புதிய டிசைனில் மாற்றப்படும் ரெனால்ட் பிராண்டின் லோகோ!! இதுவும் நல்லாருக்கே...

அடுத்த 2022ஆம் ஆண்டில் நிறுவனத்தின் லோகோவை மாற்ற முடிவு செய்துள்ளதாக பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் வாயிலாக இந்த நிறுவனத்தில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன உள்ளிட்ட விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய டிசைனில் மாற்றப்படும் ரெனால்ட் பிராண்டின் லோகோ!! இதுவும் நல்லாருக்கே...

ஃபோக்ஸ்வேகன், கியா, பியாஜியோட், நிஸான், ஓப்பல், மஸாராட்டி போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் லோகோக்களை ஒன்றன்பின் ஒன்றாக மாற்றி வருவதை கடந்த சில வருடங்களாக பார்த்து வருகிறோம்.

புதிய டிசைனில் மாற்றப்படும் ரெனால்ட் பிராண்டின் லோகோ!! இதுவும் நல்லாருக்கே...

இந்த வகையில் பிரெஞ்சு நாட்டை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ரெனால்ட்டும் அடுத்த 2022ல் பிராண்ட் லோகோவை மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய லோகோவை ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே ஐந்து கார் மாதிரிகளுடன் கடந்த ஜனவரி மாதத்திலேயே வெளியிட்டு இருந்தது.

புதிய டிசைனில் மாற்றப்படும் ரெனால்ட் பிராண்டின் லோகோ!! இதுவும் நல்லாருக்கே...

ஆனால் அதன்பின் லோகோ டிசைன் எப்போது மாற்றப்படவுள்ளது என்பது குறித்த விபரங்களை வெளியிடாமல் இருந்த இந்த பிரெஞ்சு ஆட்டோமொபைல் நிறுவனத்தில் இருந்து தற்போது லோகோ மாற்றம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. ரெனால்ட் பிராண்டின் புதிய லோகோ, இரு வைர வடிவங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டதுபோல் உள்ளது.

புதிய டிசைனில் மாற்றப்படும் ரெனால்ட் பிராண்டின் லோகோ!! இதுவும் நல்லாருக்கே...

ரெனால்டின் தற்போதை லோகோவும் கிட்டத்தட்ட இவ்வாறு தான் உள்ளது. நமக்கு தெரிந்தவரை புதிய லோகோ ரெனால்ட்டின் மெகானே இ-விஷன் கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்படும் புதிய காரில் முதலாவதாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டிசைனில் மாற்றப்படும் ரெனால்ட் பிராண்டின் லோகோ!! இதுவும் நல்லாருக்கே...

இந்த ரெனால்ட் கார் தற்சமயம் ஐரோப்பாவில் சோதனைகளில் உள்ளது. புதிய லோகோவை வடிவமைத்த ரெனால்ட் வடிவமைப்பு பிரிவின் இயக்குனர் கில்லஸ் விடல் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், நிறுவனத்தின் (ரெனால்ட்) அனைத்து கார்களும் 2024ஆம் ஆண்டிற்குள்ளாக புதிய லோகோவிற்கு மாற்றப்படவுள்ளன என்றார்.

புதிய டிசைனில் மாற்றப்படும் ரெனால்ட் பிராண்டின் லோகோ!! இதுவும் நல்லாருக்கே...

1900களில் இருந்து லோகோ-க்களை அவ்வப்போது மாற்றிவரும் ரெனால்ட்டின் தற்போதைய லோகோ 2015ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 9வது முறையாக லோகோவின் டிசைனில் ரெனால்ட் நிறுவனம் மாற்றத்தை கொண்டுவருகிறது.

புதிய டிசைனில் மாற்றப்படும் ரெனால்ட் பிராண்டின் லோகோ!! இதுவும் நல்லாருக்கே...

2019ல் இருந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக தீவிர யோசனைகளுக்கு பின்னணியில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ரெனால்ட் லோகோ மிகவும் எளிமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் தோற்றமளிக்கிறது. லோகோவில் கையொப்பமோ அல்லது நிறமோ இல்லை என்பதால், மாறிவரும் காலத்திற்கு ஏற்ப இந்த லோகோவை எத்தனை ஆண்டிற்கு வேண்டுமானலும் பயன்படுத்தலாம், விரைவாக பழமையாக வாய்ப்பில்லை.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault to change its logo in 2022. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X