உலகின் விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் இதுதானாம்!! பில்லியனர்கள் மட்டுமே வாங்க முடியும்!

ரூ.200 கோடி கொடுத்து யாராவது ஒரே ஒரு கார் வாங்குவார்களா? ஆனால் விற்கவுள்ளது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம். போட் டெயில் என்கிற பெயரில் இந்த விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் கொண்டுவரப்படுகிறது.

உலகின் விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் இதுதானாம்!! பில்லியனர்கள் மட்டுமே வாங்க முடியும்!

நிச்சயம் இதனை பில்லியனர்கள் மட்டுமே வாங்க முடியும். நான்கு-கதவு லக்சரி காரான 2021 ரோல்ஸ்-ராய்ஸ் போட் டெயில் 19 அடி நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸின் புதிய கோச்பில்ட் ப்ரோகிராமின் அடிப்படையில் உருவாக்கப்படும் முதல் கார் இதுவாகும்.

உலகின் விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் இதுதானாம்!! பில்லியனர்கள் மட்டுமே வாங்க முடியும்!

தற்போது வரையில் விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காராக ஸ்வெப்டெயில் என்கிற பெயர் கொண்ட கார் 2017ல் 12.8 மில்லியன் பவுண்ட்-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட கிட்டத்தட்ட 92.71 கோடி ரூபாயாகும்.

உலகின் விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் இதுதானாம்!! பில்லியனர்கள் மட்டுமே வாங்க முடியும்!

இதன் தோற்றத்தில் இருந்து தான் போட் டெயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 4 வருடங்களாக இந்த காரை ரோல்ஸ் ராய்ஸின் முதன்மை வடிவமைப்பாளர்கள் மூவர் உருவாக்கி வந்துள்ளனர். உலகளவில் வெறும் இதன் மூன்று மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன.

உலகின் விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் இதுதானாம்!! பில்லியனர்கள் மட்டுமே வாங்க முடியும்!

இந்த 2021 போட் டெயிலும் சரி, முந்தைய ஸ்வெப்ட் டெயிலும் சரி முழுக்க முழுக்க ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் இரசனைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. போட் டெயிலின் பெயருக்கு ஏற்ப அதன் பின்பகுதி கிட்டத்தட்ட வேகமாக செல்லும் படகை போல் காட்சியளிக்கிறது.

உலகின் விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் இதுதானாம்!! பில்லியனர்கள் மட்டுமே வாங்க முடியும்!

காரின் பின்பகுதியில் பொருட்களை வைப்பதற்காக அழகான இரு பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கான மூடிகள் பட்டாம்பூச்சி வடிவில் திறக்கிறது. உட்புறத்திலும் இதேபோல் மைய கன்சோல் பகுதியில் பாட்டில்கள் & கிளாஸ்களை வைப்பதற்கான கூலர் வழங்கப்பட்டுள்ளது.

உலகின் விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் இதுதானாம்!! பில்லியனர்கள் மட்டுமே வாங்க முடியும்!

இது வாங்கப்படும் உரிமையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ்ட் செய்யப்படுமாம். 2021 ரோல்ஸ்-ராய்ஸ் போட் டெயில் காரின் விலையை பற்றி கூறவே இல்லை பாருங்கள், இந்த லக்சரி காரின் விலை 28 மில்லியன் டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகின் விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் இதுதானாம்!! பில்லியனர்கள் மட்டுமே வாங்க முடியும்!

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.202.8 கோடி ஆகும். இது ஸ்வெப்ட் டெயிலின் விலையை காட்டிலும் அதிகம் என்பது பார்க்கும் அனைவருக்கும் தெரியும். இவ்வாறு 200 கோடி ரூபாய்க்கும் மேலான விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதால் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள சிறு சிறு பாகங்கள் கூட மிகவும் கவனத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

உலகின் விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் இதுதானாம்!! பில்லியனர்கள் மட்டுமே வாங்க முடியும்!

இதன் உட்புற கேபின் வெப்பமாகுவதற்கு வாய்ப்புகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு ஏற்ப படலம் இதன் ஜன்னல் கண்ணாடிகளில் வழங்கப்பட்டுள்ளன. உணவு பொருட்களை வைப்பதற்கு ட்ரே-வும், இவை போதாது என்போர்க்காக ஸ்விஸ் நாட்டை சேர்ந்த போவே 1822 பிராண்டின் கடிகாரமும் போட் டெயிலில் வழங்கப்பட்டுள்ளன.

உலகின் விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் இதுதானாம்!! பில்லியனர்கள் மட்டுமே வாங்க முடியும்!

இவற்றுடன் 15-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டமும் உள்ளது. இது காரின் ப்ளாட்ஃபாரத்தை சவுண்ட் பாக்ஸாக மாடிஃபை செய்து கொள்ளக்கூடியது. ரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன், பாண்டோம் மற்றும் ப்ளாக் பேட்ஜ் கார்களில் வழங்கப்படும் வி12 6.75 லிட்டர் பை-டர்போ என்ஜின் தான் இந்த பில்லியனர்களுக்கான காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது 563எச்பி வரையில் வெளிப்படுத்தக்கூடியது.

Most Read Articles

English summary
Rolls Royce boat tail launched price Rs.200 crore most expensive car in the world.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X