ஸ்கோடா குஷாக் புக்கிங் எப்போது துவங்குகிறது... அதிகாரப்பூர்வத் தகவல்!

எஸ்யூவி வாங்க திட்டம் போட்டுள்ளோரின் கவனத்தை ஈர்த்துள்ள, புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவிக்கு எப்போது முன்பதிவு துவங்கப்பட உள்ளது என்ற விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

 ஸ்கோடா குஷாக் புக்கிங் எப்போது துவங்குகிறது... அதிகாரப்பூர்வத் தகவல்!

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் ஆகிய இரட்டையர்களின் ஆதிக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த இரண்டு மாடல்களுக்கும் சிறந்த மாற்றுத் தேர்வாக புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது.

 ஸ்கோடா குஷாக் புக்கிங் எப்போது துவங்குகிறது... அதிகாரப்பூர்வத் தகவல்!

கடந்த மார்ச் மாதம் குஷாக் எஸ்யூவியை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் பொது பார்வைக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில், இந்த கார் எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்ற ஆவலுடன் வாடிக்கையாளர்கள் பலர் காத்திருக்கின்றனர்.

 ஸ்கோடா குஷாக் புக்கிங் எப்போது துவங்குகிறது... அதிகாரப்பூர்வத் தகவல்!

இந்த நிலையில், கொரோனா தாக்கம் இருந்தபோதிலும், குறித்த நேரத்தில் இந்த புதிய எஸ்யூவியை சந்தைக்கு கொண்டு வந்துவிடுவதில் முனைப்புடன் செயலாற்றஇ வருகிறது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம்.

 ஸ்கோடா குஷாக் புக்கிங் எப்போது துவங்குகிறது... அதிகாரப்பூர்வத் தகவல்!

இந்த நிலையில், சமூக வலைதளத்தில் இந்த எஸ்யூவியின் புக்கிங், டெலிவிரி விபரங்களை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் பகிர்ந்து கொண்டுள்ளது. அதன்படி, வரும் ஜூன் மாதம் முதல் முன்பதிவு துவங்கப்பட்டு ஜூலையில் இருந்து டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த காரை வாங்க விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் பிரத்யேக இணையப்பக்கத்தின் மூலமாக விருப்பத்தை பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு இப்போதே உள்ளது.

 ஸ்கோடா குஷாக் புக்கிங் எப்போது துவங்குகிறது... அதிகாரப்பூர்வத் தகவல்!

எனவே, இந்த காரின் விலை அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்பது உறுதியாகி இருக்கிறது. கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா கார்களுக்கு போட்டியாக ரூ.10 லட்சத்தையொட்டிய ஆரம்ப விலையில் இந்த புதிய எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது.

 ஸ்கோடா குஷாக் புக்கிங் எப்போது துவங்குகிறது... அதிகாரப்பூர்வத் தகவல்!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி டிசைனில் கவரும் வகையில் இருக்கிறது. ஸ்கோடாவின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் ஒரு நவீன யுக மாடலுக்குரிய அம்சங்களை பெற்றுள்ளது. இதனால், அதிக வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

 ஸ்கோடா குஷாக் புக்கிங் எப்போது துவங்குகிறது... அதிகாரப்பூர்வத் தகவல்!

எல்இடி ஹெட்லைட்டுகள், கவர்ச்சிகரமான அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஸ்கஃப் பிளேட்டுகளுடன் கலக்கலாக காட்சி தருகிறது. இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படும். ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு செயலிகளை சப்போர்ட் செய்யும். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது.

 ஸ்கோடா குஷாக் புக்கிங் எப்போது துவங்குகிறது... அதிகாரப்பூர்வத் தகவல்!

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், கனெக்ட்டிவிட்டி தொழிழ்நுட்ப வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

 ஸ்கோடா குஷாக் புக்கிங் எப்போது துவங்குகிறது... அதிகாரப்பூர்வத் தகவல்!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இதில், 1.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். இந்த மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

 ஸ்கோடா குஷாக் புக்கிங் எப்போது துவங்குகிறது... அதிகாரப்பூர்வத் தகவல்!

மற்றொரு 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 150 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படும்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda is gearing up to launch its Made-in-India mid-size SUV called the Kushaq. Ahead of its launch, the company has revealed the bookings and delivery timelines of the upcoming SUV via its social media handle.
Story first published: Wednesday, May 5, 2021, 16:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X