க்ரெட்டா, செல்டோஸை காட்டிலும் குஷாக்கின் விலை ஏன் அதிகமாக உள்ளது? ஸ்கோடா சிஇஓ-வின் பதில்கள்

ஹூண்டாய் க்ரெட்டா & கியா செல்டோஸ் எஸ்யூவி கார்களை காட்டிலும் ஏன் ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் விலை அதிகமாக உள்ளது என்பதற்கான விளக்கத்தை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் சிஇஓ ஸாக் ஹோலிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அளித்துள்ளார். அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

க்ரெட்டா, செல்டோஸை காட்டிலும் குஷாக்கின் விலை ஏன் அதிகமாக உள்ளது? ஸ்கோடா சிஇஓ-வின் பதில்கள்

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் குஷாக் எஸ்யூவி காரை ஸ்கோடா நிறுவனம் கடந்த ஜூன் 28ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதன் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.10.5 லட்சத்தில் இருந்து ரூ.17.6 லட்சங்கள் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

க்ரெட்டா, செல்டோஸை காட்டிலும் குஷாக்கின் விலை ஏன் அதிகமாக உள்ளது? ஸ்கோடா சிஇஓ-வின் பதில்கள்

இந்த விலைகள் சில வாடிக்கையாளர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனெனில் விற்பனையில் ஜொலித்துவரும் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களின் விலைகள் இதனை காட்டிலும் சிறிது குறைவாகும்.

க்ரெட்டா, செல்டோஸை காட்டிலும் குஷாக்கின் விலை ஏன் அதிகமாக உள்ளது? ஸ்கோடா சிஇஓ-வின் பதில்கள்

இதுகுறித்த சிஇஓ ஸாக் ஹோலிஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில், குஷாக் போன்ற காரை ரூ.10 லட்சத்திற்குள் கொண்டுவருவது கடினமாகும். குஷாக்கிற்கு ஆரம்ப நிலை அல்லது நாக்டு வெர்சன்கள் எதுவும் இல்லை. குஷாக்கின் மூன்று வேரியண்ட்களில் ஆரம்ப நிலை ஆக்டிவ் வேரியண்ட்டிலேயே ஏகப்பட்ட கூடுதல் வசதிகள் வழங்கப்படுகின்றன.

க்ரெட்டா, செல்டோஸை காட்டிலும் குஷாக்கின் விலை ஏன் அதிகமாக உள்ளது? ஸ்கோடா சிஇஓ-வின் பதில்கள்

அதுமட்டுமின்றி போட்டி மாடல்களின் (க்ரெட்டா, செல்டோஸ்) விலை குறைவான வேரியண்ட்களின் எம்பிஐ என்ஜின்களை போல் அல்லாமல், குஷாக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டிற்கே டிஎஸ்ஐ தொழிற்நுட்பத்தை வழங்கியுள்ளோம்.

க்ரெட்டா, செல்டோஸை காட்டிலும் குஷாக்கின் விலை ஏன் அதிகமாக உள்ளது? ஸ்கோடா சிஇஓ-வின் பதில்கள்

ரூ.10 லட்சத்திற்குள் விலையை கொண்டுவர வேண்டுமென்றால் காரில் பல வசதிகளை குறைக்க வேண்டி இருக்கும். இதன் எதிரொலியாக முன்பதிவு செய்து டெலிவிரிக்காக நீண்ட மாதங்களுக்கு வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இது வாடிக்கையாளர்களை முழுமையாக திருப்திப்படுத்தாது என கூறினார்.

க்ரெட்டா, செல்டோஸை காட்டிலும் குஷாக்கின் விலை ஏன் அதிகமாக உள்ளது? ஸ்கோடா சிஇஓ-வின் பதில்கள்

மேலும் பலரது கேள்விகளுக்கு பதிலளித்த அவர், குஷாக்கின் விலைகளை மாற்றுவது குறித்து எந்த திட்டமும் இல்லை. முன்பதிவுகள் எங்களது இலக்கிற்கு இணையாக நடைபெற்று வருகின்றன. இதில் இருந்து குஷாக்கின் பாதுகாப்பு, தரம், வடிவமைப்பு மற்றும் டிஎஸ்ஐ என்ஜின்களை வாடிக்கையாளர்கள் ஏற்று கொண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது என்றார்.

க்ரெட்டா, செல்டோஸை காட்டிலும் குஷாக்கின் விலை ஏன் அதிகமாக உள்ளது? ஸ்கோடா சிஇஓ-வின் பதில்கள்

டாப் வேரியண்ட்டில் காற்றுப்பைகள் குறைவாக உள்ளதாக நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸாக் ஹோலிஸ், தற்சமயம் 1.5 டிஎஸ்ஜி குஷாக் காரில் 2 காற்றுப்பைகள் (ஏர்பேக்) வழங்கப்படுகின்றன. காற்றுப்பைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தற்போதைக்கு வாய்ப்புகள் இல்லை.

க்ரெட்டா, செல்டோஸை காட்டிலும் குஷாக்கின் விலை ஏன் அதிகமாக உள்ளது? ஸ்கோடா சிஇஓ-வின் பதில்கள்

இருப்பினும் உங்களது இந்த கருத்தை ஆலோசிப்போம். இதனால் எதிர்காலத்தில் காற்றுப்பைகள் அதிகரிக்கப்படலாம் என தெரிவித்தார். காற்றுப்பைகள் மட்டுமின்றி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படும் குஷாக்கின் டாப் வேரியண்ட்களில் டயரின் அழுத்தத்தை கண்காணிக்கும் சிஸ்டமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda’s Zac Hollis explains why the Kushaq is costlier than Hyundai Creta & Kia Seltos.
Story first published: Thursday, July 1, 2021, 15:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X