ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் வாடிக்கையாளர்கள்... விற்பனையில் புதிய சாதனை...

கார் விற்பனையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் வாடிக்கையாளர்கள்... விற்பனையில் புதிய சாதனை...

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் பிரச்னையால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, ரோல்ஸ் ராய்ஸ் வாடிக்கையாளர்களை பெரிதாக பாதிக்கவில்லை என்பதை போல் தெரிகிறது. ஏனெனில் நடப்பாண்டின் முதல் காலாண்டில் சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் விற்பனையில் புதிய சாதனையை படைத்து அசத்தியுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் வாடிக்கையாளர்கள்... விற்பனையில் புதிய சாதனை...

இதன்படி நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதி தொடங்கி கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 1,380 கார்களை விற்பனை செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் 116 ஆண்டு கால வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனையாகும்.

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் வாடிக்கையாளர்கள்... விற்பனையில் புதிய சாதனை...

ஆம், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் சிறந்த காலாண்டு விற்பனை இதுதான். அத்துடன் கடந்த 2020ம் ஆண்டின் முதல் காலாண்டு உடன் ஒப்பிடும்போது நடப்பாண்டின் முதல் காலாண்டில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன கார்களின் விற்பனை 62 சதவீதம் உயர்ந்துள்ளது. இது மிகவும் சிறப்பான விற்பனை வளர்ச்சி என்பதில் சந்தேகமில்லை.

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் வாடிக்கையாளர்கள்... விற்பனையில் புதிய சாதனை...

கிட்டத்தட்ட உலகம் முழுக்க அனைத்து சந்தைகளிலும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு டிமாண்ட் உயர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, சீனா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியங்களில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு தேவை உயர்ந்து கொண்டே வருகிறது. 2021ம் ஆண்டை ரோல்ஸ் ராய்ஸ் வெற்றிகரமாக தொடங்கியுள்ள நிலையில், வரும் காலங்களில் விற்பனை இன்னும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் வாடிக்கையாளர்கள்... விற்பனையில் புதிய சாதனை...

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் அனைத்து கார்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக புதிய கோஸ்ட் மற்றும் கல்லினன் ஆகிய கார்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதில், கல்லினன் இந்தியா உள்பட உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ள எஸ்யூவி ரக கார் ஆகும்.

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் வாடிக்கையாளர்கள்... விற்பனையில் புதிய சாதனை...

சொல்லப்போனால் கல்லினன்தான், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவந்துள்ள முதல் எஸ்யூவி ரக கார் ஆகும். இந்தியர்கள் எப்போதும் எஸ்யூவி ரக கார்களை விரும்ப கூடியவர்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்த வகையில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருக்கும் இந்தியர்கள் பெரும் வரவேற்பை வழங்கி வருகின்றனர்.

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் வாடிக்கையாளர்கள்... விற்பனையில் புதிய சாதனை...

இந்தியாவில் தொழில் அதிபர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் உள்பட பலரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி கார் இருக்கிறது. இதில், பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி குறிப்பிடத்தக்கவர். முகேஷ் அம்பானி குடும்பத்தினரிடம் இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி கார்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் வாடிக்கையாளர்கள்... விற்பனையில் புதிய சாதனை...

இதில், இரண்டாவது கல்லினன் காரை முகேஷ் அம்பானி குடும்பத்தினர் சமீபத்தில்தான் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்லினன் மற்றும் கோஸ்ட் ஆகிய கார்களை தவிர, வ்ரெயித், டான் மற்றும் பாந்தம் உள்ளிட்ட கார்களையும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து கொண்டுள்ளது.

Most Read Articles

English summary
Rolls-Royce Q1 2021 Sales Report. Read in Tamil
Story first published: Saturday, April 10, 2021, 12:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X