நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியானது... இப்ப சந்தோஷம்தானே!

ஒருவழியாக புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியானது... இப்ப சந்தோஷம்தானே!

இந்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் புதிய கார் மாடல்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மாடல்களில் ஒன்றாக ஸ்கோடா குஷாக் எஸ்யூவி இருந்து வருகிறது. டிசைன், வசதிகளில் மிகச் சிறப்பான மாடலாக இருப்பதால், காம்பேக்ட் எஸ்யூவி வாங்க திட்டமிட்டிருப்போர் மத்தியில் அதிக ஈர்ப்பை இந்த கார் ஏற்படுத்தி உள்ளது.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியானது... இப்ப சந்தோஷம்தானே!

இந்த நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக, இந்த காரின் அறிமுகம் தள்ளிவைக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், ஒருவழியாக இன்று புதிய குஷாக் எஸ்யூவியின் அறிமுக விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியானது... இப்ப சந்தோஷம்தானே!

வரும் ஜூன் 28ந் தேதி புதிய குஷாக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஸாக் ஹொல்லிஸ் உறுதிப்படுத்தி உள்ளார்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியானது... இப்ப சந்தோஷம்தானே!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி இந்தியாவுக்கான பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. உள்நாட்டு உதிரிபாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், விலை மிக சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியானது... இப்ப சந்தோஷம்தானே!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 17 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், சன்ரூஃப், டெயில் லைட்டுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஸ்கிட் பிளேட்டுகள், வலிமையான பம்பர்கள் உள்ளிட்டவற்றுடன் கவர்கிறது.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியானது... இப்ப சந்தோஷம்தானே!

இந்த எஸ்யூவி இதன் ரகத்தில் அதிக வீல்பேஸ் நீளம் கொண்ட மாடலாகவும் இருக்கிறது. இதனால், உட்புற இடவசதியும், பொருட்கள் வைப்பதற்கான இடவசதியும் சிறப்பாக இருக்கும்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியானது... இப்ப சந்தோஷம்தானே!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, தொடு உணர் பட்டன்களுடன் கட்டுப்பாட்டு வசதி, சப் ஊஃபர் மற்றும் 6 ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியானது... இப்ப சந்தோஷம்தானே!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியானது... இப்ப சந்தோஷம்தானே!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படும். இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியானது... இப்ப சந்தோஷம்தானே!

இதன் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகளும் கொடுக்கப்படும்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியானது... இப்ப சந்தோஷம்தானே!

இந்த எஸ்யூவி ரூ.10 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவியின் உற்பத்தி துவங்கிவிட்ட நிலையில், வரும் ஜூலையில் இருந்து டீலர்களில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும். புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவிக்கு கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda #skoda kushaq
English summary
Skoda is all set to launch the much-awaited Kushaq SUV in India on June 28, 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X