வெறும் 6 மாதங்களில், ஸ்கோடா குஷாக்கின் முன்பதிவுகள் 20,000ஐ கடந்தது!! வாய் பிளந்து பார்க்கும் மற்ற நிறுவனங்கள்

ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காருக்கு அறிமுகத்தில் இருந்து தற்போது வரையில் கிட்டத்தட்ட 20,000 முன்பதிவுகள் ஏற்று கொள்ளப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் 6 மாதங்களில், ஸ்கோடா குஷாக்கின் முன்பதிவுகள் 20,000ஐ கடந்தது!! வாய் பிளந்து பார்க்கும் மற்ற நிறுவனங்கள்

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் ஏகப்பட்ட மாடல்களின் மூலம் வெற்றியை ரசித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் ஆட்டோ க்ரூப்பின் கீழ் செயல்படும் ஸ்கோடா நிறுவனம் செடானில் இருந்து தற்போதைய ட்ரெண்டான எஸ்யூவி வரையில் கிட்டத்தட்ட அனைத்து விதமான கார்களை உலகளவில் விற்பனை செய்து வருகிறது.

வெறும் 6 மாதங்களில், ஸ்கோடா குஷாக்கின் முன்பதிவுகள் 20,000ஐ கடந்தது!! வாய் பிளந்து பார்க்கும் மற்ற நிறுவனங்கள்

இதில் சில மாடல்கள் இந்திய சந்தையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம் சில தயாரிப்புகளை இந்திய வாடிக்கையாளர்களுக்கு என்றே பிரத்யேகமாக வடிவமைத்தும் இந்த நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த வகையில் இந்த ஆண்டில் முக்கியமான அறிமுகமாக, ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் போட்டி மிகுந்த எஸ்யூவி கார்கள் பிரிவில் அதன் குஷாக் மாடலை கடந்த ஜூன் மாத இறுதியில் அறிமுகப்படுத்தியது.

வெறும் 6 மாதங்களில், ஸ்கோடா குஷாக்கின் முன்பதிவுகள் 20,000ஐ கடந்தது!! வாய் பிளந்து பார்க்கும் மற்ற நிறுவனங்கள்

கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா போன்ற அதிகளவில் விற்பனையாகும் மற்ற எஸ்யூவி கார்களுக்கு சரியான போட்டி மாடலாக விளங்கும் ஸ்கோடா குஷாக் இதுவரையில் மட்டுமே 20,000 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இருப்பினும் இதுகுறித்து தற்போதுவரையில் ஸ்கோடா நிறுவனத்தின் சார்பில் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

வெறும் 6 மாதங்களில், ஸ்கோடா குஷாக்கின் முன்பதிவுகள் 20,000ஐ கடந்தது!! வாய் பிளந்து பார்க்கும் மற்ற நிறுவனங்கள்

ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தமாக 2,196 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020 நவம்பரை காட்டிலும் சுமார் 108% அதிகமாகும். இந்த அளவிற்கு இந்தியாவில் ஸ்கோடா கார்கள் கவனத்தை பெற்றிருப்பதற்கு குஷாக் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் ஸ்கோடா குஷாக் எஸ்யூவி ரூ.10.49 லட்சத்தில் இருந்து ரூ.17.59 லட்சம் வரையிலான விலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வெறும் 6 மாதங்களில், ஸ்கோடா குஷாக்கின் முன்பதிவுகள் 20,000ஐ கடந்தது!! வாய் பிளந்து பார்க்கும் மற்ற நிறுவனங்கள்

இந்திய வாடிக்கையாளர்களின் இரசனைக்கும், இந்திய சாலைகளுக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்ட எம்க்யூபி ஏ0-இன் கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள முதல் மாடல் குஷாக் ஆகும். இந்தியா 2.0 திட்டத்தில் இத்தகைய ப்ளாட்ஃபாரத்தை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது. குஷாக்கின் வெற்றிக்கு விலையை முக்கிய காரணமாக சொல்லலாம்.

வெறும் 6 மாதங்களில், ஸ்கோடா குஷாக்கின் முன்பதிவுகள் 20,000ஐ கடந்தது!! வாய் பிளந்து பார்க்கும் மற்ற நிறுவனங்கள்

செல்டோஸ், க்ரெட்டா போன்றவற்றை காட்டிலும் சற்று அதிகமான விலையில் இந்த ஸ்கோடா கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றாலும், அதற்கேற்ப ப்ரீமியம் தரத்திலான அம்சங்களும் குஷாக்கில் வாரி வழங்கப்படுகின்றன. அதேநேரம், பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை மற்ற போட்டி மாடல்களுடன் ஒப்பிடுகையில் குஷாக், குறைவான விலையில் கொண்டுள்ளது. வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரையில், கூர்மையான ஸ்டைலிங் காரை சுற்றிலும் வழங்கப்படுகின்றன.

வெறும் 6 மாதங்களில், ஸ்கோடா குஷாக்கின் முன்பதிவுகள் 20,000ஐ கடந்தது!! வாய் பிளந்து பார்க்கும் மற்ற நிறுவனங்கள்

முன்பக்கத்தில் கருப்பு நிற செங்குத்தான ஸ்லாட்களுடன் கண்ணை கவரக்கூடிய பட்டாம்பூச்சி வடிவிலான க்ரில், ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்களுடன் கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், டைமண்ட்-கட் ஸ்போர்டியான அலாய் சக்கரங்கள், நேர்த்தியான கேரக்டர் லைன்கள், பின்பக்கத்தில் கூர்மையான வடிவில் எல்இடி டெயில்லைட்கள், செதுக்கப்பட்டது போன்றதான பின்கதவு உள்ளிட்டவற்றை குஷாக் பெறுகிறது.

வெறும் 6 மாதங்களில், ஸ்கோடா குஷாக்கின் முன்பதிவுகள் 20,000ஐ கடந்தது!! வாய் பிளந்து பார்க்கும் மற்ற நிறுவனங்கள்

உட்புற கேபினை குஷாக் அதன் விஷன் இன் கான்செப்ட்டில் இருந்து அப்படியே பெற்றுள்ளது. க்ரோம் தொடுதல்களுடன் ப்ரீமியம் தரத்தில் காட்சித்தரும் இதன் டேஸ்போர்டில் முன் இருக்கை பயணிக்கு முன்பக்கத்தில் பளபளப்பான பேனலும், ஏசி துளைகள் டேஸ்போர்டின் இரு முனைகளிலும் வழங்கப்படுகின்றன. ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே உடன் இணைக்கக்கூடிய 10 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தின் மூலம் பயணத்திற்கான வழிக்காட்டுதல்களை பெறலாம்.

வெறும் 6 மாதங்களில், ஸ்கோடா குஷாக்கின் முன்பதிவுகள் 20,000ஐ கடந்தது!! வாய் பிளந்து பார்க்கும் மற்ற நிறுவனங்கள்

மைய கன்சோல் பகுதியில் அதிகளவில் பொத்தான்கள் இல்லாமல், தொடு கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் வயர் இல்லா சார்ஜிங் வசதி, டைப்-சி யுஎஸ்பி சார்ஜிங் துளைகள், 12 வோல்ட் பவர் சாக்கெட் உள்ளிட்டவற்றையும் குஷாக் பெறுகிறது. ஸ்கோடா குஷாக்கில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்கிற இரு விதமான என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

வெறும் 6 மாதங்களில், ஸ்கோடா குஷாக்கின் முன்பதிவுகள் 20,000ஐ கடந்தது!! வாய் பிளந்து பார்க்கும் மற்ற நிறுவனங்கள்

இவை இரண்டுடனும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. அதேநேரம் அளவில் சிறிய 1.0 லி டர்போ என்ஜின் உடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் டிரான்ஸ்மிஷன் தேர்வும், 1.5 லி டர்போ என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வும் கூடுதலாக கொடுக்கப்படுகிறது. இவ்வாறான ஸ்டைலிஷ் கார்களுடன், இந்தியாவில் டீலர்ஷிப் மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் ஸ்கோடா தயாராகி வருகிறது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda kushaq booking over 20000 units details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X