அமெரிக்கர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்!! விற்பனைக்கு வரும் லிமிடெட் எடிசன் ஷெல்பி கார்கள்!

ஷெல்பி அமெரிக்கன் நிறுவனத்தின் நிறுவனரின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள 98 லிமிடெட் எடிசன் கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அமெரிக்கர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்!! விற்பனைக்கு வரும் லிமிடெட் எடிசன் ஷெல்பி கார்கள்!

அமெரிக்க அதிசெயல்திறன் வாகன தயாரிப்பு நிறுவனமான ஹெல்பி அமெரிக்கனை மறைந்த கரோல் ஷெல்பி என்பவர் நிறுவினார். அவரது 98வது பிறந்த நாளை முன்னிட்டு தான் தற்போது ஃபோர்டு மஸ்டங்கை அடிப்பிடையிலான ஷெல்பி கார்களில் 98 லிமிடெட்-எடிசன்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன.

அமெரிக்கர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்!! விற்பனைக்கு வரும் லிமிடெட் எடிசன் ஷெல்பி கார்கள்!

இந்த லிமிடெட் எடிசன்களாக ஷெல்பி ஜிடி, ஷெல்பி ஜிடி500எஸ்இ, ஷெல்பி சூப்பர் ஸ்னேக் மற்றும் சூப்பர் ஸ்னேக் ஸ்பீடுஸ்டர் உள்ளிட்ட கார்கள் அடங்குகின்றன. லே மேன்ஸ் 24 மணிநேர போட்டியை தற்போது வரையில் வென்ற ஒரே ஒரு நபராக விளங்கும் கரோல் ஷெல்பி கார் பந்தயங்களின் லெஜண்ட்டாக புகழப்பட்டார்.

அமெரிக்கர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்!! விற்பனைக்கு வரும் லிமிடெட் எடிசன் ஷெல்பி கார்கள்!

1966 மற்றும் 67களில் ஃபோர்டு ஜிடி ப்ரோகிராமின் குழு தலைவராக விளங்கிய கரோல் ஷெல்பி பழமையான பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் நிறுவனமான ஏசி கோப்ராவுடன் பணியாற்றியதாலும், ஃபோர்டு மோட்டார் நிறுவனத்துடன் கூட்டணி வைத்து மஸ்டங் போன்ற செயல்திறன்மிக்க கார்களை வடிவமைத்ததினாலும் உலகம் முழுவதிலும் அறியப்பட்டவர்.

அமெரிக்கர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்!! விற்பனைக்கு வரும் லிமிடெட் எடிசன் ஷெல்பி கார்கள்!

ஷெல்பி சூப்பர் ஸ்னேக் லிமிடெட் எடிசன் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், கரோல் ஷெல்பி இப்போது உயிருடன் இருந்தால் நிச்சயம் இந்த காரை ஓட்டி பார்க்க ஆசைப்படுவார். தோற்றத்தை பொறுத்தவரையில் இது கிட்டத்தட்ட உலகளவில் பிரபலமான ஃபோர்டு மஸ்டங்கை ஒத்து காணப்படுகிறது.

அமெரிக்கர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்!! விற்பனைக்கு வரும் லிமிடெட் எடிசன் ஷெல்பி கார்கள்!

விப்பிள் சூப்பர் சார்ஜர் உடன் இந்த காரில் வழங்கப்பட்டுள்ள 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு கொயோட் வி8 என்ஜின் 825 எச்பி பவரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது. இந்த என்ஜினின் உதவியுடன் இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிட முடியும்.

அமெரிக்கர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்!! விற்பனைக்கு வரும் லிமிடெட் எடிசன் ஷெல்பி கார்கள்!

இந்த என்ஜின் உடன் வழங்கப்படும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் என்ஜினின் ஆற்றலை பின் சக்கரங்களுக்கு வழங்கும். இந்த காரில் அகலமான டயர்களுடன் சக்கரங்கள் 20 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்கர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்!! விற்பனைக்கு வரும் லிமிடெட் எடிசன் ஷெல்பி கார்கள்!

அதேநேரம், ஷெல்பி சூப்பர் ஸ்னேக் ஸ்பீடுஸ்டர் காரில் ஆட்டோமேட்டிக் உலோக மேற்கூரை வழங்கப்பட்டுள்ளது. இந்த லிம்டெட் எடிசன்களில் மிக மலிவானதாக ஷெல்பி ஜிடி 480 எச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் உடன் விற்பனை செய்யப்படவுள்ளது.

அமெரிக்கர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்!! விற்பனைக்கு வரும் லிமிடெட் எடிசன் ஷெல்பி கார்கள்!

480 எச்பி போதாது என்பவர்கள் இந்த காரை ஃபோர்டு செயல்திறன் சூப்பர்சார்ஜர் தொகுப்புடன் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷெல்பி ஜிடி500 எஸ்இ (சிக்னெச்சர் எடிசன்) அதிகப்பட்சமாக 800 எச்பி ஆற்றலில் இயங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்!! விற்பனைக்கு வரும் லிமிடெட் எடிசன் ஷெல்பி கார்கள்!

எக்ஸ்ட்ரா பூஸ்ட், சஸ்பென்ஷன், அதிக வெப்பம் பரிமாற்றம் & இண்டர்கூலர் மற்றும் புதிய ஆண்டி-ரோல் பார்களுக்காக சூப்பர்சார்ஜர் கப்பியை பெற்றுள்ளது. விலை குறைவான ஷெல்பி ஜிடி லிமிடெட் எடிசன் காரின் விலை அமெரிக்காவில் 62,310 டாலர்களாக (ரூ.45.2 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்!! விற்பனைக்கு வரும் லிமிடெட் எடிசன் ஷெல்பி கார்கள்!

அதுவே ஷெல்பி ஜிடி500 எஸ்இ, ஷெல்பி சூப்பர் ஸ்னேக் மற்றும் சூப்பர் ஸ்னேக் ஸ்பீடுஸ்டர் கார்களின் விலைகள் முறையே 1,04,900 அமெரிக்க டாலர்கள் (ரூ.76.1 லட்சம்), 1,33,785 அமெரிக்க டாலர்கள் (ரூ.97.07 லட்சம்) மற்றும் 1,38,780 அமெரிக்க டாலர்களாக (ரூ.1 கோடி மேனுவல் வெர்சனில்) நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதில் சூப்பர் ஸ்னேக் மாடல்கள் ஏப்ரல் முதல் அமெரிக்காவில் ஃபோர்டு டீலர்ஷிப் மையத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Shelby American Unveils 98 Limited-Edition Shelbys On The 98th Birth Anniversary Of Their Late Founder carrol shelby.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X