ஸ்கோடா குஷாக் கார்களை எப்போது டெலிவிரி எடுக்கலாம்? சிஇஒ பதில்...

ஸ்கோடா குஷாக் காம்பெக்ட் எஸ்யூவி காரின் டெலிவிரி துவங்குவது எப்போது உள்ளிட்ட விபரங்கள் நிறுவனத்தின் சிஇஒ மூலமாக தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்கோடா குஷாக் கார்களை எப்போது டெலிவிரி எடுக்கலாம்? சிஇஒ பதில்...

ஸ்கோடா குஷாக் இந்திய சந்தையில் நடப்பு ஜூன் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் இந்த புதிய ஸ்கோடா காம்பெக்ட் எஸ்யூவி மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஸ்கோடா குஷாக் கார்களை எப்போது டெலிவிரி எடுக்கலாம்? சிஇஒ பதில்...

இதற்கிடையில் இந்த காரை பற்றிய மற்றும் இதன் அறிமுகம் & டெலிவிரி தொடர்பான விபரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த வகையில் சமீபத்தில் நமக்கு கிடைத்த, குஷாக் காரை பற்றிய விபரங்களை வேரியண்ட்கள் வாரியாக நமது செய்திதளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

ஸ்கோடா குஷாக் கார்களை எப்போது டெலிவிரி எடுக்கலாம்? சிஇஒ பதில்...

இந்த நிலையில் டுவிட்டரில் நெட்டிசன் ஒருவர் குஷாக்கின் அறிமுக தேதி குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் சிஇஒ ஸாக் ஹோலிஸ், காரின் விலைகள் மற்றும் சிறப்பம்சங்கள் அனைத்தும் காரின் அறிமுகத்தின் போதே வெளியிடப்படவுள்ளன.

ஸ்கோடா குஷாக் கார்களை எப்போது டெலிவிரி எடுக்கலாம்? சிஇஒ பதில்...

மேலும் அதே தேதியில் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்படவுள்ளன. டெலிவிரி பணிகள் அடுத்த ஜூலை மாதத்தில் இருந்து துவங்கவுள்ளது என தெரிவித்துள்ளார். மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்த ஸ்கோடா காருக்கு மாருதி எஸ்-க்ராஸ், ரெனால்ட் டஸ்டர் மற்றும் நிஸான் கிக்ஸ் போட்டியாக விளங்கவுள்ளன.

ஸ்கோடா குஷாக் கார்களை எப்போது டெலிவிரி எடுக்கலாம்? சிஇஒ பதில்...

ஆனால் குஷாக்கிற்கு கடுமையான விற்பனை போட்டி கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா மற்று விரைவில் அறிமுகமாகவுள்ள ஃபோக்ஸ்வேகன் டைகுன் மாடல்களிடம் இருந்து தான் வரும். அதுமட்டுமின்றி விலையில் எம்ஜி ஹெக்டர், மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் டாடா ஹெரியருக்கும் குஷாக் போட்டியாக விளங்கலாம்.

ஸ்கோடா குஷாக் கார்களை எப்போது டெலிவிரி எடுக்கலாம்? சிஇஒ பதில்...

குஷாக்கின் விலைகள் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.17 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் தேர்வுகளில் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட உள்ளது.

ஸ்கோடா குஷாக் கார்களை எப்போது டெலிவிரி எடுக்கலாம்? சிஇஒ பதில்...

இந்த இரு என்ஜின்களுடன் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷனை பெறலாம். அதேநேரம் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் கூடுதல் தேர்வாக 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், 1.5 லிட்டர் என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி டிக்யு200 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் வழங்கப்பட உள்ளது.

ஸ்கோடா குஷாக் கார்களை எப்போது டெலிவிரி எடுக்கலாம்? சிஇஒ பதில்...

மேலும், இதில் 1.5 லிட்டர் என்ஜின் ஆக்டிவ் சிலிண்டர் தொழிற்நுட்பத்துடன் கொண்டுவரப்பட உள்ளது. இதன் உதவியுடன் என்ஜினின் இரு சிலிண்டர்களையும் டீஆக்டிவேட் செய்ய முடியும். இதன் விளைவாக காரின் மைலேஜ் அதிகரிக்கும் என ஸ்கோடா தெரிவித்துள்ளது.

ஸ்கோடா குஷாக் கார்களை எப்போது டெலிவிரி எடுக்கலாம்? சிஇஒ பதில்...

ஆக்டிவ், அம்பிஷன் மற்றும் ஸ்டைல் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் ஸ்கோடா குஷாக் விற்பனைக்கு வரவுள்ளது. இதில் எந்த என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் வழங்கப்பட உள்ளது என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. குஷாக்கை தொடர்ந்து கூட்டணி ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டைகுன் வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி வெளிவரவுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda #skoda kushaq
English summary
Skoda Kushaq compact SUV’s delivery timeline revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X