இன்னமும் குஷாக் எஸ்யூவி காரை சாலையில் சோதித்து பார்க்கும் ஸ்கோடா!! மார்ச் 18ல் அறிமுகமாகிறது

இந்திய அறிமுகத்திற்கு முன்னதாக ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கார் தொடர்ந்து சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும் வெளியாகியுள்ள இதன் சோதனை ஓட்ட ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இன்னமும் குஷாக் எஸ்யூவி காரை சாலையில் சோதித்து பார்க்கும் ஸ்கோடா!! மார்ச் 18ல் அறிமுகமாகிறது

விஷன் இன் கான்செப்ட் என்கிற பெயரில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த ஸ்கோடாவின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரின் பெயர் குஷாக் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வருகிற 18ஆம் தேதி இந்த ஸ்கோடா குஷாக் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இன்னமும் குஷாக் எஸ்யூவி காரை சாலையில் சோதித்து பார்க்கும் ஸ்கோடா!! மார்ச் 18ல் அறிமுகமாகிறது

இதற்கு மத்தியில் இந்த ஸ்கோடா எஸ்யூவி கார் கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் பல்வேறு விதமான சாலைகளில் சோதனைகளில் சோதித்து பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும் ஸ்கோடா குஷாக் கார் மாதிரி ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சாலை சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

இன்னமும் குஷாக் எஸ்யூவி காரை சாலையில் சோதித்து பார்க்கும் ஸ்கோடா!! மார்ச் 18ல் அறிமுகமாகிறது

ரஷ்லேன் செய்திதளத்தின் மூலமாக நமக்கு கிடைத்துள்ள இந்த ஸ்பை படங்களில் குஷாக் காரின் வெளிப்புற தோற்றம் பெரும்பான்மையாக ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட விஷன் இன் கான்செப்ட்டை தான் வழக்கம்போல் ஒத்து காணப்படுகிறது.

இன்னமும் குஷாக் எஸ்யூவி காரை சாலையில் சோதித்து பார்க்கும் ஸ்கோடா!! மார்ச் 18ல் அறிமுகமாகிறது

முன்பக்கத்தில் இந்த எஸ்யூவி கார் ஸ்கோடா அடையாளமான பட்டாம்பூச்சி வடிவிலான க்ரில் மற்றும் கூர்மையான வடிவில் பிளவுப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள், இருப்புறங்களில் ஃபாக் விளக்குகள் மற்றும் ஃபாக்ஸ் சில்வர் சறுக்கு தட்டை கொண்ட நன்கு அகலமான பம்பர் உள்ளிட்டவற்றை பெற்றுவரவுள்ளது.

இன்னமும் குஷாக் எஸ்யூவி காரை சாலையில் சோதித்து பார்க்கும் ஸ்கோடா!! மார்ச் 18ல் அறிமுகமாகிறது

பக்கவாட்டில் கூர்மையான க்ரீஸ் லைன்கள் முன்பக்கத்தில் இருந்து பின்பக்கம் வரையில் செல்ல, அலாய் சக்கரங்கள் 17 இன்ச்சில் ட்யுல்-டோன் நிறத்தில் வழங்கப்படவுள்ளன. பொருட்களை கட்டி வைப்பதற்கான தண்டவாளங்களுடன் மேற்கூரை கூபே வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்னமும் குஷாக் எஸ்யூவி காரை சாலையில் சோதித்து பார்க்கும் ஸ்கோடா!! மார்ச் 18ல் அறிமுகமாகிறது

பின்பக்கத்தில் பூமராங் வடிவில் எல்இடி டெயில்லைட்கள், சறுக்கலில் இருந்து பாதுகாக்கும் தட்டு சில்வர் நிறத்தில் கொடுக்கப்படவுள்ளன. இந்திய வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமான புதிய எம்க்யுபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படுகின்ற குஷாக் எஸ்யூவி காரின் உட்புறத்தை தற்போதைய சோதனை ஓட்ட ஸ்பை படங்களில் பார்க்க முடியவில்லை.

இன்னமும் குஷாக் எஸ்யூவி காரை சாலையில் சோதித்து பார்க்கும் ஸ்கோடா!! மார்ச் 18ல் அறிமுகமாகிறது

குஷாக் எஸ்யூவியில் இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. இதில் ஒன்றான 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டிஎஸ்இ டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 109 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க் திறனையும், 1.5 லிட்டர் டிஎஸ்ஐ 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 148 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக வழங்கப்பட உள்ளன.

இன்னமும் குஷாக் எஸ்யூவி காரை சாலையில் சோதித்து பார்க்கும் ஸ்கோடா!! மார்ச் 18ல் அறிமுகமாகிறது

இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படலாம். மார்ச் 18ஆம் தேதி சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த எஸ்யூவி காருக்கு இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் போட்டியாக விளங்கும்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda #skoda kushaq
English summary
Skoda Kushaq SUV Continues Testing Ahead Of Debut This Week.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X