கிளாசிக் கார் ஸ்டைலில் ரெனால்டின் பறக்கும் கார்! இதோட பேர் மட்டுமில்லை பயன்பாடும் ரொம்ப வித்தியாசமா இருக்கு!

ரெனால்ட் (Renault) நிறுவனம் அதன் பிரபல கார் மாடலை தழுவி ஓர் பறக்கும் காரை முன் மாதிரி மாடலாக உருவாக்கி இருக்கின்றது. இப்பறக்கும் கார் பற்றிய முக்கிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கிளாசிக் கார் ஸ்டைலில் ரெனால்டின் பறக்கும் கார்! இதோட பேர் மட்டுமில்லை பயன்பாடும் ரொம்ப வித்தியாசமா இருக்கு!

ரெனால்ட் (Renault) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ரெனால்ட் 4 (Renault4)-ம் ஒன்று. இந்த காரை நிறுவனம் அறிமுகம் செய்து 60 ஆண்டுகள் நிறைவுற்றிருக்கின்றன. இந்த வரலாற்று நிகழ்வை தற்போது ரெனால்ட் கோலகலமாகக் கொண்டாடி வருகின்றது. இதனை வெறும் கொண்டாட்டத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், புதிய வாகனம் ஒன்றின் அறிமுகத்தின் வாயிலாக இந்த நாளை கூடுதல் சிறப்பான தினமாக மாற்றியிருக்கிறது, ரெனால்ட்.

கிளாசிக் கார் ஸ்டைலில் ரெனால்டின் பறக்கும் கார்! இதோட பேர் மட்டுமில்லை பயன்பாடும் ரொம்ப வித்தியாசமா இருக்கு!

ரெனால்ட் பறக்கும் திறன் கொண்ட கார் ஒன்றை வெளியீடு செய்திருக்கின்றது. இக்காரை மோஷன் டிசைன் நிறுவனமான திஆர்சனேல் உடன் இணைந்து உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இக்காரின் உருவம் ரெனால்ட் 4-ஐ பிரதிபலிக்கும் வகையில் காட்சியளிக்கின்றது. ரெனால்ட் 4-க்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த தோற்றம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

கிளாசிக் கார் ஸ்டைலில் ரெனால்டின் பறக்கும் கார்! இதோட பேர் மட்டுமில்லை பயன்பாடும் ரொம்ப வித்தியாசமா இருக்கு!

100க்கும் அதிகமான நாடுகளில் விற்பனையில் இருந்த கார் மாடலே ரெனால்ட் 4எல். 8 மில்லியன் யூனிட் வரை இக்கார் விற்பனையாகியிருக்கின்றன. சுமார் 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக உற்பத்தியில் இருந்த ஒரே காராகவும் இது திகழ்கின்றது. இந்த மாதிரியான பல்வேறு சிறப்பு வரலாற்றை ரெனால்ட் 4 கொண்டிருக்கின்றன காரணத்தினாலேயே இதனை சிறப்புவிக்கும் முயற்சியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

கிளாசிக் கார் ஸ்டைலில் ரெனால்டின் பறக்கும் கார்! இதோட பேர் மட்டுமில்லை பயன்பாடும் ரொம்ப வித்தியாசமா இருக்கு!

ரெனால்ட் 4 அடிப்படையில் உருவாகி இருக்கும் பறக்கும் காருக்கு ஏர்4 என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. முற்றிலும் வித்தியாசமான தோற்றம் மற்றும் வசதிகளுடன் இப்பறக்கும் கார் உருவாக்கப்பட்டுள்ளது. பறக்கும் காரின் உருவாக்கத்திற்கு கார்பன் ஃபைபர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரெனால்ட் 4 காரை தழுவி உருவாக்கப்பட்டிருந்தாலும் இதன் வெளிப்புற தோற்றத்தில் பல்வேறு புதிய மாற்றங்களைக் காண முடிகின்றது.

கிளாசிக் கார் ஸ்டைலில் ரெனால்டின் பறக்கும் கார்! இதோட பேர் மட்டுமில்லை பயன்பாடும் ரொம்ப வித்தியாசமா இருக்கு!

அதாவது, லோகோ முதல் ஏர்4 காரில் இடம் பெற்றிருக்கும் அனைத்தும், அவ்வாகனத்திற்கு மிகவும் சீரான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. ஆகையால், இப்பறக்கும் கார் மிகவும் தனித்துவமான தோற்றத்தில் காட்சியளிக்கின்றது. அதாவது மாடர்ன் யுகத்தில் தயாரிக்கப்பட்ட கிளாசியான தோற்றம் கொண்ட வாகனத்தை போல் அது தெரிகின்றது.

கிளாசிக் கார் ஸ்டைலில் ரெனால்டின் பறக்கும் கார்! இதோட பேர் மட்டுமில்லை பயன்பாடும் ரொம்ப வித்தியாசமா இருக்கு!

ஏர்4 வாகனத்தை பறக்கும் வாகனமாக மாற்ற அக்காரில் சக்கரங்கள் இருந்த இடத்தில் தற்போது நான்கு ப்ரொப்பல்லர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. காரின் முழு உடலும் ப்ரொப்பல்லர்களின் ரோட்டார் சட்டத்தின் மீது அமர்த்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

கிளாசிக் கார் ஸ்டைலில் ரெனால்டின் பறக்கும் கார்! இதோட பேர் மட்டுமில்லை பயன்பாடும் ரொம்ப வித்தியாசமா இருக்கு!

மேலும், இப்பறக்கும் காரில் வழக்கமான கதவுகளுக்கு பதிலாக முற்றிலும் மாறுபட்ட கதவமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. முன் பக்க உடற்கூடு தூக்குவதன் வாயிலாக பறக்கும் காருக்குள் நுழைவது போன்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏர்4 ஓர் மின்சார வாகனம் ஆகும்.

கிளாசிக் கார் ஸ்டைலில் ரெனால்டின் பறக்கும் கார்! இதோட பேர் மட்டுமில்லை பயன்பாடும் ரொம்ப வித்தியாசமா இருக்கு!

இவ்வாகனத்தில் 22,000 mAh லித்தியம் பாலிமர் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த பேட்டரிகள் ஒட்டுமொத்தமாக 90,000 mAh பவரை வெளிப்படுத்தும். கிடைமட்டமாக 26m/s எனும் வேகத்தில் பறக்க இதுவே போதுமானது. தொடக்கத்தில் 45 டிகிரியிலும், அதிகபட்சமாக 70 டிகிரி வரையிலும் சாயும். 700 மீ உயரத்திலேயே இது 14m/s எனும் வேகத்தில் பறக்கும்.

கிளாசிக் கார் ஸ்டைலில் ரெனால்டின் பறக்கும் கார்! இதோட பேர் மட்டுமில்லை பயன்பாடும் ரொம்ப வித்தியாசமா இருக்கு!

ஆனால், பாதுகாபாப்பு காரணம் காட்டி 4m/s எனும் வேகத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் என நிறுவனம் கறுகின்றது. இத்தகைய அதிகபட்ச திறன்களுடனேயே ரெனால்ட் ஏர்4 உருவாகியிருக்கின்றது. ஏர்4 பறக்கும் கார் அதிகபட்சமாக 380 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை ஏற்றி செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது. ரெனால்ட் ஏர்4 வடிவமைப்பு, பொறியியல் மற்றும் அசெம்பிள் செய்தல் உள்ளிட்ட அனைத்தும் ஃபிரான்ஸ் நாட்டில் செய்யப்பட்டுள்ளன.

கிளாசிக் கார் ஸ்டைலில் ரெனால்டின் பறக்கும் கார்! இதோட பேர் மட்டுமில்லை பயன்பாடும் ரொம்ப வித்தியாசமா இருக்கு!

ரெனால்ட் நிறுவனத்தின் கைகர் மற்றும் க்விட் கார் மாடல்கள் இந்தியாவில் விற்பனையில் வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கின்றன. அண்மையில் நான்கு லட்சம் யூனிட் விற்பனை என்ற புதிய வரலாற்று சாதனையை இக்கார் பெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்திய சந்தையில் இக்கார் கடந்த 2015ம் ஆண்டே முதன் முறையாக இக்கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. விற்பனைக்கு வந்து ஆறு வருடங்களுக்கு உள்ளாகவே ஆகின்ற நிலையில் நான்கு லட்சம் யூனிட்டிற்கு அதிகமான விற்பனை எண்ணிக்கையைப் பெற்று இந்திய வாகன சந்தையையே க்விட் மிரள வைத்திருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault reveals flying car air4 here is full details
Story first published: Friday, November 26, 2021, 18:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X