குஷாக் 1.5 லி டிஎஸ்ஐ கார்களின் டெலிவிரிகளை துவங்கியது ஸ்கோடா!! டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்க சிஇஓ அழைப்பு

ஸ்கோடா குஷாக் 1.5லி எஸ்யூவி காரின் டெலிவிரி பணிகள் இந்தியாவில் இன்றில் (ஆகஸ்ட் 13) இருந்து அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. இதனை உறுதி செய்யும் வகையில் வெளியாகியுள்ள படத்தினை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

குஷாக் 1.5 லி டிஎஸ்ஐ கார்களின் டெலிவிரிகளை துவங்கியது ஸ்கோடா!! டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்க சிஇஓ அழைப்பு

கடந்த ஜூன் மாத இறுதியில் பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கோடா குஷாக்கின் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜினை கொண்ட டாப் வேரியண்ட் இந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கடந்த ஜூலை மாதத்திலேயே அறிவிக்கப்பட்டது.

குஷாக் 1.5 லி டிஎஸ்ஐ கார்களின் டெலிவிரிகளை துவங்கியது ஸ்கோடா!! டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்க சிஇஓ அழைப்பு

அதன்படி அறிமுகப்படுத்தப்பட்ட குஷாக் 1.5லி டிஎஸ்ஐ வேரியண்ட்டின் டெலிவிரி பணிகளை தான் இன்றில் இருந்து துவங்குவதாக ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. பலத்த போட்டி மிகுந்த எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள குஷாக் மாடல் ஸ்கோடாவின் இந்திய டீலர்ஷிப் மையங்கள் அனைத்திலும் கிடைக்கின்றன.

குஷாக் 1.5 லி டிஎஸ்ஐ கார்களின் டெலிவிரிகளை துவங்கியது ஸ்கோடா!! டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்க சிஇஓ அழைப்பு

புதிய குஷாக் எஸ்யூவி காருக்கு இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து மிகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக ஸ்கோடா நிறுவனம் தெரிவித்து வரும் நிலையில் வாடிக்கையாளர்களை மேலும் அதிகமாக பெறும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட குஷாக்கின் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ வேரியண்ட்டின் டெலிவிரி பணிகளும் தற்போது ஒருவழியாக துவங்கப்பட்டுவிட்டன.

குஷாக் 1.5 லி டிஎஸ்ஐ கார்களின் டெலிவிரிகளை துவங்கியது ஸ்கோடா!! டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்க சிஇஓ அழைப்பு

குஷாக்கின் இந்த டாப் வேரியண்ட்டில் பொருத்தப்படுகின்ற 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 5000- 6000 ஆர்பிஎம்-இல் 110 கிலோவாட்ஸ் (150 பிஎஸ்) மற்றும் 1600- 3500 ஆர்பிஎம்-இல் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

குஷாக் 1.5 லி டிஎஸ்ஐ கார்களின் டெலிவிரிகளை துவங்கியது ஸ்கோடா!! டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்க சிஇஓ அழைப்பு

பெரியளவிலான இந்த டிஎஸ்ஐ என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் தேர்வு கொடுக்கப்படுகிறது. இதில் மேனுவல் தேர்வில் இந்த என்ஜின் 17.95 kmpl மைலேஜையும், ஆட்டோமேட்டிக் தேர்வில் இதனை காட்டிலும் சற்று குறைவாக 17.71 kmpl மைலேஜையும் வழங்குவதாக அராய் (ARAI) சான்றளித்துள்ளது.

குஷாக் 1.5 லி டிஎஸ்ஐ கார்களின் டெலிவிரிகளை துவங்கியது ஸ்கோடா!! டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்க சிஇஓ அழைப்பு

அதுமட்டுமின்றி பெடல் ஷிஃப்டர்களையும் ஸ்கோடா நிறுவனம் குஷாக்கில் வழங்குகிறது. குஷாக்கின் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் அமைப்பில் ஆக்டிவ் சிலிண்டர் தொழிற்நுட்பம் (ACT) வழங்கப்படுகிறது. என்ஜினிற்கான பளூ குறையும் போது இந்த தொழிற்நுட்பம் என்ஜின் அமைப்பில் உள்ள இரு சிலிண்டர்கள் செயல்படுவதை தானாக நிறுத்தி கொள்ளும்.

குஷாக் 1.5 லி டிஎஸ்ஐ கார்களின் டெலிவிரிகளை துவங்கியது ஸ்கோடா!! டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்க சிஇஓ அழைப்பு

இதன் காரணமாக காரின் ஒட்டு மொத்த எரிபொருள் திறன் மேம்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. குஷாக் 1.5 லி டிஎஸ்ஐ கார்களின் டெலிவிரிகளை துவங்கி இருப்பது குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஸாக் ஹோலிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

குஷாக் 1.5 லி டிஎஸ்ஐ கார்களின் டெலிவிரிகளை துவங்கியது ஸ்கோடா!! டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்க சிஇஓ அழைப்பு

அவர் கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு 1.5 லிட்டர் டிஎஸ்ஐ குஷாக் காரை டெலிவிரி செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த டிஎஸ்ஐ என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றலை 17.95 kmpl எரிபொருள் உடன் கொண்டிருப்பது இந்த என்ஜினின் சக்தி மற்றும் தொழிற்நுட்ப ரீதியாக மேம்பட்ட ஏசிடி அமைப்பின் நம்ப முடியாத சான்றாகும்.

குஷாக் 1.5 லி டிஎஸ்ஐ கார்களின் டெலிவிரிகளை துவங்கியது ஸ்கோடா!! டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்க சிஇஓ அழைப்பு

குஷாக், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒரு வாகனமும். இந்தியா முழுவதும் இந்த காருக்கு கிடைத்துவரும் வரவேற்பை கண்டு நாங்கள் பிரம்மிப்பில் உள்ளோம். மேலும், அதிகமான வாடிக்கையாளர்களை எங்கள் ஷோரூம்களுக்கு சென்று குஷாக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

குஷாக் 1.5 லி டிஎஸ்ஐ கார்களின் டெலிவிரிகளை துவங்கியது ஸ்கோடா!! டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்க சிஇஓ அழைப்பு

ஏற்கனவே கூறியதுதான், குஷாக்கிற்கான முன்பதிவுகள் கடந்த ஜூலை மாத துவக்கத்தில் இருந்து நாட்டின் பல பகுதிகளில் இருந்து குவிந்து வருகின்றன. இதன் காரணமாக கடந்த ஜூலையில் பெங்களூர் டீலர்ஷிப் ஒன்றில் ஒரே நாளில் 50 குஷாக் கார்கள் டெலிவிரி செய்யப்பட்டதை நமது செய்திதளத்தில் கூட குறிப்பிட்டு இருந்தோம்.

குஷாக் 1.5 லி டிஎஸ்ஐ கார்களின் டெலிவிரிகளை துவங்கியது ஸ்கோடா!! டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்க சிஇஓ அழைப்பு

ஆக்டிவ், அம்பிஷன் மற்றும் ஸ்டைல் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் குஷாக்கில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டிஎஸ்ஐ என்ஜின் மட்டுமின்றி 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினும் தேர்வாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

குஷாக் 1.5 லி டிஎஸ்ஐ கார்களின் டெலிவிரிகளை துவங்கியது ஸ்கோடா!! டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்க சிஇஓ அழைப்பு

ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10.49 லட்சத்தில் இருந்து ரூ.17.59 லட்சம் வரையில் உள்ளன. குஷாக்கை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 4 வருடம்/ 1 லட்ச கிமீ உத்தரவாதத்தை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் வழங்குகிறது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda begins deliveries of Kushaq 1.5L TSI in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X