குஷாக்கின் இந்திய அறிமுகத்தில் ஸ்கோடா வைத்த புதிய செக்!! ஒரு பெட்ரோல் என்ஜின் தேர்வில் தான் கிடைக்குமாம்

ஸ்கோடா குஷாக் காரின் இந்திய வருகை குறித்த நம்பத்தகுந்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

குஷாக்கின் இந்திய அறிமுகத்தில் ஸ்கோடா வைத்த புதிய செக்!! ஒரு பெட்ரோல் என்ஜின் தேர்வில் தான் கிடைக்குமாம்

ஸ்கோடா குஷாக் காம்பெக்ட் எஸ்யூவி கார் இரு டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம்.

குஷாக்கின் இந்திய அறிமுகத்தில் ஸ்கோடா வைத்த புதிய செக்!! ஒரு பெட்ரோல் என்ஜின் தேர்வில் தான் கிடைக்குமாம்

இதில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் உடன் குஷாக் ஆகஸ்ட் 4ஆம் தேதியில் இருந்தே கிடைக்கும் என தற்போது டீம் பிஎச்பி செய்திதளம் மூலம் கிடைத்துள்ள படம் கூறுகிறது. 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் உடன் இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் வருகிற ஜூன் 28ஆம் தேதியில் அறிமுகமாகவுள்ளதாகவும் இந்த படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஷாக்கின் இந்திய அறிமுகத்தில் ஸ்கோடா வைத்த புதிய செக்!! ஒரு பெட்ரோல் என்ஜின் தேர்வில் தான் கிடைக்குமாம்

மேலும் இதே நாளில் குஷாக்கின் அதிகாரப்பூர்வ படங்கள் மற்றும் விலைகளுடன் முன்பதிவுகள் துவங்கப்பட உள்ளன. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் குஷாக்கை முன்பதிவு செய்வோர்களுக்கு கார் டெலிவிரி செய்யப்படுவது அடுத்த ஜூலை மாத 12ஆம் தேதியில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளது.

குஷாக்கின் இந்திய அறிமுகத்தில் ஸ்கோடா வைத்த புதிய செக்!! ஒரு பெட்ரோல் என்ஜின் தேர்வில் தான் கிடைக்குமாம்

இது ஏதோ ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ஒருவர் டீலர் ஒருவருக்கு அனுப்பிய மெயில் போன்று உள்ளது. ஆதலால் இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை.

குஷாக்கின் இந்திய அறிமுகத்தில் ஸ்கோடா வைத்த புதிய செக்!! ஒரு பெட்ரோல் என்ஜின் தேர்வில் தான் கிடைக்குமாம்

1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 148 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. அதுவே சிறிய 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் 113 பிஎச்பி ஆற்றல் வரையில் காருக்கு வழங்கக்கூடியதாக இருக்கும்.

குஷாக்கின் இந்திய அறிமுகத்தில் ஸ்கோடா வைத்த புதிய செக்!! ஒரு பெட்ரோல் என்ஜின் தேர்வில் தான் கிடைக்குமாம்

இவற்றுடன் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு ட்யுல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட உள்ளன. இதற்கு முன் இதேபோன்று இணையத்தில் கசிந்திருந்த விபரங்கள், குஷாக்கின் வேரியண்ட்கள் குறித்து விவரித்து இருந்தன.

குஷாக்கின் இந்திய அறிமுகத்தில் ஸ்கோடா வைத்த புதிய செக்!! ஒரு பெட்ரோல் என்ஜின் தேர்வில் தான் கிடைக்குமாம்

அதாவது குஷாக் காம்பெக்ட் எஸ்யூவி கார் ஆக்டிவ், அம்பிஷன் மற்றும் ஸ்டைல் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதில் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda #skoda kushaq
English summary
Rumour: Skoda Kushaq 1.5L TSI will only arrive in August 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X