1 வாரத்தில் இத்தனை முன்பதிவுகளா? ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு கிலி ஏற்படுத்தும் ஸ்கோடா குஷாக்!

ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காருக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1 வாரத்தில் இத்தனை முன்பதிவுகளா? ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு கிலி ஏற்படுத்தும் ஸ்கோடா குஷாக்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஸ்கோடா குஷாக் எஸ்யூவி, கடந்த ஜூன் 28ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு வார காலத்திற்குள் இந்த புத்தம் புதிய எஸ்யூவி காருக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

1 வாரத்தில் இத்தனை முன்பதிவுகளா? ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு கிலி ஏற்படுத்தும் ஸ்கோடா குஷாக்!

இதன் மூலம் இந்திய சந்தையில் ஸ்கோடா குஷாக் மிக சிறப்பான தொடக்கத்தை சந்தித்துள்ளது. ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கார், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் உள்ளிட்ட கார்களுடன் போட்டியிடும். ஸ்கோடா குஷாக்கின் வருகை, கிரெட்டா மற்றும் செல்டோஸின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

1 வாரத்தில் இத்தனை முன்பதிவுகளா? ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு கிலி ஏற்படுத்தும் ஸ்கோடா குஷாக்!

ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காரில், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கிடைக்கின்றன. இதுதவிர 1.5 லிட்டர் டிஎஸ்ஐ நான்கு-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் ஸ்கோடா குஷாக் எஸ்யூவி பெற்றுள்ளது.

1 வாரத்தில் இத்தனை முன்பதிவுகளா? ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு கிலி ஏற்படுத்தும் ஸ்கோடா குஷாக்!

ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காரின் விலை 10.50 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 17.60 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்படிருப்பது எக்ஸ் ஷோரூம் விலையாகும். MQB-A0-IN பிளாட்பார்ம் அடிப்படையில், ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கட்டமைக்கப்பட்டுள்ளது.

1 வாரத்தில் இத்தனை முன்பதிவுகளா? ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு கிலி ஏற்படுத்தும் ஸ்கோடா குஷாக்!

இந்திய சந்தையை குறிவைத்துதான் குஷாக் எஸ்யூவியை ஸ்கோடா நிறுவனம் களமிறக்கியுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது எஸ்யூவி கார்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்து வருவதுதான் இதற்கு காரணம். ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கார் மொத்தம் 5 வண்ண தேர்வுகளில் கிடைக்கிறது.

1 வாரத்தில் இத்தனை முன்பதிவுகளா? ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு கிலி ஏற்படுத்தும் ஸ்கோடா குஷாக்!

டொராண்டோ ரெட் மெட்டாலிக், கேண்டி ஒயிட், பிர்லியண்ட் சில்வர், கார்பன் ஸ்டீல் மெட்டாலிக் மற்றும் ஹனி ஆரஞ்ச் மெட்டாலிக் ஆகியவைதான் அந்த 5 வண்ண தேர்வுகள் ஆகும். இந்திய சந்தையில் கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா ஆகிய இரண்டு எஸ்யூவி கார்களும் அட்டகாசமான வசதிகளுடன் கிடைக்கின்றன.

1 வாரத்தில் இத்தனை முன்பதிவுகளா? ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு கிலி ஏற்படுத்தும் ஸ்கோடா குஷாக்!

அவற்றுக்கு சற்றும் சளைத்ததில்லை என்ற ரீதியில், ஸ்கோடா குஷாக் எஸ்யூவியிலும் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் ஸ்கோடா குஷாக் எஸ்யூவிக்கு சற்று பின்னடைவாக இருக்கலாம். இருந்தாலும் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் வசதிகளை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஸ்கோடா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

1 வாரத்தில் இத்தனை முன்பதிவுகளா? ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு கிலி ஏற்படுத்தும் ஸ்கோடா குஷாக்!

வெறும் ஒரு வார காலத்திற்குள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை ஸ்கோடா குஷாக் பெற்றுள்ளது தற்போது கவனம் ஈர்த்துள்ளது. விலை சற்று அதிகமாக இருந்தாலும் கூட, அதற்கு ஏற்ப ஒரு பிரீமியமான தயாரிப்பு என்றுதான் ஸ்கோடா குஷாக் எஸ்யூவியை கூற வேண்டும். கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என்பதால், இந்த எஸ்யூவி ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Kushaq SUV Bookings: Over 2,000 Orders Received In A Week. Read in Tamil
Story first published: Tuesday, July 6, 2021, 18:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X