புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வெளியீட்டு தேதி விபரம் இதோ!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வெளியீட்டு தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வெளியீட்டு தேதி விபரம் இதோ!

கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட இரட்டையர்களின் ஆதிக்கத்தில் உள்ள இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் குஷாக் என்ற புத்தம் புதி எஸ்யூவி மாடலுடன் ஒரு கை பார்க்க ஸ்கோடா ஆயத்தமாகி வருகிறது. இதுவரை புரோட்டோடைப் மாடல் மற்றும் உருவரை படங்கள் வெளியிடப்பட்டு இந்த காரை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களையும், வாடிக்கையாளர்களிடமும் ஆவலை ஏற்படுத்தி வருகிறது ஸ்கோடா நிறுவனம்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வெளியீட்டு தேதி விபரம் இதோ!

இந்த சூழலில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த புதிய குஷாக் எஸ்யூவியின் உலக அளவிலான பொது பார்வைக்கான வெளியீட்டு நிகழ்வு வரும் மார்ச் 18ந் தேதி இந்தியாவில் நடைபெற இருக்கிறது.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வெளியீட்டு தேதி விபரம் இதோ!

கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய நேரடி போட்டியாளர்களை எதிர்கொள்ளும் விதத்தில் ஏராளமான சிறப்பம்சங்களை இந்த கார் பெற்றுள்ளது. எல்இடி ஹெட்லைட், எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெறுகின்றன. இந்த காரில் ஸ்கோடா நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க க்ரில் அமைப்பு, வலிமையான வீல் ஆர்ச்சுகள், பெரிய அலாய் சக்கரங்கள், ரூஃப் ரெயில்கள், ரியர் ஸ்பாய்லர் உள்ளிட்டவற்றுடன் வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் என தெரிகிறது.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வெளியீட்டு தேதி விபரம் இதோ!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் உட்புறம் மிகவும் பிரிமீயமாக இருக்கும். சாஃப்ட் டச் எனப்படும் மென்மையான தொடு உணர்வை தரும் பிளாஸ்டிக் பாகங்களுடன் டேஷ்போர்டு உள்ளிட்டவை கவரும் வகையில் இருக்கும்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வெளியீட்டு தேதி விபரம் இதோ!

இந்த காரில் 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, மை ஸ்கோடா என்ற கனெக்டெட் கார் தொழில்நுட்ப வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்டுகள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் என ஏராளமான வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வெளியீட்டு தேதி விபரம் இதோ!

இந்த காரில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். இந்த எஞ்சின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்டெப் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வெளியீட்டு தேதி விபரம் இதோ!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் ஹில் ஹோல்டு கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், ஏர்பேக்குகள் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் வெளியீட்டு தேதி விபரம் இதோ!

ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு சிறந்த மாற்றுத் தேர்வாக இருக்கும் என கருதப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Auto has announced the dates for the world premiere of its upcoming Kushaq SUV. The all-new Skoda Kushaq will be globally unveiled on 18 March 2021. The Skoda Kushaq was first showcased in its concept form at the 2020 Auto Expo, as the Vision IN.
Story first published: Thursday, February 18, 2021, 16:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X