Just In
- 1 hr ago
பார்ட்-டைம் ஆட்டோ டிரைவராக மாறிய 21 வயது இளம்பெண்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா பாராட்டுவீங்க...
- 1 hr ago
இந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!
- 3 hrs ago
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- 3 hrs ago
2021 டொயோட்டா ஃபார்ச்சூனரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! கார் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது
Don't Miss!
- Movies
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
- News
ஜனவரி 27-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விழா..!
- Sports
ஐசிசி டெஸ்ட் தரவரிசை... 2வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்... முதலிடத்திற்கு தாவ திட்டம்!
- Lifestyle
செட்டிநாடு வரமிளகாய் சட்னி
- Finance
உச்சத்தில் பெட்ரோல் டீசல் விலை.. உற்பத்தி குறைவு தான் காரணம்.. தர்மேந்திர பிரதான்..!
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியர்களை கவர பிரத்யேக கார்... பிரபல நிறுவனம் அதிரடி திட்டம்... வெடவெடத்து நிற்கும் ஹூண்டாய், கியா, நிஸான்..
இந்தியர்களைக் கவர பிரத்யேகமாக கார் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக பிரபல வாகன தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக கார்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நம்மால் உணர முடிகின்றது. எனவேதான் அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களின் கவனமும் இந்த ரக வாகனங்களின் பக்கம் தற்போது திரும்பியிருக்கின்றது. சப்-4 மீட்டர் வாகன பிரிவை கலக்கி வரும் வகானங்களாக ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட் கார்கள் இருக்கின்றன.

இவற்றிற்கு டஃப் கொடுக்கும் வகையில் புதிய காரை களமிறக்க ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிறுவனம் தற்போது டபிள்யூஆர்-வி காரை இந்திய வாகனச் சந்தையின் சப்-4 மீட்டர் வாகன பிரிவில் விற்பனைச் செய்து வருகின்றது. இதற்கு பதிலாக புதிய மாடலைக் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதவாது பெரியளவில் வரவேற்பைப் பெறாத டபிள்யூஆர்-வி காரை இந்திய சந்தையில் இருந்து நீக்கிவிட்டு புதிய மாடலைக் களமிறக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம், டபிள்யூஆர்-வி காரும் முறையான சப்-4 மீட்டர் கார் அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது ஹேட்ச்பேக் கார் ஸ்டைலையும் கொண்ட காராக இருக்கிறது. இதனை பிரபல ஜாஸ் காரை தழுவியே ஹோண்டா உருவாக்கியிருக்கின்றது. இருப்பினும், ஏனோ இந்தியர்கள் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்காத நிலையேக் காணப்படுகின்றது. எனவேதான் இந்தியாவிற்கான குறிப்பாக இந்தியர்களுக்கான பிரத்யேக வடிவமைப்புடன் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை களமிறக்க ஹோண்டா திட்டமிட்டிருக்கின்றது.

இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை 2022ம் ஆண்டிற்கு நிறுவனம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை காம்பேக்ட் எஸ்யூவி-ஆக வடிவமைத்தாலும் பல்வேறு பிரீமியம் வசதிகளைக் கொண்டு அறிமுகமாகும் என தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் ஹோண்டா தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

இருப்பினும், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிக் கொண்ட பெரிய இன்ஃபோடெயின்மெனட் சிஸ்டம், அமேசான் அலெக்ஸா உதவி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் விரைவில் அறிமுகமாக உள்ள ஹோண்டாவின் புதிய காம்பேக்ட் காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்துடன், புதிய காம்பேக்ஸ் எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜின்களே எதிர்பார்க்கப்படுகின்றன. இதே எஞ்ஜிகள்தான் தற்போது டபிள்யூஆர்-வி காரில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது, அதிகபட்சமாக 90 பிஎஸ் மற்றும் 110 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக்கூடியது. ஆனால், இதைவிட கூடுதல் திறனிலேயே புதிய ஹோண்டா காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Source: Team BHP
இதன் விலை ரூ. 7 லட்சம் தொடங்கி ரூ. 11 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. சப்-4 மீட்டர் எஸ்யூவி காரின் பிரிவில் போட்டி அதிகம் என்பதால் இந்த விலையில் கிடைக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. இக்கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா, நிஸான் மேக்னைட் மற்றும் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ரெனால்ட் கிகர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.