ஒரே நாளில் 50 ஸ்கோடா கார்கள் டெலிவிரி!! குஷாக் எஸ்யூவி காருக்கு குவியும் முன்பதிவுகள்!

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குஷாக்கிற்கான முன்பதிவுகள் இதுவரையில் 3,000-ஐ கடந்து சென்று கொண்டிருப்பதாகவும், பெங்களூரில் டீலர்ஷிப் ஒன்றில் ஒரே நாளில் மொத்தம் 50 ஸ்கோடா கார்கள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஒரே நாளில் 50 ஸ்கோடா கார்கள் டெலிவிரி!! குஷாக் எஸ்யூவி காருக்கு குவியும் முன்பதிவுகள்!

மிக பெரிய எதிர்பார்ப்பிற்கு ஒரு முடிவாக ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கார் கடந்த 2021 ஜூன் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது இந்த ஸ்கோடா காருக்கான முன்பதிவுகள் நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒரே நாளில் 50 ஸ்கோடா கார்கள் டெலிவிரி!! குஷாக் எஸ்யூவி காருக்கு குவியும் முன்பதிவுகள்!

முன்பதிவுகள் குவிந்து வருவதால் சில டீலர்ஷிப்கள் மெகா டெலிவிரிகளை அறிவித்து, முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் குஷாக் கார்களை டெலிவிரி செய்து வருகின்றன. இந்த வகையில் தான் பிபிஎஸ் பெங்களூர் என்ற பெங்களூரை சேர்ந்த பிரபலமான கார் டீலர்ஷிப் ஷோரூம் 50 ஸ்கோடா வாகனங்களை ஒரே நாளில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்துள்ளது.

ஒரே நாளில் 50 ஸ்கோடா கார்கள் டெலிவிரி!! குஷாக் எஸ்யூவி காருக்கு குவியும் முன்பதிவுகள்!

இது தொடர்பான படத்தினை தான் மேலே காண்கிறீர்கள். இதில் மற்ற ஸ்கோடா கார்களுடன் புதிய குஷாக்கும் இடம்பெற்றிருப்பதை படத்தில் காணலாம். இதற்கிடையில் நாடு முழுவதும் குஷாக் மீது நடைபெறும் முன்பதிவுகள் எண்ணிக்கை வெற்றிகரமாக 3 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஒரே நாளில் 50 ஸ்கோடா கார்கள் டெலிவிரி!! குஷாக் எஸ்யூவி காருக்கு குவியும் முன்பதிவுகள்!

ரூ.10.49 லட்சத்தில் இருந்து ரூ.17.59 லட்சம் வரையில் எக்ஸ்ஷோரூம் விலையினை பெற்றுள்ள ஸ்கோடா குஷாக் ஆக்டிவ், அம்பிஷன் மற்றும் ஸ்டைல் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. குஷாக்கில் இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஒரே நாளில் 50 ஸ்கோடா கார்கள் டெலிவிரி!! குஷாக் எஸ்யூவி காருக்கு குவியும் முன்பதிவுகள்!

இதில் ஒன்றான 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டிஎஸ்ஐ டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 5,500 ஆர்பிஎம்-இல் 108 பிஎச்பி மற்றும் 1,750 ஆர்பிஎம்-இல் 175 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை பெறலாம்.

ஒரே நாளில் 50 ஸ்கோடா கார்கள் டெலிவிரி!! குஷாக் எஸ்யூவி காருக்கு குவியும் முன்பதிவுகள்!

இரண்டாவது என்ஜின் தேர்வான 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினின் மூலம் 6,000 ஆர்பிஎம்-இல் 148 பிஎச்பி மற்றும் 3,500 ஆர்பிஎம்-இல் 250 என்எம் டார்க் திறன் வரையில் பெற முடியும். இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளாக வழங்கப்படுகிறது.

ஒரே நாளில் 50 ஸ்கோடா கார்கள் டெலிவிரி!! குஷாக் எஸ்யூவி காருக்கு குவியும் முன்பதிவுகள்!

இவற்றில் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடனான ஸ்கோடா குஷாக் கார்கள் மட்டுமே தற்போதைக்கு வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்படுகின்றன. 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் குஷாக்கை முன்பதிவு செய்பவர்களுக்கு வாகனம் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருந்து தான் டெலிவிரி செய்யப்பட உள்ளதாக முன்னதாகவே ஸ்கோடா நிறுவனம் கூறியிருந்தது.

ஒரே நாளில் 50 ஸ்கோடா கார்கள் டெலிவிரி!! குஷாக் எஸ்யூவி காருக்கு குவியும் முன்பதிவுகள்!

இந்த நிலையில் சமீபத்தில் 1.5 லி டிஎஸ்ஐ குஷாக் கார்களின் டெலிவிரி பணிகள் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதியில் இருந்து துவங்கப்பட உள்ளது என ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் சிஇஓ ஸாக் ஹோலிஸ் டுவிட்டரில் பின்தொடருபவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

ஒரே நாளில் 50 ஸ்கோடா கார்கள் டெலிவிரி!! குஷாக் எஸ்யூவி காருக்கு குவியும் முன்பதிவுகள்!

குஷாக் எஸ்யூவி காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 4 வருடம்/ 1 லட்ச கிமீ உத்தரவாதத்தை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் வழங்குகிறது. இந்த உத்தரவாத காலத்தை 6 வருடம்/ 1.5 லட்ச கிமீ வரையில் அதிகரித்து கொள்ள முடியும்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda #skoda kushaq
English summary
KUSHAQ was launched on 28 June 2021 with a starting price of 10.49 Lakh (ex-showroom). It is powered by the globally acclaimed TSI technology with 2 engine options - 1.0L and 1.5L TSI, delivering 115 PS and 150 PS, respectively. PPS Skoda, Bengaluru delivered 50 Skoda’s in a single day at a gala event held at Bengaluru.
Story first published: Tuesday, July 20, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X