உத்தரவாதம் பாதிக்கும்! தெரிந்தே புத்தம் புதிய Skoda Kushaq கார் CNG வாகனமாக மாற்றம்! எவ்வளவு செலவானது தெரியுமா

அண்மையில் விற்பனைக்கு வந்த புத்தம் புதிய Skoda Kushaq காரை அதன் உரிமையாளர் ஒருவர் சிஎன்ஜி-யால் இயங்கும் வாகனமாக மாற்றியிரக்கின்றார். இது ஓர் சந்தைக்கு பிறகான எந்திரம் ஆகும். இதுபோன்ற சந்தைக்கு பிறகான எந்திரத்தை பயன்படுத்துவதனால் என்ன பின் விளைவு ஏற்படும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

உத்தரவாதம் பாதிக்கும்... தெரிந்தே புத்தம் புதிய Skoda Kushaq கார் CNG வாகனமாக மாற்றம்... எவ்வளவு செலவானது தெரியுமா?

பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு வந்த நிலையில் Skoda நிறுவனம் அதன் பிரீமியம் தர Kushaq எஸ்யூவி காரை ஜூன் 28ம் தேதி அன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காரை Skoda தனது 2.0 கொள்கையின் அடிப்படையில் உருவாக்கியிருக்கின்றது. இதனை நாட்டில் VISION IN எனும் குறிப்பெயரின்கீழ் கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவிலேயே முதல் முறையாக நிறுவனம் காட்சிப்படுத்தியது.

உத்தரவாதம் பாதிக்கும்... தெரிந்தே புத்தம் புதிய Skoda Kushaq கார் CNG வாகனமாக மாற்றம்... எவ்வளவு செலவானது தெரியுமா?

இத்தகைய புத்தம் புதிய காரை இளைஞர் ஒருவர் சிஎன்ஜி வாகனமாக மாற்றியிருக்கின்றார். இந்த சிஎன்ஜி கிட்டானது நிறுவனத்தால் வழங்கப்பட்டது அல்ல. தனியார் நிறுவனத்தின் வாயிலாக பெறப்பட்ட சந்தைக்கு பிறகான கருவியாகும். இதனைக் கொண்டு தற்போது Skoda Kushaq சிஎன்ஜியால் இயங்கும் காராக மாற்றப்பட்டிருக்கின்றது.

உத்தரவாதம் பாதிக்கும்... தெரிந்தே புத்தம் புதிய Skoda Kushaq கார் CNG வாகனமாக மாற்றம்... எவ்வளவு செலவானது தெரியுமா?

ஆகையால், இவ்வசதியைப் பெறும் நாட்டின் முதல் Skoda Kushaq காராக இது மாறியிருக்கின்றது. Skoda Kushaq கார் சிஎன்ஜி வாகனமாக மாறியதுகுறித்த வீடியோவை TheCarsShow by Arsh Jolly எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது. சிஎன்ஜி கிட்டினை இணைத்தது மற்றும் பயன்பாடுகுறித்த விளக்கத்தை வழங்கும் வகையில் இவ்வீடியோ அமைந்துள்ளது.

உத்தரவாதம் பாதிக்கும்... தெரிந்தே புத்தம் புதிய Skoda Kushaq கார் CNG வாகனமாக மாற்றம்... எவ்வளவு செலவானது தெரியுமா?

தற்போது Skoda Kushaq 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் Skoda Kushaq காரிலேயே சிஎன்ஜி வசதி சேர்க்கப்பட்டிருக்கின்றது.

உத்தரவாதம் பாதிக்கும்... தெரிந்தே புத்தம் புதிய Skoda Kushaq கார் CNG வாகனமாக மாற்றம்... எவ்வளவு செலவானது தெரியுமா?

எம்எல்என் டெக்னாலஜி எனும் குஜராத் மாநிலம், அஹமதாபாத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமே இவ்வசதியை Skoda Kushaq காருக்கு வழங்கியிருக்கின்றது. இது வழக்கமான சிஎன்ஜி கிட்-ஐக் காட்டிலும் சற்று வித்தியாசமானதாகும். Skoda Kushaq காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எஞ்ஜின் டர்போசார்ஜட் எஞ்ஜின் என்பதால் வித்தியாசமான சிஎன்ஜி கிட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரவாதம் பாதிக்கும்... தெரிந்தே புத்தம் புதிய Skoda Kushaq கார் CNG வாகனமாக மாற்றம்... எவ்வளவு செலவானது தெரியுமா?

அதாவது, சிஎன்ஜி வாகனமாக Skoda Kushaq மாற்றப்பட்டிருந்தாலும் தொடர்ச்சியாக எஞ்ஜினுக்கு எரிபொருள் செல்லும் வகையில் கிட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் சிஎன்ஜி மற்றும் மிக மிக குறைந்த எரிபொருள் பயன்பாட்டில் இயங்கும் வாகனமாக Kushaq உருவாகியுள்ளது.

உத்தரவாதம் பாதிக்கும்... தெரிந்தே புத்தம் புதிய Skoda Kushaq கார் CNG வாகனமாக மாற்றம்... எவ்வளவு செலவானது தெரியுமா?

டர்போசார்ஜட் எஞ்ஜினின் இயக்கம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக சிறியளவு எரிபொருளை எப்போதும் கார் உபயோகிக்கும் வகையில் சிஎன்ஜி கிட்-இல் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆகையால், டர்போசார்ஜட் எஞ்ஜினின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகின்றது.

உத்தரவாதம் பாதிக்கும்... தெரிந்தே புத்தம் புதிய Skoda Kushaq கார் CNG வாகனமாக மாற்றம்... எவ்வளவு செலவானது தெரியுமா?

Skoda Kushaq 1.0 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 178 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த திறன்களை எந்தவொரு மாற்றமும் இன்றி சிஎன்ஜி வாகனமாக மாறியிருக்கும் Skoda Kushaq வெளியேற்றுகின்றது. ஒரு கிலோகிராம் சிஎன்ஜிக்கு இந்த கார் 24 கிமீ முதல் 25 கிமீ வரை மைலேஜ் தருகின்றது.

இது வழக்கமான Skoda Kushaq காரைக் காட்டிலும் அதிக மைலேஜ் ஆகும். இத்துடன் 100 கிமீ பயணிக்க 1 முதல் 2 லிட்டர் வரை எரிபொருளை இது உறிஞ்சுகின்றது. சிஎன்ஜி கிட் நிறுவப்பட்டிருப்பதால் காரின் பூட் பகுதியில் இருக்கும் இட வசதி லேசாக குறைந்திருக்கின்றது. ஆம், சிஎன்ஜி-யை நிரப்பும் உருளை காரின் பூட் பகுதியிலேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

உத்தரவாதம் பாதிக்கும்... தெரிந்தே புத்தம் புதிய Skoda Kushaq கார் CNG வாகனமாக மாற்றம்... எவ்வளவு செலவானது தெரியுமா?

புதிய Skoda Kushaq காரை சிஎன்ஜி வாகனமாக மாற்ற ரூ. 1.25 லட்சம் வரை செலவாகியிருக்கின்றது. கிட் மற்றும் மெக்கானிக் கூலி அனைத்தும் இதில் பொருந்தும். இதுபோன்ற சந்தைக்கு பிறகான எந்திரங்களை பயன்படுத்துவதனால் நிறுவனத்தின் உத்தரவாத்தை நாம் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உத்தரவாதம் பாதிக்கும்... தெரிந்தே புத்தம் புதிய Skoda Kushaq கார் CNG வாகனமாக மாற்றம்... எவ்வளவு செலவானது தெரியுமா?

இந்திய சந்தையில் Hyundai Creta, Kia Seltos, Nissan Kicks and Renault Duster ஆகிய கார்களுக்கு போட்டியாக Skoda Kushaq களமிறக்கப்பட்டுள்ளது. ரூ. 10.49 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து இக்கார் விற்பனைக்குக் கிடைக்கிறது. அதே சமயம், இந்த காரின் உயர் நிலை வேரியண்ட்டின் விலை ரூ. 17.59 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda kushaq gets aftermarket cng kit
Story first published: Saturday, August 21, 2021, 14:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X