புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம் கசிந்தது!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வரவை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வழி மேல் விழி வைத்து காத்துக் கிடக்கும் நிலையில், இந்த காரின் வேரியண்ட்டுகளில் உள்ள வசதிகள் விபரம் கசிந்துள்ளன.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம் கசிந்தது!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா கார்களுக்கு போட்டியாக புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி விரைவில் களமிறங்க உள்ளது. கவரும் டிசைன் மற்றும் வசதிகளுடன் எதிர்பார்க்கப்படுவதால் சிறந்த வரவேற்பை பெறும் என்று தெரிகிறது. இந்த எஸ்யூவியின் உற்பத்தி புனே ஆலையில் துவங்கப்பட்டுள்ள நிலையில், மிக விரைவில் விலை விபரம் வெளியிடப்பட உள்ளது.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம் கசிந்தது!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் ஆகிய வேரியண்ட்டுகளில் வர இருப்பது தெரிந்ததே. இந்த சூழலில், இந்த எஸ்யூவியின் வேரியண்ட் விபரங்கள் டீம் பிஎச்பி தளத்தின் மூலமாக கசிந்துள்ளன.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம் கசிந்தது!

இதில், ஆக்டிவ் வேரியண்ட் விலை குறைவான தேர்வாகவும், ஆம்பிஷன் வேரியண்ட் நடுத்தர விலை மற்றும் வசதிகள் கொண்ட வேரியண்ட்டாகவும், ஸ்டைல் வேரியண்ட் அதிகபட்சமான வசதிகளுடன் விலை உயர்ந்த டாப் வேரியண்ட்டாகவும் வர இருக்கின்றன. இந்த நிலையில், இந்த வேரியண்ட்டுகளில் இடம்பெறும் வசதிகள் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம் கசிந்தது!

ஆக்டிவ் வேரியண்ட்

புதிய ஸ்கோடா குஷாக் ஆக்டிவ் வேரியண்ட்டில் 16 அங்குல ஸ்டீல் சக்கரங்கள், எல்இடி விளக்குகளுடன் டெயில் லைட் க்ளஸ்ட்டர், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ரியர் வியூ மிரர்கள், மேனுவல் ஏசி சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட உள்ளது. முன்புற பம்பருக்கு லிப் அமைப்பு, ரூஃப் ரெயில்கள், ரியர் டிஃபியூசர் கருப்பு வண்ணத்தில் இருக்கும்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம் கசிந்தது!

இந்த வேரியண்ட்டில் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டியூவ்ல ஏர்பேக்குகள் இடம்பெற்றிருக்கும். 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 6 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட உள்ளன.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம் கசிந்தது!

ஆம்பிஷன் வேரியண்ட்

நடுத்தர விலை கொண்ட இந்த வேரியண்ட்டில் 16 அங்குல அலாய் சக்கரங்கள், எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கும். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், கூல்டு க்ளவ்பாக்ஸ், 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் முறையில் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் இருக்கும். லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் உள்ளிட்டவையும் இருக்கும்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம் கசிந்தது!

ஸ்டைல் வேரியண்ட்

விலை உயர்ந்த இந்த வேரியண்ட்டில் 17 அங்குல டியூவல் டோன் அலாய் சக்கரங்கள், டெயில் லைட் க்ளஸ்ட்டர்களுக்கு இடையில் எல்இடி லைட் பார், எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், க்ரோம் லைன், க்ரோம் கைப்பிடிகள், வயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சப் ஊஃபர் கொண்ட மியூசிக் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம் கசிந்தது!

எஞ்சின் தேர்வுகள்

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படும். இதில், 1.0 லிட்டர் எஞ்சின் 110 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம் கசிந்தது!

கியர்பாக்ஸ் தேர்வுகள்

இரண்டு எஞ்சின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். 1.0 லிட்டர் எஞ்சினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும், 1.5 லிட்டர் எஞ்சினுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்படும்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம் கசிந்தது!

எதிர்பார்க்கும் விலை

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவிக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா தவிர்த்து, மறைமுகமாக எம்ஜி ஹெக்டர் மற்றும் டாடா சஃபாரி போன்ற மிட்சைஸ் 5 சீட்டர் எஸ்யூவி மாடல்களுக்கும் போட்டியாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda #skoda kushaq
English summary
Skoda Kushaq SUV's variant wise features leaked online ahead of its official launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X