Just In
- 7 hrs ago
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- 11 hrs ago
விபத்தில் சிக்கிய ஆளில்லா இயங்கும் டெஸ்லா கார்!! இருவர் காருக்கு உள்ளேயே கருகி பலி!
- 12 hrs ago
100 கிமீ ரேஞ்ச்.. அசத்தலான புதிய நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!
- 12 hrs ago
மாஸ்க் அணியவில்லை என்றால், என்ன இப்படி தூக்குறாங்க!! போலீஸாரிடம் சிக்கிய தம்பதியினர்...
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- News
பிரார்த்தனையில் மூழ்கிய பெண்.. பின்னாலிருந்து திடீரென.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போதகர் கைது
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Movies
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் புக்கிங், டெலிவிரி எப்போது?... விபரம் உள்ளே!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஸ்கோடா குஷாக் காம்பேக்ட் ரக எஸ்யூவி நேற்று உலக அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவிக்கு புக்கிங் மற்றும் டெலிவிரி எப்போது துவங்கப்பட உள்ளது என்ற விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் காம்பேக்ட் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு மாடல்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வர்த்தக வாய்ப்பு அதிகம் உள்ள இந்த ரகத்தில் உள்ள பிற மாடல்கள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவராத நிலை உள்ளது.

இந்த சூழலில், இந்த ரகத்தில் புத்தம் புதிய குஷாக் என்ற காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்க உள்ளது. உலக அளவில் புதிய குஷாக் எஸ்யூவி நேற்று பார்வைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், டிசைன், சிறப்பம்சங்களில் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

மேலும், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு மிகச் சரியான போட்டியாளராகவும், மாற்றுத் தேர்வாகவும் இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது. எனவே, வாடிக்கையாளர்களும் இந்த காரின் விலை அறிவிப்பு தேதி மற்றும் புக்கிங்கை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவிக்கு வரும் ஜூன் மாதம் புக்கிங் துவங்கப்பட்டு ஜூலை மாதம் மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் அழகிய க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகளுடன் கவர்ச்சியான ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், ஸ்கிட் பிளேட், பெரிய அளவிலான ஏர் இன்டேக் அமைப்பு ஆகியவை முகப்பை கம்பீரமாக காட்டுகிறது. குஷாக் எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட்டுகளில் 16 அங்குல சக்கரங்களும், விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் 17 அங்குல அலாய் சக்கரங்களும் வழங்கப்படும். பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டர் மிகவும் வசீகரமாக உள்ளது.

இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 2 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், சன்ரூஃப், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசிஸ்டம், வென்டிலேட்டட் லெதர் இருக்கைகள், க்ரூஸ் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ரியர் ஏசி வென்ட்டுகள் ஆகியவை உள்ளன.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் இரண்டு டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளது. முதல் தேர்வானது 115 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வாக இருக்கும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

இரண்டாவது தேர்வாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் கொடுக்கப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையம், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கொடுக்கப்படும்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி ரூ.10 லட்சத்தையொட்டிய ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு சவாலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது.

ஸ்கோடா நிறுவனத்தின் புராஜெக்ட் 2.0 திட்டத்தின் கீழ் இந்தியாவுக்காக உருவாக்கப்பட்டுள்ள முதல் மாடல் குஷாக் எஸ்யூவி. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி கட்டமைப்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட எம்க்யூபி ஏ0 ஐஎன் என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி 95 சதவீதம் உள்நாட்டு பாகங்களுடன் உற்பத்தி செய்யப்பட உள்ளதால், விலை மிக சவாலாக நிர்ணயிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.9 லட்சம் ஆரம்ப விலையில் வந்தால், அதிக வரவேற்பை பெறும் என்று கூறலாம்.