அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி... செல்டோஸ் போட்டியாளர்!

கியா செல்டோஸ், ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக வர இருக்கும் புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி அடுத்த அடுத்த மாதம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஸ்கோடா இந்தியா தலைவர் ஸாக் ஹொல்லிஸ் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி... செல்டோஸ் போட்டியாளர்!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மின் அடிப்படையை தழுவி உருவாக்கப்பட்ட இந்தியாவுக்கான எம்க்யூபி ஏ0-ஐஎன் என்ற கட்டமைப்புக் கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபோக்ஸ்வேகன் - ஸ்கோடா நிறுவனங்கள் இந்தியாவுக்காக வகுத்துள்ள புராஜெக்ட் 2.0 திட்டத்தின் கீழ் இந்த கார் வர இருக்கிறது.

அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி... செல்டோஸ் போட்டியாளர்!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியானது தரத்தில் எந்த சமரசமும் இல்லாத வகையில், முடிந்த அளவுக்கு உள்ளூர் பாகங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக ஸ்கோடா தெரிவிக்கிறது. இந்த காரின் புரோட்டோடைப் மாடல்கள் அண்மையில் அடையாளம் மறைக்கப்பட்ட நிலையில் வெளியிடப்பட்டது.

அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி... செல்டோஸ் போட்டியாளர்!

இந்த நிலையில், தற்போது முழுமையான தோற்றம் மற்றும் அம்சங்களை பொது பார்வைக்கு கொண்டு வரும் வகையில், அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது.

அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி... செல்டோஸ் போட்டியாளர்!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் இரண்டு டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. முதலாவது 1.0 லிட்டர் டர்போ டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி... செல்டோஸ் போட்டியாளர்!

அடுத்து இரண்டாவதாக 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும்.

அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி... செல்டோஸ் போட்டியாளர்!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட பல தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெறும்.

அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி... செல்டோஸ் போட்டியாளர்!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியானது கியா செல்டோஸ், மாருதி எஸ் க்ராஸ், ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். ரூ.10 லட்சத்தையொட்டிய ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மத்தியில் ஷோரூம்களுக்கு வந்துவிடும் என்று ஸாக் ஹொல்லிஸ் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda is all set to unveil the all new Kushaq Compact SUV in India by next month.
Story first published: Thursday, February 11, 2021, 12:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X