அப்டேட் செய்யப்பட்ட 2021 Jeep Compass-இன் மாடல் எஸ் வேரியண்ட்!! முழு விபரங்கள் இங்கே!

2021 ஜீப் காம்பஸ் (Jeep Compass) எஸ்யூவி காரின் மாடல் எஸ் வேரியண்ட்டில் சில குறிப்பிடத்தக்க அப்டேட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த அப்டேட்களை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அப்டேட் செய்யப்பட்ட 2021 Jeep Compass-இன் மாடல் எஸ் வேரியண்ட்!! முழு விபரங்கள் இங்கே!

முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த அமெரிக்க எஸ்யூவி கார் பிராண்டான ஜீப், புத்துணர்ச்சியான முன்பக்கத்துடன், திருத்தியமைக்கப்பட்ட ஸ்டைல் மற்றும் கூடுதல் வசதிகளுடன் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தி இருந்தது.

அப்டேட் செய்யப்பட்ட 2021 Jeep Compass-இன் மாடல் எஸ் வேரியண்ட்!! முழு விபரங்கள் இங்கே!

ஸ்போர்ட், லாங்கிட்யூட் (O), லிமிடெட் (O) மற்றும் மாடல் எஸ் என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.17.19 லட்சத்தில் இருந்து ரூ.28.49 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அப்டேட் செய்யப்பட்ட 2021 Jeep Compass-இன் மாடல் எஸ் வேரியண்ட்!! முழு விபரங்கள் இங்கே!

இத்தகைய நிலையில் தான் தற்போது புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் தன்னிச்சையாக மடக்கக்கூடிய ஓட்டுனர் இருக்கை உள்ளிட்டவற்றுடன் 2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் மாடல் எஸ் வேரியண்ட்டை தயாரிப்பு நிறுவனம் அப்டேட் செய்துள்ளதாக டீம்பிஎச்பி செய்திதளம் மூலம் செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்டேட் செய்யப்பட்ட 2021 Jeep Compass-இன் மாடல் எஸ் வேரியண்ட்!! முழு விபரங்கள் இங்கே!

இந்த வகையில் ஜீப் காம்பஸின் டாப் வேரியண்ட்டில் 10.1 இன்ச் திரை உடன் ஐந்தாம்-தலைமுறை ஆர்1 அதிநவீன இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. நாவிகேஷன் சிஸ்டமாகவும் செயல்படக்கூடிய இந்த அப்டேட்டான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமானது ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவிற்கு இணக்கமானதாக கொண்டுவரப்பட்டுள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட 2021 Jeep Compass-இன் மாடல் எஸ் வேரியண்ட்!! முழு விபரங்கள் இங்கே!

மேலும் இந்த சிஸ்டத்தில், மொபைல் போனின் அழைப்புகள், ஆடியோ & ரேடியோ, க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் நாவிகேஷன் உள்ளிட்டவற்றை தொடுதல் இல்லாமல், குரல் மூலமாக கண்ட்ரோல் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 6 GB RAM மற்றும் 40K MIPS chipset உடன் புதிய இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட் கொண்டுவரப்பட்டுள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட 2021 Jeep Compass-இன் மாடல் எஸ் வேரியண்ட்!! முழு விபரங்கள் இங்கே!

இது முந்தைய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை காட்டிலும் வேகமாக செயல்படும் என்று ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தகைய அதிநவீன இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் 2021 ஜீப் காம்பஸ் மாடல் எஸ் வேரியண்ட் பெற்றுள்ள தானியங்கி ஓட்டுனர் இருக்கை ஆனது உட்புற கேபினின் வெப்பநிலை 26.5 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் உயர்ந்தால் தன்னிச்சையாக செயல்பாட்டிற்கு வந்துவிடும்.

அப்டேட் செய்யப்பட்ட 2021 Jeep Compass-இன் மாடல் எஸ் வேரியண்ட்!! முழு விபரங்கள் இங்கே!

ஜீப் காம்பஸ் வாகனத்தின் மாடல் எஸ் வேரியண்ட்டில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இதில் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 168 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனையும், டர்போ-பெட்ரோல் என்ஜின் 156 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட 2021 Jeep Compass-இன் மாடல் எஸ் வேரியண்ட்!! முழு விபரங்கள் இங்கே!

பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக கொடுக்கப்படுகின்றன. மேலும் இதில் டீசல் என்ஜின் உடன் மட்டும் 2-சக்கர-ட்ரைவ் மற்றும் 4-சக்கர-ட்ரைவ் தேர்வுகள் காம்பஸ் எஸ்யூவி மாடலில் வழங்கப்படுகின்றன.

அப்டேட் செய்யப்பட்ட 2021 Jeep Compass-இன் மாடல் எஸ் வேரியண்ட்!! முழு விபரங்கள் இங்கே!

தொழிற்நுட்ப வசதிகளை பொறுத்தவரையில், 2021 ஜீப் காம்பஸ் மாடல் எஸ் ட்ரிம்-இல் தன்னிச்சையாக செயல்படக்கூடிய ஹெட்லேம்ப்கள், எல்இடி பிரோஜெக்டர் டெயில்லேம்ப்கள், 18 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், ஆட்டோமேட்டிக் வைபர்கள், பனோராமிக் சன்ரூஃப் உடன் இரட்டை நிறத்தில் பெயிண்ட் தேர்வுகளை பெறுகிறது.

அப்டேட் செய்யப்பட்ட 2021 Jeep Compass-இன் மாடல் எஸ் வேரியண்ட்!! முழு விபரங்கள் இங்கே!

இந்த விலைமிக்க காம்பஸ் வேரியண்ட்டில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் 9-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், 360-டிகிரி பார்க்கிங் கேமிரா, வயர் இல்லா சார்ஜர், மெமரி செயல்பாட்டுடன் 8-வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, தன்னிச்சையான டிம்-ஆகக்கூடிய IRVMகள், லெதரில் உள்ளமைவு, இரட்டை நிறத்தில் டேஸ்போர்டு மற்றும் ஜீப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதை 4X4 சிஸ்டம் (டீசல் ஆட்டோமேட்டிக்கில் மட்டும்) உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.

அப்டேட் செய்யப்பட்ட 2021 Jeep Compass-இன் மாடல் எஸ் வேரியண்ட்!! முழு விபரங்கள் இங்கே!

ஜீப் காம்பஸின் ஆரம்ப விலையே ரூ.17.19 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. ஆனால் காம்பஸ் மாடல் எஸ் வேரியண்ட்டின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.24.84 லட்சத்தில் இருந்தே துவங்குகிறது. இந்தியாவில் விற்பனையில் ஜீப் காம்பஸிற்கு எம்ஜி ஹெக்டர், ஹூண்டாய் டக்ஸன், மஹிந்திரா எக்ஸ்யூவி500, டாடா ஹெரியர் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டி-ராக் உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep #jeep compass
English summary
2021 Jeep Compass Model S Variant Updated – Details Here.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X