ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் முக்கிய வசதிகள் விபரம்!

பெரும் எதிர்பார்ப்பை கிளறி உள்ள புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் பல முக்கிய வசதிகள் விபரம் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் முக்கிய வசதிகள் விபரம்!

இந்தியாவில் புத்தம் புதிய எஸ்யூவி கார்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. அதில், வாடிக்கையாளர்களால் மிகவும் கவனிக்கப்படும் மாடல்களில் ஒன்றாக புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி மாறி இருக்கிறது. இந்த எஸ்யூவி பற்றி பல புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் முக்கிய வசதிகள் விபரம்!

அந்த வகையில், தற்போது இந்த எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் புதிய வசதிகள் குறித்த விபரங்கள் டீம் பிஎச்பி தளத்தில் வெளியாகி இருக்கின்றன.

ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் முக்கிய வசதிகள் விபரம்!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட்டுகளில் 7 அங்குல திரையுடன் கூடிய ஹெட் யூனிட்டும், 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். விலை உயர்ந்த மாடலில் 10 அங்குல ஹெட் யூனிட் மற்றும் சப் ஊஃபருடன் கூடிய மியூசிக் சிஸ்டம் கொடுக்கப்படும்.

ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் முக்கிய வசதிகள் விபரம்!

இந்த எஸ்யூவியில் கூல்டு க்ளவ் பாக்ஸ், வென்டிலேட்டட் இருக்கைகள், சன்ரூஃப், வயர்லெஸ் முறையில் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை இணைக்கும் வசதியும் கொடுக்கப்படும்.

ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் முக்கிய வசதிகள் விபரம்!

இந்த எஸ்யூவியில் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 360 டிகிரி கேமரா வசதி இடம்பெறாது என்று தெரிகிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சிறிய ஏமாற்றத்தை தரலாம்.

ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் முக்கிய வசதிகள் விபரம்!

மேலும், புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட்டுகளில் 4 ஏர்பேக்குகளும், விலை அதிகமான டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகளும் கொடுக்கப்படும். இதுதவிரவும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை பெற முடியும். ஆட்டோமேட்டிக் மாடலில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்படும்.

ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் முக்கிய வசதிகள் விபரம்!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் இரண்டு டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த காரில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கொடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் முக்கிய வசதிகள் விபரம்!

ஃபோக்ஸ்வேகன் எம்க்யூபி ஏ0 ஐஎன் என்ற கட்டமைப்புக் கொள்கையில் இந்த புதிய எஸ்யூவி இந்தியாவுக்கான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதே கட்டமைப்புக் கொள்கையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் டைகுன் என்ற எஸ்யூவியை உருவாக்கி இருக்கிறது. வரும் மார்ச் மாதம் புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி இந்தியாவில் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda #skoda kushaq
English summary
According to report, Skoda Kushaq SUV will get 10.1 inch head unit, wireless android auto and apple car play like features in top variant.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X