குஷாக் கார்களில் அதிகரிக்கும் பிரச்சனைகள்!! மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ஸ்கோடா இந்தியா சிஇஓ!

கவர்ச்சிகரமான தோற்றத்தினாலும், அதிகப்படியாக வசதிகளினாலும் ஸ்கோடா குஷாக் இந்தியர்கள் விரும்பி தேர்வு செய்யக்கூடிய காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக உருவெடுத்துள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படுவதினால், தற்போதைக்கு அதிகளவில் விற்பனையாகும் ஸ்கோடா காராக இது விளங்குகிறது.

குஷாக் கார்களில் அதிகரிக்கும் பிரச்சனைகள்!! மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ஸ்கோடா இந்தியா சிஇஓ!

இருப்பினும் சமீப நாட்களாக சில குஷாக் எஸ்யூவி கார்களில் பிரச்சனைகள் ஏற்படுவதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனைகள், என்ஜின் கட்-ஆஃப், ஆற்றல் இழப்பு மற்றும் எலக்ட்ரானிக் பவர் கண்ட்ரோல் அமைப்பில் எச்சரிக்கை விளக்குகளில் ஏற்படும் பழுதுகளாக உள்ளன.

குஷாக் கார்களில் அதிகரிக்கும் பிரச்சனைகள்!! மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ஸ்கோடா இந்தியா சிஇஓ!

ஆற்றல் இழப்பானது காரின் ஃப்யுல்-இன்ஜெக்‌ஷன், ஆக்ஸலரேட்டர் பெடல், க்ரூஸ் கண்ட்ரோல் அல்லது டிராக்‌ஷன் கண்ட்ரோலில் ஏற்படும் பழுதினால் உண்டாகக்கூடியது. குஷாக் கார்களில் ஏற்படும் இந்த பிரச்சனைகள் அதிகரிக்க துவங்கியிருப்பதால், இதுகுறித்த நடவடிக்கை எடுக்க ஸ்கோடா தயாராகி வருகிறது.

குஷாக் கார்களில் அதிகரிக்கும் பிரச்சனைகள்!! மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ஸ்கோடா இந்தியா சிஇஓ!

இது தொடர்பாக ஸ்கோடா இந்தியா பிராண்டின் இயக்குனர் ஸாக் ஹோலிஸ் கருத்து தெரிவிக்கையில், இனி டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ள குஷாக்கின் புதிய தொகுப்புகளில் அதிக வலுவான எரிபொருள் குழாய் பொருத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார். குஷாக் கார்களின் இந்த ஆற்றல் இழப்பு பிரச்சனைகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள வெவ்வேறு விதமான எரிபொருள் தரத்தினால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

குஷாக் கார்களில் அதிகரிக்கும் பிரச்சனைகள்!! மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ஸ்கோடா இந்தியா சிஇஓ!

இதனால் தான் வலிமைமிக்க எரிபொருள் குழாய்களை இந்த காம்பெக்ட் எஸ்யூவி மாடலில் புதியதாக வழங்க ஸ்கோடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே குஷாக்கை டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு ஸ்கோடா சேவை மையங்களில் இந்த பிரச்சனை இலவசமாக சரிப்பார்க்கப்பட உள்ளது.

குஷாக் கார்களில் அதிகரிக்கும் பிரச்சனைகள்!! மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ஸ்கோடா இந்தியா சிஇஓ!

ஏற்கனவே குஷாக் காரை வாங்கிய வாடிக்கையாளர்களை இந்த பிரச்சனை தொடர்பாக டீலர்ஷிப் அதிகாரிகள் தொடர்பு கொள்ளவுள்ளதாக ஸாக் ஹோலிஸ் டுவிட்டரில் வாடிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். இந்த பிரச்சனைகளுக்காக, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட குஷாக் கார்களை ஸ்கோடா திரும்ப அழைக்குமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

குஷாக் கார்களில் அதிகரிக்கும் பிரச்சனைகள்!! மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ஸ்கோடா இந்தியா சிஇஓ!

உலகில் எந்தவொரு நாட்டிலும் புத்தம் புதிய காரை விற்பனைக்கு கொண்டுவரும்போது அதன் தரத்தின் மீது சில புகார்கள் ஏற்படுவதுண்டு என ஸாக் முன்னதாக தெரிவித்திருந்தார். சில குஷாக் கார்களில் ஏற்படும் இந்த பிரச்சனைகள் அனைத்தும் சிறியவையே. இருப்பினும் இந்த பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வை காணுவதில் ஸ்கோடாவின் இந்திய மற்றும் ஐரோப்பிய தொழிற்நுட்ப குழுக்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

குஷாக் கார்களில் அதிகரிக்கும் பிரச்சனைகள்!! மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ஸ்கோடா இந்தியா சிஇஓ!

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஸ்கோடாவின் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் ஒருபக்கம் குவிந்து வருகின்றன. கடந்த 3 மாதங்களில் மட்டும் குஷாக் கார்களுக்கான முன்பதிவுகள் 10,000 கடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2.5 ஆயிரம் குஷாக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

குஷாக் கார்களில் அதிகரிக்கும் பிரச்சனைகள்!! மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ஸ்கோடா இந்தியா சிஇஓ!

இந்த தேவையை தொடர்ந்து கொண்டு செல்ல, தங்களது வாடிக்கையாளர்களுக்கு காரில் ஏற்படும் பிரச்சனைகளை களையெடுப்பதில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் மிகவும் கவனமாக உள்ளது. இந்த பிரச்சனைகளை கண்டும் கண்டுக்கொள்ளாத மாதிரி இருந்துவிட்டால், குஷாக்கின் எதிர்கால விற்பனை பெரிய அளவில் சரிவை காண நேரிடும்.

குஷாக் கார்களில் அதிகரிக்கும் பிரச்சனைகள்!! மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ஸ்கோடா இந்தியா சிஇஓ!

ஆனால் ஸ்கோடா நிறுவனத்தை பொறுத்தவரையில் இவ்வாறான சூழ்நிலை உருவாக வாய்ப்புகள் குறைவே. ஏனெனில் குஷாக் எஸ்யூவி கார் குறித்து வாடிக்கையாளர்கள் எழுப்பும் கேள்விகள் அனைத்திற்கும் ஸ்கோடா இந்தியா பிராண்டின் சிஇஓ ஸாக் ஹோலிஸ் பதிலளித்து வருகிறார். இணையத்தில் எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய சிஇஓ-களில் இவரும் ஒருவரே.

குஷாக் கார்களில் அதிகரிக்கும் பிரச்சனைகள்!! மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ஸ்கோடா இந்தியா சிஇஓ!

இந்திய ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், ஒரு காரை உருவாக்குவதற்கு தேவையான பாகங்கள் பல்வேறு சப்ளையர்களிடம் இருந்து பெறப்படுகிறது. இதனால் குறித்த நேரத்தில், எதிர்பார்த்த தரத்தில் கார்களை டெலிவிரி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் தயாரிப்பு நிறுவனத்திற்கு இருந்தாலும், சில சமயங்களில் திட்டமிட்டவை அனைத்தும் சரியாக நடந்துவிடாது.

குஷாக் கார்களில் அதிகரிக்கும் பிரச்சனைகள்!! மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ஸ்கோடா இந்தியா சிஇஓ!

முன்னதாக இந்த செப்டம்பர் மாத துவக்கத்தில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி அதன் எர்டிகா, சியாஸ், எஸ்-க்ராஸ், பிரெஸ்ஸா மற்றும் எக்ஸ்எல்6 கார்களின் பெட்ரோல் வேரியண்ட்களை திரும்ப அழைக்கவுள்ளதாக அறிவித்திருந்தது. இந்த பெட்ரோல் கார்களின் மோட்டார் ஜெனரேட்டரில் ஏற்படும் பழுதின் காரணமாக இத்தகைய அறிவிப்பை மாருதி வெளியிட்டு இருந்தது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Kushaq Gets More Robust Fuel Pumps.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X