73 வருடங்கள் கழித்து இப்போதும் இயங்கி கொண்டிருக்கும் மோரிஸ் மைனர்!! நம்ம கேரளாவில் தான் -வீடியோ

1970, 80களில் விற்பனையில் இருந்த கிளாசிக் கார் என்றதுமே நமது நினைப்பு ஹிந்துஸ்தான் அம்பாசடாருக்கு தான் செல்லும், அதில் தவறு ஒன்றுமில்லை. ஏனெனில் அம்பாசடார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டு சென்றுள்ள தாக்கம் மிக பெரியது.

73 வருடங்கள் கழித்து இப்போதும் இயங்கி கொண்டிருக்கும் மோரிஸ் மைனர்!! நம்ம கேரளாவில் தான் -வீடியோ

இத்தகைய மறக்க முடியாத கார், பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான மோரிஸின் ஆக்ஸ்ஃபோர்டு சீரிஸ் 3 செடான் மாடலில் இருந்துதான் வடிவமைக்கப்பட்டது என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

73 வருடங்கள் கழித்து இப்போதும் இயங்கி கொண்டிருக்கும் மோரிஸ் மைனர்!! நம்ம கேரளாவில் தான் -வீடியோ

ஆனால் ஹிந்துஸ்தான் அம்பாசடார் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கு முன்பே மைனர் என்ற பெயரில் மற்றொரு கார் மாடலை தயாரித்து மோரிஸ் நிறுவனம் விற்பனை செய்தது. அம்பாசடார் புயல் இந்தியாவை தாக்க வருவதற்கு முன்பே, கிட்டத்தட்ட அதே பருமனான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டதால், மோரிஸ் மைனர் காரும் அந்த சமயத்தில் பிரபலமானதாக இருந்தது.

73 வருடங்கள் கழித்து இப்போதும் இயங்கி கொண்டிருக்கும் மோரிஸ் மைனர்!! நம்ம கேரளாவில் தான் -வீடியோ

இருப்பினும் மைனர் கார்களை இந்தியாவில் தற்போது வைத்துள்ளவர்கள் என்று பார்த்தால், மிகவும் சிலர் மட்டுமே உள்ளனர். அவ்வாறு 73 வருட பழமையான மோரிஸ் மைனர் காரை வைத்திருப்பவரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

Image Courtesy: asianetnews

இந்த மைனர் கார் குறித்த வீடியோ ஆசியன்நெட் நியுஸ் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. மைனர் என்ற பெயருக்கு ஏற்ப இது சற்று சிறிய அளவிலான காராகும். இந்த காரை பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனம் 1948இல் இருந்து 1972 வரையில் விற்பனை செய்தது.

73 வருடங்கள் கழித்து இப்போதும் இயங்கி கொண்டிருக்கும் மோரிஸ் மைனர்!! நம்ம கேரளாவில் தான் -வீடியோ

இத்தனை வருடங்களில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மைனர் கார்களை மோரிஸ் நிறுவனம் தயாரித்தது என்றால் இந்த சிறிய அளவு பிரிட்டிஷ் காருக்கு எந்த அளவிற்கு வரவேற்பு அப்போது இருந்தது என்று பார்த்து கொள்ளுங்கள்.

73 வருடங்கள் கழித்து இப்போதும் இயங்கி கொண்டிருக்கும் மோரிஸ் மைனர்!! நம்ம கேரளாவில் தான் -வீடியோ

தற்போதும் கேரளாவில் பயன்பாட்டில் இருக்கும் இந்த 73 வருட பழமையான மைனரை வைத்திருக்கும் உரிமையாளருக்கு சிறு வயதில் இருந்தே விண்டேஜ் கார்களின் மீது ஆர்வம் அதிகமாம். அதனால் தான் இந்த மோரிஸ் மைனர் காரை தொடர்ந்து பராமரித்து பயன்படுத்தி வருகிறார்.

73 வருடங்கள் கழித்து இப்போதும் இயங்கி கொண்டிருக்கும் மோரிஸ் மைனர்!! நம்ம கேரளாவில் தான் -வீடியோ

கேரளா, இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த இந்த மைனர் கார் உரிமையாளரின் பெயர் சுஜித். 2-3 வருடங்களுக்கு முன்பு இந்த காரை முந்தைய உரிமையாளரிடம் இருந்து வாங்கும்போது இது பயன்பாட்டில் இல்லை, அதாவது சில பழுதுகள் இருந்தன, அதனால் காரை பயன்படுத்த முடியாமல் இருந்துள்ளது.

73 வருடங்கள் கழித்து இப்போதும் இயங்கி கொண்டிருக்கும் மோரிஸ் மைனர்!! நம்ம கேரளாவில் தான் -வீடியோ

ஆனால் சுஜித் மெக்கானிக்காக இருந்ததினால் தைரியமாக இந்த பழமையான காரை வாங்கி பழுது பார்த்து தற்போது பயன்படுத்தி வருகிறார். பழமையான கார் என்பதால் சில இடங்களில் துருப்பிடித்தல் இருந்துள்ளது, அவற்றை எல்லாம் சரிசெய்துவிட்டு இளம் நீல நிற பெயிண்ட்டை கொடுத்துள்ளார்.

73 வருடங்கள் கழித்து இப்போதும் இயங்கி கொண்டிருக்கும் மோரிஸ் மைனர்!! நம்ம கேரளாவில் தான் -வீடியோ

இந்த மோரிஸ் மைனர் கார் என்ஜினின் தற்போதைய நிலை குறித்த எந்த விபரத்தையும் ஓட்டுனர் இந்த வீடியோவில் வெளியிடவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இந்த விண்டேஜ் காரை மீண்டும் இவ்வாறான புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு கொண்டுவர இந்த புது உரிமையாளர், பாகங்களின் தட்டுப்பாட்டால் மிகவும் சிரமப்பட்டிருப்பார் என்பது மட்டும் உறுதி.

Most Read Articles
English summary
Watch 73 year-old Morris Minor car, a car that was once sold in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X