புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி மான்ட்டி கார்லோ எடிசனில் வருமா?

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் மான்ட்டி கார்லோ எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் மான்ட்டி கார்லோ எடிசனில் வருமா?

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் குஷாக் என்ற எஸ்யூவியுடன் கால் பதிக்க ஆயத்தமாகி வருகிறது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்ட்டோஸ் கார்களுக்கு சிறந்த மாற்றுத் தேர்வாக எதிர்பார்க்கப்படுகிறது.

 புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் மான்ட்டி கார்லோ எடிசனில் வருமா?

மிகவும் நேர்த்தியான டிசைன், செயல்திறன் மிக்க டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள், போதுமான வசதிகளுடன் ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுவதால், இந்த எஸ்யூவி அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

 புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் மான்ட்டி கார்லோ எடிசனில் வருமா?

இந்த நிலையில், ரேபிட் காரில் வழங்கப்படுவது போன்று புதிய குஷாக் எஸ்யூவியிலும் மான்ட்டி கார்லோ எடிசன் வேரியண்ட்டை ஸ்கோடா அறிமுகம் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர் மத்தியில் எழுந்துள்ளது.

 புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் மான்ட்டி கார்லோ எடிசனில் வருமா?

ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படும் ஸ்கோடா கமிக் எஸ்யூவியின் அடிப்படையிலான மாடலாக குஷாக் வருகிறது. ஆனால், இந்தியாவுக்கு தக்கவாறு பரிமாணத்தில் நீள, அகலம் குறைக்கப்பட்டு, உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷன் இந்திய சாலைகளுக்கு தக்கவாறு உயர்த்தப்பட்ட அமைப்பில் இருப்பதால், கமிக் எஸ்யூவியைவிட கூடுதல் உயரம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

 புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் மான்ட்டி கார்லோ எடிசனில் வருமா?

இந்த நிலையில், ஐரோப்பாவில் கமிக் எஸ்யூவியில் மான்ட்டி கார்லோ எடிசன் தேர்வு வழங்கப்படுகிறது. எனவே, இந்தியாவிலும் குஷாக் எஸ்யூவியில் மான்ட்டி கார்லோ எடிசன் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.

 புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் மான்ட்டி கார்லோ எடிசனில் வருமா?

ஸ்கோடா மான்ட்டி கார்லோ எடிசன் வேரியண்ட்டில் விசேஷ வண்ணப்பூச்சு மற்றும் தோற்றத்தில் அதிக வசீகரத்தை தரும் அலங்கார வேலைப்பாடுகளுடன் வழங்கப்படுகிறது. மேலும், இது சாதாரண மாடலின் டாப் வேரியண்ட்டின் அடிப்படையிலான மிகவும் விலை உயர்ந்த வேரியண்ட்டாக கொடுக்கப்படுகிறது.

 புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் மான்ட்டி கார்லோ எடிசனில் வருமா?

உட்புறத்திலும் விசேஷ ஆக்சஸெரீகள் மற்றும் அலங்கார தையல் வேலைப்பாடுகளுடன் கவரும் வகையில் இருக்கும். ஸ்பாய்லர் உள்ளிட்ட ஆக்சஸெரீகளும் மதிப்பை உயர்த்தும் விஷயமாக இருக்கும். ஐரோப்பாவில் விற்பனையில் இருக்கும் கமிக் மான்ட்டி கார்லோ எடிசனில் 18 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், விசேஷமான முன் இருக்கைகள், கருப்பு வண்ண ரியர் வியூ மிரர்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

 புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் மான்ட்டி கார்லோ எடிசனில் வருமா?

இந்த வேரியண்ட் நிச்சயம் சாதாரண வேரியண்ட்டிலிருந்து அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தனித்துவமாக இருக்கும். எனவே, குஷாக் எஸ்யூவியில் மான்ட்டி கார்லோ எடிசன் அறிமுகம் செய்யப்பட்டால், அது தனித்துவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

 புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் மான்ட்டி கார்லோ எடிசனில் வருமா?

எனவே, இந்தியாவிலும் குஷாக் எஸ்யூவியில் மான்ட்டி கார்லோ எடிசன் வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மறுபுறத்தில் கியா செல்டோஸ் காரில் ஜிடி என்ற வேரியண்ட் வரிசைக்கு இது போட்டியாகவும் அமையும். சாதாரண டாப் வேரியண்ட்டைவிட ரூ.50,000 வரை விலை கூடுதலாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Kushaq is expected to Monte Carlo Edition In India.
Story first published: Tuesday, March 23, 2021, 10:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X