Just In
- 8 hrs ago
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- 12 hrs ago
விபத்தில் சிக்கிய ஆளில்லா இயங்கும் டெஸ்லா கார்!! இருவர் காருக்கு உள்ளேயே கருகி பலி!
- 13 hrs ago
100 கிமீ ரேஞ்ச்.. அசத்தலான புதிய நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!
- 13 hrs ago
மாஸ்க் அணியவில்லை என்றால், என்ன இப்படி தூக்குறாங்க!! போலீஸாரிடம் சிக்கிய தம்பதியினர்...
Don't Miss!
- News
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு: கட்டுப்பாடுகள் அமலானதால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Movies
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த ஆண்டிற்குள் மூன்றாவது காரை அறிமுகப்படுத்த தயாராகும் ஸ்கோடா!! கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்??
ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்திய அறிமுகம் குறித்த அப்டேட்டான விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் சிஇஒ ஜாக் ஹோலிஸ் அவ்வப்போது டுவிட்டர் பக்கத்தில் நிறுவனத்தின் அடுத்த அறிமுக மாடல் குறித்த விபரங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த வகையில் கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்த 2021ஆம் ஆண்டின் மூன்றாம் கால்பகுதியில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளதாக சமீபத்தில் இவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில், இந்த வருடத்தில் மூன்றாவது மாடலாக கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் மூன்றாம் காலாண்டில் ஆற்றல்மிக்க 2.0 டிஎஸ்ஐ என்ஜின் உடன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக 4200 ஆர்பிஎம்-ல் 188 பிஎச்பி மற்றும் 1500 ஆர்பிஎம்-ல் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இதே 2.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் ஃபோக்ஸ்வேகன் ஆல்ஸ்பேஸ் காரிலும் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோடா நிறுவனம் தனது விற்பனை கார்களில் பெட்ரோல் என்ஜினை மட்டுமே வழங்க முடிவெடுத்துள்ளது. இதனால் கோடியாக் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் நீண்ட காலத்திற்கு வழங்கப்பட போவதில்லை.

இந்த குறையை சரிசெய்யவே 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் கொண்டுவரப்படுகிறது. ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை பொறுத்தவரையில், காரை சுற்றிலும் காஸ்மெட்டிக் அப்கிரேட்கள் தான் அதிகளவில் இருக்கும்.

இருப்பினும் சில கூடுதல் வசதிகளையும் எதிர்பார்க்கிறோம். ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால் திருத்தியமைக்கப்பட்ட ஹெட்லேம்ப் & டெயில்லேம்ப் டிசைன், புதிய க்ரில் மற்றும் புதிய டிசைனில் முன் & பின்பக்க பம்பர் உள்ளிட்டவற்றுடன் காரின் முன்பக்கமும் பின்பக்கமும் முற்றிலுமாக திருத்தியமைக்கப்பட வாய்ப்புண்டு.

உட்புறத்தில் பெரிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் பிராண்டின் லேட்டஸ்ட் இணைப்பு தொழிற்நுட்பத்தின் மூலமாக வயர் இல்லா ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் விர்டியுவல் காக்பிட் டிசைன் உடன் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றை இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்றுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றுடன் பனோராமிக் சன்ரூஃப், பவர் முன் இருக்கைகள், இரு-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், வயர் இல்லா ஸ்மார்ட்போன் சார்ஜர், குரல் கட்டுப்பாட்டு உதவி, கண்ட்ரோல்களுடன் லெதரால் மூடப்பட்ட பல செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம் முதலியவற்றையும் இந்த எஸ்யூவி காரில் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக மேம்படுத்துவது மட்டுமில்லாமல் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடனும் கோடியாக் காரை ஸ்கோடா நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது. இந்த ஸ்கோடா ப்ரீமியம் எஸ்யூவி காருக்கு விற்பனையில் போட்டியாக ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ், ஃபோர்டு எண்டேவியர், டொயோட்டா ஃபார்ச்சூனர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மற்றும் எம்ஜி க்ளோஸ்டர் உள்ளிட்டவை உள்ளன.