நவீன கார்களின் மூளை! மைக்ரோசிப்களுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது? இதனால் உங்களுக்கு வரும் பிரச்னைகள் என்னென்ன?

உலக அளவில் மைக்ரோசிப்களுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது? இதனால் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் என்னென்ன பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

நவீன கார்களின் மூளை! மைக்ரோசிப்களுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது? இதனால் உங்களுக்கு வரும் பிரச்னைகள் என்னென்ன?

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஆட்டோமொபைல் துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியா மட்டுமின்றி, உலகின் பெரும்பாலான நாடுகளிலும் வாகனங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த பிரச்னையில் இருந்து ஆட்டோமொபைல் துறை மீண்டு வந்துள்ள நிலையில், தற்போது மற்றொரு பிரச்னை எழுந்துள்ளது.

நவீன கார்களின் மூளை! மைக்ரோசிப்களுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது? இதனால் உங்களுக்கு வரும் பிரச்னைகள் என்னென்ன?

மைக்ரோசிப்களுக்கு (Microchip) ஏற்பட்டுள்ள பற்றாக்குறைதான் இந்த புதிய பிரச்னை. இதனால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தற்போது வாகன உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி போன்ற கார்களின் உற்பத்தி, இந்த பிரச்னை காரணமாகதான் பாதிக்கப்பட்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

நவீன கார்களின் மூளை! மைக்ரோசிப்களுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது? இதனால் உங்களுக்கு வரும் பிரச்னைகள் என்னென்ன?

மைக்ரோசிப் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் தற்போது கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. உற்பத்தியை நிறுத்தி வைப்பது, தொழிற்சாலையை மூடுவது போன்ற நெருக்கடிகளுக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

நவீன கார்களின் மூளை! மைக்ரோசிப்களுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது? இதனால் உங்களுக்கு வரும் பிரச்னைகள் என்னென்ன?

இதன் காரணமாக வாகனங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் டெலிவரி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வரும் மைக்ரோசிப் பற்றாக்குறை எதனால் ஏற்பட்டது? இந்த பிரச்னை ஆட்டோமொபைல் துறையை எவ்வாறு பாதித்து வருகிறது? என்பது உள்பட உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் இந்த செய்தியில் விடை காணலாம்.

நவீன கார்களின் மூளை! மைக்ரோசிப்களுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது? இதனால் உங்களுக்கு வரும் பிரச்னைகள் என்னென்ன?

காரணங்கள்:

1. ஊரடங்கு

கடந்த 2020ம் ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதும், அதற்கு பிறகும், லேப்டாப்கள், செல்போன்கள் போன்றவற்றுக்கான தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. பலர் வீட்டில் இருந்தே வேலை செய்வதாலும், மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதாலும்தான் லேப்டாப்கள மற்றும் செல்போன்களுக்கான தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது.

நவீன கார்களின் மூளை! மைக்ரோசிப்களுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது? இதனால் உங்களுக்கு வரும் பிரச்னைகள் என்னென்ன?

இதன் காரணமாக லேப்டாப்கள் மற்றும் செல்போன்களை அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக மைக்ரோசிப்களுக்கான தேவையும் உயர்ந்தது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மைக்ரோசிப் தயாரிப்பாளர்கள் அதன் உற்பத்தியை அதிகரித்தனர். அதே நேரத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு வாகன உற்பத்தியை தொடங்கின.

நவீன கார்களின் மூளை! மைக்ரோசிப்களுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது? இதனால் உங்களுக்கு வரும் பிரச்னைகள் என்னென்ன?

இதன் காரணமாக ஆட்டோமொபைல் துறைக்கு தேவையான மைக்ரோசிப்களுக்கான தேவை உயர்ந்தது. ஆனால் சிப் உற்பத்தியாளர்களால், ஆட்டோமொபைல் துறைக்கான செமி கண்டக்டர்களை தேவையான அளவிற்கு உற்பத்தி செய்ய முடியாமல் போனது. இதன் விளைவாகதான் தற்போது உலகம் முழுவதும் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நவீன கார்களின் மூளை! மைக்ரோசிப்களுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது? இதனால் உங்களுக்கு வரும் பிரச்னைகள் என்னென்ன?

2. சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான தடை

தகவல் திருட்டு தொடர்பாக எழுந்த புகாரில், சீனாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்கா அதிரடியாக தடை விதித்தது. இந்த நிகழ்வுகள் உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறோம். இந்த தடைகள் காரணமாகவும், மைக்ரோசிப்களுக்கான பற்றாக்குறை மேலும் உயர்ந்து விட்டது.

நவீன கார்களின் மூளை! மைக்ரோசிப்களுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது? இதனால் உங்களுக்கு வரும் பிரச்னைகள் என்னென்ன?

3. புயல்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில், குளிர்காலத்தில் ஏற்பட்ட கடுமையான புயலால், சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ், என்எக்ஸ்பி செமிகண்டக்டர்கள் மற்றும் இன்ஃபினியான் போன்ற முன்னணி மைக்ரோசிப் உற்பத்தியாளர்கள் தங்களது ஆலைகளை தற்காலிகமாக மூடியாக வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டன.

நவீன கார்களின் மூளை! மைக்ரோசிப்களுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது? இதனால் உங்களுக்கு வரும் பிரச்னைகள் என்னென்ன?

இதில், என்எக்ஸ்பி மற்றும் இன்ஃபினியான் ஆகிய இரண்டு நிறுவனங்களும், ஆட்டோமொபைல் துறைக்கு தேவையான சிப்களை சப்ளை செய்யும் முக்கியமான நிறுவனங்கள் ஆகும். ஆட்டோமொபைல் துறையின் வினியோக சங்கிலியில் மிகவும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதற்கு, இந்த புயல் முக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைந்து விட்டது.

நவீன கார்களின் மூளை! மைக்ரோசிப்களுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது? இதனால் உங்களுக்கு வரும் பிரச்னைகள் என்னென்ன?

தாக்கம்

1. உற்பத்தி பாதிப்பு/டெலிவரி தாமதம்

இன்றைய நவீன வாகனங்கள் சிப்களை பெரிதும் சார்ந்துள்ளன. சிறப்பான எரிபொருள் சிக்கனத்திற்காக இன்ஜின்களின் கம்ப்யூட்டர் மேனேஜ்மெண்ட் முதல் டிரைவர்களுக்கு உதவிகரமாக உள்ள எமர்ஜென்ஸி பிரேக்கிங் வரை அனைத்தும் சிப்களால்தான் கட்டுப்படுத்தப்படுகிறது. நவீன கார்களின் மூளை என அவற்றை கூற முடியும்.

நவீன கார்களின் மூளை! மைக்ரோசிப்களுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது? இதனால் உங்களுக்கு வரும் பிரச்னைகள் என்னென்ன?

மைக்ரோசிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் கார்களை சரியாக உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஜென்ரல் மோட்டார்ஸ், ஃபோர்டு, டொயோட்டா மற்றும் நிஸான் போன்ற நிறுவனங்கள்தான், இந்த பற்றாக்குறையால் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன.

நவீன கார்களின் மூளை! மைக்ரோசிப்களுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது? இதனால் உங்களுக்கு வரும் பிரச்னைகள் என்னென்ன?

இந்த பிரச்னையை எதிர்கொள்ளும் விதமாக உற்பத்தி குறைப்பு, தொழிற்சாலைகளை மூடுவது போன்ற நடவடிக்கைகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. கார்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் கார்களை டெலிவரி செய்ய முடியாமல் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

நவீன கார்களின் மூளை! மைக்ரோசிப்களுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது? இதனால் உங்களுக்கு வரும் பிரச்னைகள் என்னென்ன?

2. சிப்கள் இல்லாமல் கார்கள் விற்பனை

பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், சிப்கள் இல்லாமல் கார்கள் உற்பத்தி செய்யப்படும் என சில நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சிப்கள் கிடைத்த பிறகு, கார்களில் பொருத்தி தரப்படும். அவை டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கே கார் உரிமையாளர்கள் பொருத்தி கொள்ளலாம். அதாவது சிப்கள் இல்லாமலேயே கார்கள் டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும்.

நவீன கார்களின் மூளை! மைக்ரோசிப்களுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது? இதனால் உங்களுக்கு வரும் பிரச்னைகள் என்னென்ன?

சிப்கள் கிடைத்த பிறகு, டீலர்ஷிப்களில் கார் உரிமையாளர்கள் அவற்றை பொருத்தி கொள்ளலாம். இதுபோன்ற நடவடிக்கைகள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றன. முழு திருப்தி இல்லாமல் கார்களை பெற வேண்டிய கட்டாயத்திற்கு வாடிக்கையாளர்கள் ஆளாகியுள்ளனர்.

நவீன கார்களின் மூளை! மைக்ரோசிப்களுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது? இதனால் உங்களுக்கு வரும் பிரச்னைகள் என்னென்ன?

3. விலை உயர்வு

சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அவற்றை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளன. இதன் காரணமாக உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், வாகனங்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

English summary
Shortage Of Microchips And Its Impact On The Global Automobile Industry: Here Are All The Details. Read in Tamil
Story first published: Friday, April 2, 2021, 23:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X