மலிவு விலை ரெனால்ட் ட்ரைபர் ரொம்ப பாதுகாப்பான காராம்... 4 நட்சத்திர ரேட்டிங்கை வழங்கிய குளோபல் என்சிஏபி!!

மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் பாதுகாப்புகுறித்து செய்யப்பட்ட ஆய்வில் நான்கு நட்சத்திர ரேட்டிங்கை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலிவு விலை ரெனால்ட் ட்ரைபர் ரொம்ப பாதுகாப்பான காராம்... 4 நட்சத்திர ரேட்டிங்கை வழங்கிய குளோபல் என்சிஏபி!!

இந்தியாவின் மலிவு விலை எம்பிவி காரான ரெனால்ட் ட்ரைபர் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார் என்ற மகுடத்தைச் சூடியிருக்கின்றது. ரெனால்ட் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த காராக ஏழு இருக்கைகள் கொண்ட இந்த ட்ரைபர் எம்பிவி இருக்கின்றது.

மலிவு விலை ரெனால்ட் ட்ரைபர் ரொம்ப பாதுகாப்பான காராம்... 4 நட்சத்திர ரேட்டிங்கை வழங்கிய குளோபல் என்சிஏபி!!

இக்காரையே மிக சமீபத்தில் குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தியது. அப்போது கிடைத்த தகவல்களையே நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கின்றது. இந்த தகவல்களின் அடிப்படையிலேயே நாட்டின் விலைக் குறைந்த ரெனால்ட் ட்ரைபர் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார் என்பது தெரிய வந்திருக்கின்றது.

மலிவு விலை ரெனால்ட் ட்ரைபர் ரொம்ப பாதுகாப்பான காராம்... 4 நட்சத்திர ரேட்டிங்கை வழங்கிய குளோபல் என்சிஏபி!!

நான்கு நட்சத்திரங்கள் பாதுகாப்பு திறன் கொண்ட கார் குளோபல் என்சிஏபி கூறியிருக்கின்றது. பெரியவர்களுக்கான பாதுகாப்புகுறித்து செய்யப்பட்ட ஆய்வில் இந்த தர மதிப்பை ரெனால்ட் ட்ரைபர் பெற்றிருக்கின்றது. ஆனால், சிறுவர்களுக்கான பாதுகாப்பு இக்காரில் 3 நட்சத்திரங்கள் மட்டுமே இருக்கின்றன.

மலிவு விலை ரெனால்ட் ட்ரைபர் ரொம்ப பாதுகாப்பான காராம்... 4 நட்சத்திர ரேட்டிங்கை வழங்கிய குளோபல் என்சிஏபி!!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் குறைந்த விலை இக்கார் இத்தகைய தரத்தைப் பெற்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த தர சான்றின் வாயிலாக நாட்டின் பாதுகாப்பு திறன் கார்களின் பட்டியலில் ரெனால்ட் ட்ரைபரும் இணைந்துள்ளது.

மலிவு விலை ரெனால்ட் ட்ரைபர் ரொம்ப பாதுகாப்பான காராம்... 4 நட்சத்திர ரேட்டிங்கை வழங்கிய குளோபல் என்சிஏபி!!

இதுகுறித்து ரெனால்ட் இந்தியாவிற்கான தலைமை நிர்வாக அதிகாரி வெங்கட்ராம் மாமிலப்பள்ளே கூறியதாவது, "இந்தியாவில் ரெனால்ட் நிறுவனத்திற்கு இது ஒரு பெருமைமிக்க தருணம். ஏனெனில், இந்தியாவில் இந்தியர்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதே ட்ரைபர். இந்த கார் 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்றிருப்பது, இந்திய வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது" என்றார்.

மலிவு விலை ரெனால்ட் ட்ரைபர் ரொம்ப பாதுகாப்பான காராம்... 4 நட்சத்திர ரேட்டிங்கை வழங்கிய குளோபல் என்சிஏபி!!

ஜெர்மனியில் அமைந்துள்ள ஏடிஏசி கிராஷ் டெஸ்ட் லேப்பில் வைத்தே ரெனால்ட் ட்ரைபர் காரை குளோபல் என்சிஏபி மோதல் வினைக்கு உட்படுத்தியிருக்கின்றது. இந்த ஆய்வின்போது மணிக்கு 64 கிமீ எனும் வேகத்தில் இயக்கி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. அப்போது கிடைத்த தகவலை நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கின்றது.

மலிவு விலை ரெனால்ட் ட்ரைபர் ரொம்ப பாதுகாப்பான காராம்... 4 நட்சத்திர ரேட்டிங்கை வழங்கிய குளோபல் என்சிஏபி!!

காரின் முகப்பு விபத்து பரிசோதனையின்போது பெரியளவில் சேதமடைந்திருக்கின்றது. ஆனாலும், அதனால் எந்தவிதமான பெரிய பாதிப்புகளும் உட்பகுதியில் மனிதனுக்கு பதிலாக வைக்கப்பட்டிருந்த டம்மி பொம்மைகளுக்கு எதுவும் ஆகவில்லை. குறிப்பாக, டிரைவரைக் காட்டிலும் கோ-டிரைவர் இருக்கும் பயணி டம்மி குறைந்தளவு சேதங்களை மட்டுமே சந்தித்திருக்கின்றது.

மலிவு விலை ரெனால்ட் ட்ரைபர் ரொம்ப பாதுகாப்பான காராம்... 4 நட்சத்திர ரேட்டிங்கை வழங்கிய குளோபல் என்சிஏபி!!

அதேசமயம், டிரைவரின் தலை, கழுத்து மற்றும் கால்கள் ஆகிய பகுதிகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் காராக இருக்கின்றது. ஆகையால், ட்ரைபரின் உடற்கூடு மிக உறுதியானது என்ற தர மதிப்பைப் பெற்றிருக்கின்றது. எனவே, இக்காரின் விற்பனை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலிவு விலை ரெனால்ட் ட்ரைபர் ரொம்ப பாதுகாப்பான காராம்... 4 நட்சத்திர ரேட்டிங்கை வழங்கிய குளோபல் என்சிஏபி!!

ரெனால்ட் நிறுவனத்தின் உயர் ரக கார் மாடல்களில் சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் சிறுவர்கள் இருக்கை, மும்முனை சீட் பெல்ட், ஏபிஎஸ், இரட்டை ஏர் பேக்குகள், பின் பகுதியில் பார்க்கிங் சென்சார் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட அம்சங்கள் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் ரூ. 5.30 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் உயர் நிலை வேரியண்ட் ரூ. 7.65 லட்சத்திற்கு விற்பனைக்குக் கிடைக்கின்றது. இக்காரை முதல் முறையாக 2019ம் ஆண்டிலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Renault Triber Gets 4 Star Safety Rating From Global NCAP. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X