Just In
- 1 hr ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 1 hr ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 2 hrs ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 3 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- News
சென்னை புதுவரவுக்கு கண்டிப்பாக அமைச்சரவையில் இடம் தரக் கூடாது- திமுகவில் இப்பவே அதிரிபுதிரி மோதல்
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Lifestyle
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹோண்டா சிட்டிக்கு தலைவலி ஆரம்பம்... பிரிமீயம் மிட்சைஸ் செடான் காரை களமிறக்கும் ஸ்கோடா!
மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் புத்தம் புதிய செடான் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஸ்கோடா ஆட்டோ முடிவு செய்துள்ளது. இந்த கார் அளவிலும், வசதிகளிலும் மிகவும் பிரிமீயம் மாடலாக வர இருக்கிறது. இந்த கார் புதிய ஹோண்டா சிட்டி காருக்கு நேரடி போட்டியாக நிலைநிறுத்தப்பட உள்ளது.

இந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஸ்கோடா ரேபிட் கார் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. சந்தையில் தனி வாடிக்கையாளர் வட்டத்தையும் தக்க வைத்து வருகிறது. இந்த நிலையில், மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் உள்ள முக்கிய போட்டியாளர்களாக ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட கார்கள் புதிய தலைமுறை மாடல்களாக அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வந்தன.

ஆனால், ரேபிட் மிக நீண்ட காலமாக எந்தவொரு பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஹோண்டா சிட்டி உள்ளிட்ட கார்கள் மிகவும் பிரிமீயமாக மாறிவிட்டன. எனவே, போட்டியாளர்களை ஒரு கை பார்க்கும் விதத்தில், புத்தம் புதிய மிட்சைஸ் செடான் கார் மாடலை ஸ்கோடா அறிமுகப்படுத்த உள்ளது.

இதுவரை ஸ்கோ ரேபிட் காரின் புதிய தலைமுறை மாடலாக நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்கோடாவின் புதிய மிட்சைஸ் செடான் கார் மாடல் பரிமாணம், வசதிகள் மற்றும் விலை என அனைத்திலும் பிரிமீயம் மிட்சைஸ் செடான் கார் மாடலாக வர இருக்கிறது.

எனவே, இந்த கார் ரேபிட் காரைவிட விலை அதிகம் கொண்ட கார் மாடலாக நிலைநிறுத்தப்படும். இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய செடான் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஹோண்டா நிறுவனம் புதிய சிட்டி கார் மாடலை களமிறக்கினாலும், பழைய சிட்டி காரையும் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது. அதே பாணியில், புதிய செடான் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டாலும், ரேபிட் காரை தொடர்ந்து விற்பனை செய்ய ஸ்கோடா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன்மூலமாக, விலை மற்றும் விருப்பத்தின்பேரில் வெவ்வேறு வட்ட வாடிக்கையாளர்களை குறிவைத்து வர்த்தகம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

ஸ்கோடாவின் புதிய செடான் கார் மாடலில் 110 பிஎஸ் பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 150 பிஎஸ் பவரை வழங்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எ{்தின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படும்.

ஸ்கோடா ரேபிட் கார் ரூ.7.80 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கிறது. இந்த நிலையில், புதிய செடான் கார் மாடலை ரூ.10 லட்சத்தையொட்டிய ஆரம்ப விலையில் கொண்டு வர ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. அதாவது, ஹோண்டா சிட்டி காரைவிட ரூ.1 லட்சம் வரை குறைவான விலை தேர்வாக நிலைநிறுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.