1.5லி டிஎஸ்ஐ என்ஜினை இப்போதைக்கு எதிர்பாக்காதீங்க!! ஸ்கோடா குஷாக்கின் அறிமுகத்தில் சிஇஓ சொன்ன பதில்

குஷாக் காம்பெக்ட் எஸ்யூவி காரின் இந்திய அறிமுகத்தையும், அதன் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் தேர்வு வருகையின் தாமதத்தையும் ஸ்கோடா இந்திய நிறுவன சிஇஓ மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

1.5லி டிஎஸ்ஐ என்ஜினை இப்போதைக்கு எதிர்பாக்காதீங்க!! ஸ்கோடா குஷாக்கின் அறிமுகத்தில் சிஇஓ சொன்ன பதில்

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஸ்கோடா குஷாக் மாடல் இரு டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த இரு என்ஜின்களில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என்பவை அடங்குகின்றன.

1.5லி டிஎஸ்ஐ என்ஜினை இப்போதைக்கு எதிர்பாக்காதீங்க!! ஸ்கோடா குஷாக்கின் அறிமுகத்தில் சிஇஓ சொன்ன பதில்

இந்த நிலையில் சமீபத்தில் இந்த இரு என்ஜின்களில் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே முதலாவதாக வருகிற ஜூன் 28ஆம் தேதியில் குஷாக் அறிமுகமாகவுள்ளதாகவும், பெரிய அளவிலான என்ஜின் தேர்வு குஷாக்கில் ஆகஸ்ட் 4ஆம் தேதியில் தான் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

1.5லி டிஎஸ்ஐ என்ஜினை இப்போதைக்கு எதிர்பாக்காதீங்க!! ஸ்கோடா குஷாக்கின் அறிமுகத்தில் சிஇஓ சொன்ன பதில்

இதனை நமது தளத்தில் கூட, இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை எனக் கூறி பதிவிட்டு இருந்தோம். ஆனால் இது உண்மையே. டுவிட்டரில் ரிஷங்க் என்பவர் கேட்ட கேள்விக்கு, 1.5 லிட்டர் டிஎஸ்ஐ குஷாக் கார்கள் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருந்து தான் டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன என ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் சிஇஓ பதிலளித்துள்ளார்.

1.5லி டிஎஸ்ஐ என்ஜினை இப்போதைக்கு எதிர்பாக்காதீங்க!! ஸ்கோடா குஷாக்கின் அறிமுகத்தில் சிஇஓ சொன்ன பதில்

1.5 லிட்டர் குஷாக்கின் டெலிவிரிகளை ஜூலையில் எதிர்பார்க்கலாமா அல்லது ஆகஸ்ட்டில் எதிர்பார்க்கலாமா என அந்த நபர் கேட்ட கேள்விக்கு சிஇஓ ஸாக் ஹோலிஸ் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும் இதே ட்விட்டில், ஆனால் 1.5லி டிஎஸ்ஐ உள்பட குஷாக்கின் அனைத்து மாடல்களின் விலைகளும், சிறப்பம்சங்களும் 28ஆம் தேதி வெளியிடப்பட்டுவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1.5லி டிஎஸ்ஐ என்ஜினை இப்போதைக்கு எதிர்பாக்காதீங்க!! ஸ்கோடா குஷாக்கின் அறிமுகத்தில் சிஇஓ சொன்ன பதில்

அதேநேரம், முன்பதிவுகளும் அதே நாளில் துவங்கப்படும் என்பதையும் ஸாக் ஹோலிஸ் கூறியுள்ளார். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் குஷாக்கை வாங்குவோர்க்கு கார் வரும் ஜூலை மாத மத்தியில் இருந்து டெலிவிரி செய்யப்பட உள்ளது.

1.5லி டிஎஸ்ஐ என்ஜினை இப்போதைக்கு எதிர்பாக்காதீங்க!! ஸ்கோடா குஷாக்கின் அறிமுகத்தில் சிஇஓ சொன்ன பதில்

குஷாக்கின் டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்பட உள்ளதாக கூறப்படும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 148 பிஎச்பி வரையிலான ஆற்றலையும், சிறிய அளவிலான 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் 113 பிஎச்பி வரையிலும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

1.5லி டிஎஸ்ஐ என்ஜினை இப்போதைக்கு எதிர்பாக்காதீங்க!! ஸ்கோடா குஷாக்கின் அறிமுகத்தில் சிஇஓ சொன்ன பதில்

இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு ட்யுல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் என இரு டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. முன்னதாக ஸ்கோடா குஷாக் ஆக்டிவ், அம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மூன்று விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் கிடைத்து இருந்தன.

1.5லி டிஎஸ்ஐ என்ஜினை இப்போதைக்கு எதிர்பாக்காதீங்க!! ஸ்கோடா குஷாக்கின் அறிமுகத்தில் சிஇஓ சொன்ன பதில்

ஏற்கனவே கூறியதுதான், இதில் டாப் வேரியண்ட்களில் மட்டுமே 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வு வழங்கப்பட உள்ளது. குஷாக் காரை பற்றிய முழுமையான விபரங்களை தெரிந்துக்கொள்ள நீண்ட நாட்களுக்கு காத்திருக்க வேண்டியதில்லை, 28ஆம் தேதி நெருங்கி கொண்டு வருகிறது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda #skoda kushaq
English summary
Skoda Kushaq delivery from august Zac hollis tweet.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X