Just In
- 31 min ago
வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!
- 1 hr ago
அப்பப்பா... புதிய ஸ்கோடா ஃபேபியா காரின் அந்த 3வது எஞ்சின் ஆப்ஷன் இருக்கே?... நம்ம ரோடு தாங்குமா?
- 2 hrs ago
அருமை... ரொம்ப பழைய பல்சர் பைக்கை மின்சார வாகனமாக மாற்றிய இளைஞர்கள்... அட சட்டுனு மாத்திட்டாங்களே...
- 2 hrs ago
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் சொகுசு காரின் வீடியோ ரிவியூ... மிஸ் பண்ணிடாதீங்க!
Don't Miss!
- News
ஒருத்தரை நம்பி திட்டம் போட்டேன்.. வீணாப் போச்சு.. விரைவில் அறிவிப்பேன்.. கஸ்தூரி அதிரடி தகவல்!
- Sports
புலம்பறதையும் புகார் சொல்றதையும் விடுங்க... என்ன செய்யறதுன்னு யோசிங்க... ரிச்சர்ட்ஸ் அறிவுரை!
- Education
ரூ.84 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் IIFCL நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
9 மாத சரிவில் சீன உற்பத்தி துறை.. கடும் பாதிப்பில் வேலைவாய்ப்பு சந்தை..!
- Lifestyle
2020 ஆம் ஆண்டில் சாதித்த மிகவும் சக்தி வாய்ந்த இந்திய பெண்கள்!
- Movies
100 மில்லியன் வியூஸ்களை கடந்த செல்லம்மா பாடல்.. ஜாலி மோடில் சிவகார்த்திகேயன் ஷேர் செய்த வீடியோ!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்கோடா கரோக் எஸ்யூவி இணையதளத்தில் இருந்து திடீர் நீக்கம்... காரணம் இதுதான்!
இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ஸ்கோடா கரோக் எஸ்யூவி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் ஏராளமான புதிய மாடல்களுடன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வை அளித்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கோடா கரோக் எஸ்யூவி மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகவும் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்பட்டது.

ரூ.24.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அனைத்து வசதிகளுடன் கொண்ட ஒரே ஒரு வேரியண்ட்டில் இறக்குமதி செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. முதல் லாட்டில் 1,000 ஸ்கோடா கரோக் எஸ்யூவிகள் மட்டுமே இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களிலேயே ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்தியாவில் விற்று தீர்ந்தது. இதனால், இந்த எஸ்யூவி புக்கிங் செய்ய இருந்தவர்கள் மத்தியில் சிறிய ஏமாற்றம் ஏற்பட்டது. எனினும், இரண்டாவது லாட்டில் வரும் ஸ்கோடா கரோக் எஸ்யூவிகளை புக்கிங் செய்யும் நம்பிக்கையில் வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த சூழலில், ஸ்கோடா நிறுவனத்தின் இந்திய இணையதள பக்கத்தில் இருந்து ஸ்கோடா கரோக் எஸ்யூவி திடீரென நீக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஓரிரு மாதங்களில் கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு நேரடி போட்டியை கொடுக்கும் விதத்தில், புத்தம் புதிய குஷாக் என்ற காம்பேக்ட் ரக எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க ஸ்கோடா ஆயத்தமாகி வருகிறது.

புதிய குஷாக் எஸ்யூவியை அறிமுகப்படுத்துவதிலும், வர்த்தகம் செய்வதிலும் முழு கவனத்தை செலுத்தும் விதமாக கரோக் எஸ்யூவியை மீண்டும் கொண்டு வருவதை சற்றே தாமதப்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், இந்த முறை கரோக் எஸ்யூவியின் முக்கிய பாகங்களை இறக்குமதி செய்து அசெம்பிள் செய்ய ஸ்கோடா திட்டமிட்டுள்ளது.

எனவே, கரோக் எஸ்யூவியை தற்காலிகமாக இணையதளத்தில் இருந்து ஸ்கோடா இந்தியா நிறுவனம் நீக்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஸ்கோடா கரோக் எஸ்யூவியும், ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியும் ஒரே கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி ரூ.19.99 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கரோக் எஸ்யூவி ரூ.24.99 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது வாடிக்கையாளர் மத்தியில் ஒருவிதமான ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதனை சரிசெய்யும் விதமாக, இந்தியாவிலேயே அசெம்பிள் செய்தால் சில லட்சங்கள் குறைவாக விலையை நிர்ணயிக்க முடியும். எனவே, தற்போதைக்கு குஷாக் எஸ்யூவியை வைத்து வர்த்தகத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஸ்கோடா இறங்கி இருக்கிறது. எனினும், க்ரோக் எஸ்யூவியும் குஷாக் எஸ்யூவியை தொடர்ந்து மீண்டும் களமிறக்கப்படும்.

ஸ்கோடா கரோக் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.