான அறிமுகத்தையும் நிறுவனம் மேற்கொள்ள இருக்கின்றது. இந்த அறிமுகம் மார்ச் அரங்கேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டம் ஆரம்பம்... மலிவு விலை காருக்காக விளம்பர வீடியோ வெளியிட்ட ரெனால்ட்... நடுக்கத்தில் நிஸான்...

இந்த நிலையிலேயே மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய விளம்பர வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு அசத்தியிருக்கின்றது. இதனால், நிஸான் நிறுவனம் லேசான நடுக்கத்தைச் சந்திக்க ஆரம்பித்துள்ளது. இதன் புதிய மேக்னைட் காரின் இடத்தைக் காலி செய்கின்ற வகையில் ரெனால்ட் கைகர் குறைந்த விலை, அதிக அம்சங்கள் மற்றும் கவர்ச்சியான தோற்றம் என அனைத்திலும் சிறப்பானதாக களமிறங்க இருக்கின்றது.

ஆட்டம் ஆரம்பம்... மலிவு விலை காருக்காக விளம்பர வீடியோ வெளியிட்ட ரெனால்ட்... நடுக்கத்தில் நிஸான்...

அதேசமயம், இக்கார் மாருதி ப்ரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈகோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுக்கும் போட்டியளிக்க இருக்கின்றது. ரெனால்ட் கைகர் பல்வேறு நவீன சிறப்பம்சங்களைப் பெற இருக்கின்றன. இந்தியர்களை ரெனால்ட் கைகர் காரின் அறிமுகத்தை எதிர்நோக்கி காத்திருப்பதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கின்றது.

ஆட்டம் ஆரம்பம்... மலிவு விலை காருக்காக விளம்பர வீடியோ வெளியிட்ட ரெனால்ட்... நடுக்கத்தில் நிஸான்...

முழு டிஜிட்டல் திறனிலான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஒயர்லெஸ் திறன் கொண்ட தொடுதிரை, ஒயர்லெஸ் சார்ஜர், கூடுதல் இடவசதி, அதிக கேபின் வசதி மற்றும் பன்முக கன்ட்ரோல் பொத்தான்கள் அடங்கிய ஸ்டியரிங் வீல் என பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இக்கார் விற்பனைக்கு வர இருக்கின்றது.

ஆட்டம் ஆரம்பம்... மலிவு விலை காருக்காக விளம்பர வீடியோ வெளியிட்ட ரெனால்ட்... நடுக்கத்தில் நிஸான்...

இதுமட்டுமின்றி நேட்சுரல்லி அஸ்பயர்டு மற்றும் டர்போசார்ஜட் வசதிகள் கொண்ட பெட்ரோல் எஞ்ஜினிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். 1.0 லிட்டரிலான இந்த எஞ்ஜின் 72 பிஎஸ் மற்றும் 96 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக் கூடியது. இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்.

இதன் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் மார்ச் மாதத்திலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Released New TVC For Kiger Compact SUV. Read In Tamil.
Story first published: Tuesday, February 2, 2021, 12:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X