ஸ்கோடா குஷாக் எஸ்யூவியை சிறந்த தேர்வாக முன்னிறுத்தப்போகும் 7 முக்கிய விஷயங்கள்!

ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் ஆகிய மாடல்களுக்கு சிறந்த மாற்றுத் தேர்வை எதிர்பார்ப்பவர்களின் ஆவலை புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கிளறி உள்ளது. விரைவில் சந்தைக்கு வர இருக்கும் இந்த கார் மீதான ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், போட்டியாளர்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக இந்த காரில் இடம்பெற்றிருக்கும் 5 முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 ஸ்கோடா குஷாக் எஸ்யூவியை சிறந்த தேர்வாக முன்னிறுத்தப்போகும் 7முக்கிய விஷயங்கள்!

இந்தியாவுக்கான பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையில் முதல் மாடல்

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் புராஜெக்ட் 2.0 திட்டத்தின் கீழ் இந்தியாவுக்காக உருவாக்கப்படும் கார்களில் முதலாவதாக ஸ்கோடா குஷாக் வர இருக்கிறது. இதே கட்டமைப்பில்தான் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த கார்கள் பெற்றிருக்கின்றன. இதில், அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ள ஸ்கோடா குஷாக் காரின் 5 முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 ஸ்கோடா குஷாக் எஸ்யூவியை சிறந்த தேர்வாக முன்னிறுத்தப்போகும் 7முக்கிய விஷயங்கள்!

டிசைன்

ஸ்கோடா நிறுவனத்தின் பாரம்பரியத்தையும், நவீன டிசைன் நிபுணவத்துத்தையும் பரைசாற்றும் வகையில் மிகச் சிறப்பாக இந்த கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. விஷன் ஐஎன் கான்செப்ட் அடிப்படையில் மிகவும் பிரிமீயமான மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அழகிய க்ரில் அமைப்பு, கச்சிதமான ஹெட்லைட், கவரும் 17 அங்குல அலாய் சக்கரங்கள், டெயில் லைட்டுகள் மற்றும் பாடி லைன்களுடன் பார்த்த உடனே கவர்ந்துவிடும் வகையில் வர இருக்கிறது.

 ஸ்கோடா குஷாக் எஸ்யூவியை சிறந்த தேர்வாக முன்னிறுத்தப்போகும் 7முக்கிய விஷயங்கள்!

பரிமாணம்

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி 4,225 மிமீ நீளமும், 1,760 மிமீ அகலமும், 1,612 மிமீ உயரமும் கொண்டது. இந்த கார் 2,651 மிமீ வீல்பேஸ் நீளத்தை பெற்றிருக்கிறது. இதன் ரகத்தில் சிறந்த வீல்பேஸ் நீளத்தை பெற்றிருப்பதால், அதற்கு தக்கவாறு உட்புற இடவசதியும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, 188 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ், 385 லிட்டர் பூட்ரூம் இடவசதி ஆகியவையும் குறிப்பிடத்தக்க விஷயங்களாக உள்ளன.

 ஸ்கோடா குஷாக் எஸ்யூவியை சிறந்த தேர்வாக முன்னிறுத்தப்போகும் 7முக்கிய விஷயங்கள்!

இன்டீரியர்

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் உட்புறம் மிகவும் நேர்த்தியாகவும், தரமான பாகங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கும். கட்டுப்பாட்டு பட்டன்களை எளிதாக இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கும். சொகுசு மற்றும் வசதிகளிலும் மிகச் சிறப்பான மாடலாகவும் இருக்கும். இந்த காில் 26.2 லிட்டர் கொள்திறன் கொண்ட ஸ்டோரேஜ் அறைகள் உட்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புற இருக்கை மிகச் சிறப்பான சாய்மான வசதியையும், போதுமான ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் இடவசதியையும் அளிக்கும். ஃபிட் அண்ட் ஃபினிஷ் தரத்திலும் கவரும்.

 ஸ்கோடா குஷாக் எஸ்யூவியை சிறந்த தேர்வாக முன்னிறுத்தப்போகும் 7முக்கிய விஷயங்கள்!

முக்கிய வசதிகள்

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். மைஸ்கோடா கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பமும் கொடுக்கப்பட உள்ளது. 6 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், வைஃபை ஹாட்ஸ்பாட் வசதி, கீ லெஸ் என்ட்ரி என ஏராளமான வசதிகளை பெற்றிருக்கும்.

 ஸ்கோடா குஷாக் எஸ்யூவியை சிறந்த தேர்வாக முன்னிறுத்தப்போகும் 7முக்கிய விஷயங்கள்!

எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள்

ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளன. இதில், 110 பிஎச்பி பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 150 பிஎச்பி பவரை வழங்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. இதில், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மற்றும் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் வழங்கப்படும்.

 ஸ்கோடா குஷாக் எஸ்யூவியை சிறந்த தேர்வாக முன்னிறுத்தப்போகும் 7முக்கிய விஷயங்கள்!

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் தொழில்நுட்பம் அனைத்து வேரியண்ட்டுகளிலும் வழங்கப்பட உள்ளது. இந்த காரில் 6 ஏர்பேக்குகள், மல்டி கொலிஷன் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் வியூ கேமரா, பார்க்கிங் சென்சார்கள் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

 ஸ்கோடா குஷாக் எஸ்யூவியை சிறந்த தேர்வாக முன்னிறுத்தப்போகும் 7முக்கிய விஷயங்கள்!

எதிர்பார்க்கும் விலை

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் வெர்னா, கியா செல்டோஸ், ரெனோ டஸ்ட்டர், நிஸான் கிக்ஸ் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda #skoda kushaq
English summary
Here’re the some important things about all new Skoda Kushaq SUV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X