கொடைக்கானல் மலைப்பகுதியில் உலாவந்த புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி!! வரும் மார்ச்சில் அறிமுகமாகிறது...

ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கார் அடுத்த மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் உலாவந்த புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி!! வரும் மார்ச்சில் அறிமுகமாகிறது...

ஸ்கோடாவின் இந்திய சந்தைக்கான புதிய எஸ்யூவி மாடலாக குஷாக் கார் வருகிற 2021 மார்ச் மாதத்தில் வெளிவர அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் உலாவந்த புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி!! வரும் மார்ச்சில் அறிமுகமாகிறது...

இதற்கான வேலைகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் வடிவமைப்பில் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் காட்சியளிக்கும் குஷாக் எஸ்யூவி கார் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் உலாவந்த புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி!! வரும் மார்ச்சில் அறிமுகமாகிறது...

இந்த சோதனை ஓட்டம் மலைப்பகுதிகளுக்கு புகழ்பெற்ற கொடைக்கானல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்கள் எக்ஸ்பிரஸ் ட்ரைவ்ஸ் என்ற செய்திதளத்தின் மூலம் நமக்கு கிடைத்துள்ளன.

கொடைக்கானல் மலைப்பகுதியில் உலாவந்த புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி!! வரும் மார்ச்சில் அறிமுகமாகிறது...

ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் என தற்சமயம் பிரபலமாக உள்ள எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக வெளிவரும் குஷாக் ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் கூட்டணியின் எம்க்யுபி-ஏ0-இன் ப்ளாட்ஃபாரத்தில் முழுக்க முழுக்க இந்திய வாடிக்கையாளர்களுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் உலாவந்த புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி!! வரும் மார்ச்சில் அறிமுகமாகிறது...

ஸ்கோடா குஷாக்கின் விலை குறைவான வேரியண்ட்களில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ டிஎஸ்ஐ என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடனும், டாப் வேரியண்ட்களில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர், டர்போ டிஎஸ்ஐ என்ஜின் இரட்டை-க்ளட்ச் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடனும் வழங்கப்படவுள்ளன.

கொடைக்கானல் மலைப்பகுதியில் உலாவந்த புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி!! வரும் மார்ச்சில் அறிமுகமாகிறது...

2,651மிமீ வீல்பேஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள் என விளக்குகள் அனைத்து எல்இடி தரத்திலும், உட்புற கேபினில் பெரிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் டேஷ் (விர்டியுவல் காக்பிட்) என மாடர்ன் தொழிற்நுட்பங்களும் வழங்கப்படவுள்ளன.

கொடைக்கானல் மலைப்பகுதியில் உலாவந்த புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி!! வரும் மார்ச்சில் அறிமுகமாகிறது...

இவற்றுடன் பயணிகளின் பாதுகாப்பிற்கு இரட்டை காற்றுப்பைகள், இஎஸ்சி, டயர்களின் காற்றழுத்ததை அளவிடும் மானிடர், ஹில்-ஹோல்ட் கண்ட்ரோல், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள், தானியங்கி ஹெட்லேம்ப் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் (இவற்றில் சில வசதிகள் டாப் வேரியண்ட்களில் மட்டுமே) போன்றவற்றை பெற்றுவரும் புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.10 -16 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Kushaq spotted in final testing Creta, Seltos rival unveil in March 2021
Story first published: Wednesday, February 17, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X